நம் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்

ஓகஸ்ட் 15, 2010 at 6:52 முப 5 பின்னூட்டங்கள்

இந்தியாவின் சுதந்திர தின இந்நாளில் நம் தேசத்தின் விடுதலைக்காக
பாடுபட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் அனைத்து தமிழ்மக்களின்
சார்பில் என்றும் மறவாத நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்திய சுதந்திர போராட்டத்துக்காக பாடுபட்ட அத்தனை நல்ல
உள்ளங்களையும் நினைவு கொள்ளும் இந்த நாளில் பெற்ற சுதந்திரத்தை
சத்தியமான வழியிலும் நேர்மையான வழியிலும் கொண்டு செல்லும்
ஒரு மனிதரைப்பற்றிய சிறப்புப்பதிவு.

மக்களுக்கு அரசாங்கத்தால் கிடைக்கும் பலன்கள் இடைத்தரகர்கள்
யாரும் இல்லாமல் நேரடியாக செல்ல வேண்டும் என்பதில் இவருடைய
முயற்சி தெரிகிறது. ஆங்கிலம் பேசிக்கொண்டு வருபவரிடம் தான்
பேசுவோம் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் ஒரு விவசாயி
கூட மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரடியாக பேசலாம் என்ற
பாதையை வகுத்தவர். லஞ்சம் என்ற ஒன்று தன் மாவட்டத்தில்
எங்குமே காணமல் செய்ய வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக
திகழ்பவர். ஒரு மாவட்டத்தில் நடக்கும் அத்தனை புகார்களையும்
ஆன்லைன் மூலம் உடனுக்குடன் தன் கவனத்துக்கு கொண்டு வர
வேண்டும் என்ற நோக்கில் இணையதளம் மூலம் புகார் செய்யும்
முறையை அறிமுகப்படுத்தி புதுமைக்கு வித்திட்டவர் மட்டும்
அல்லாமல் 1450 புகார்களுக்கு தீர்வும் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட மக்கள் ஆன்லைன் -ல் புகார் அளிக்க
வேண்டிய இணையதள முகவரி : http://namakkalgdp.tn.nic.in/online/
தன் வங்கி சேமிப்பு 7,172 ரூபாய் என்பதை வெட்ட வெளிச்சமாக
அனைவருக்கும் காட்டியவர். விவசாயிகளிடம் சென்று அவர்களிடம்
நேரடியாக பேசி பிரச்சினைகளை தீர்க்க வழி செய்வது இன்னும்
சொல்லிக்கொண்டே போகலாம் இத்தனை புகழுக்கும் சொந்தகாரர்
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சகாயம் அவர்கள், எளிமை,
அன்பு ,பணிவு , கனிவு என்ற மூன்றும் நாம் இவரிடம் இருந்து
கற்றுக்கொள்ள வேண்டியது. இந்த சுதந்திர தின நாளில் சத்தியத்தையும்,
நேர்மையையும், தேசப்பக்தியையும் வாழ்வின் ஆதாரமாக கொண்டு
வாழும் இந்த மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வின்மணியின் சார்பிலும்
நம் அனைத்து நண்பர்களின் சார்பிலும் சல்யூட். நன்றி ஐயா என்றும்
நாங்கள் உங்களோடு வேராக இருந்து உங்களின் அனைத்து
முயற்சிக்கும் பக்கபலமாக இருப்போம்.

வின்மணி சிந்தனை
உண்மைக்காகவும் நியாத்துக்காகவும் போராடும் ஒவ்வொருவரும் கடவுளின் அன்பான குழந்தைகள் தான்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழ்நாட்டில் அதிக அளவு உள்ள மண்ணின் வகை எது ?
2.இந்தியாவில் அனுசக்தி கமிஷன் எப்போது நிறுவப்பட்டது ?
3.கடவுளின் சொந்த நாடு என்று வர்ணிக்கப்படும் மாநிலம் எது ?
4.உலகின் மிகப்பெரிய வளைகுடா எது ?
5.முதன் முதலில் செயற்கைக்கோளை அனுப்பிய நாடு எது ?
6.சென்னையின் மின்சார இரயில் எந்த ஆண்டு வந்தது ?
7.சூரியன் மறையாத நாடு என்று போற்றப்படும் நாடு எது ?
8.இந்தியாவின் மிகப்பெரிய தீவு எது ? 
9.ரோம் நகரம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ? 
10.வேகமாய் வளரும் மரம் எது ?
பதில்கள்:
1.கரிசல் மண்,2.ஆகஸ்ட் 10 ,1948,3.கேரளா,4.மெக்ஸிகோ
வளைகுடா, 5.ரஷ்யா,6.1931 ஆம் ஆண்டு, 7.இங்கிலாந்து,
8.கிரேட் நிக்கோபார், 9.கி.மு.753 10.யூக்லிப்டஸ்

இன்று ஆகஸ்ட் 15 

பெயர் : இந்திய சுதந்திர தினம், 
பிறந்த தேதி : ஆகஸ்ட் 15, 1947
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து
இந்தியா தனி சுதந்திர நாடான நாள். இந்நாளில் நம்
தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்ட அத்தனை
மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. என்றும் உங்களை
நம் தேசம் மறவாது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நம் இணையதளம் மொபைலில் சரியாகத் தெரிகிறதா என்று சோதிக்கலாம் நாம் சேமித்து வைத்து இருக்கும் அரிய பொக்கிஷங்களை உலகறியச் செய்யலாம்.

5 பின்னூட்டங்கள் Add your own

  • 1. இர. ராஜ்குமார்  |  9:08 முப இல் ஓகஸ்ட் 15, 2010

    இப்படிப் பட்ட நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் சிறிதளவு நம்பிக்கையேனும் எஞ்சியுள்ளது.

    மறுமொழி
    • 2. winmani  |  11:43 முப இல் ஓகஸ்ட் 15, 2010

      @ இர. ராஜ்குமார்
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. உமாபதி  |  4:59 பிப இல் ஓகஸ்ட் 15, 2010

    தலை வணங்குகிகிறேன்

    மறுமொழி
  • 4. vasu  |  5:06 முப இல் ஓகஸ்ட் 16, 2010

    இப்படிப்பட்ட செய்திகள்தான் நம்பிக்கைகளை உயிர்ப்போடு வைத்திருக்கிறது…. அவருக்கு தலைவணங்குகிறேன்… இந்த செய்தியை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி…

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2010
தி செ பு விய வெ ஞா
« ஜூலை   செப் »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: