எந்த இணையதளத்தின் தகவல்களையும் காப்பி செய்து நம் கணினியில் சேமிக்கலாம்.

ஓகஸ்ட் 7, 2010 at 6:20 பிப 6 பின்னூட்டங்கள்

காப்பி செய்ய முடியாத இணையதளத்தின் தகவல்களை எந்த
மென்பொருள் துணையும் இல்லாமல் காப்பி செய்து நம் கணினியில்
சேமித்து வைக்கலாம் இதைப்பற்றிய சிறப்புப் பதிவு.

இணைய உலகத்தில் உள்ள பல மில்லியன் இணையதளங்களுக்கு
மத்தியில் சில இணையதளங்களில் தகவல்களை காப்பி செய்வதை
தடுப்பதற்கு ”Right click Disable Copy ”  என்ற Script பயன்படுத்துகின்றனர்.
தங்கள் இணையதளத்தில் இந்த ஸ்கிரிப்டை பயன்படுபவர்களுக்கு
தெரியாத தகவல் ஒன்று இருக்கிறது அநேக பேருக்கு இது
தெரிந்திருக்கலாம். அதாவது இது போன்ற ஸ்கிரிப்ட் -ஐ ஆபாச
இணையதளங்களில் தங்கள் தகவல்களை பாதுகாக்க மட்டும் தான்
பயன்படுத்துகின்றனர். இது போன்ற ஸ்கிரிப்ட் உள்ள
இணையதளங்களை பெரும்பாலான பயர்வால் தடுப்பு மென்பொருள்
அனுமதிப்பதில்லை இதனால் அவர்கள் தளம் பல கணினியில்
தெரிய வாய்ப்பில்லை, சில உலாவிகள் கூட இந்த ஸ்கிரிப்ட்
உள்ள தளங்களில் வைரஸ் இருக்கலாம் என்ற எச்சரிக்கையைக்
காட்டி தளத்தை காட்டாமல் வெளியே வருகிறது. நாம் உருவாக்கும்
வலைப்பக்கத்தில் இதைப் போன்ற ஸ்கிரிப்ட்-டை பயன்படுத்தாமல்
இருப்பது நலம். இது போன்ற காப்பி செய்வதை தடுக்கும் ஸ்கிரிப்ட்
உள்ள தளங்களில் தகவல்களை நம் கணினியில் எப்படி சேமிக்கலாம்
இதற்கு எதாவது மென்பொருள்  இருக்கிறதா என்று கனடாவில்
இருந்து குமாரசாமி என்பவர் கேட்டிருந்தார்.அவருக்காக மட்டுமின்றி
அனைவருக்காகவும் இந்தப் பதில். நண்பருக்கு, இதைப்போன்ற
தளங்களில் இருந்து தகவல்களை சேமிப்பதற்கு எந்த மென்பொருளும்
தேவையில்லை. எந்த இணையதளத்தில் Right click Copy disable
செய்யப்பட்டிருக்கிறதோ அந்த இணையதளத்தை திறந்து வைத்துக்
கொண்டு “ Edit ” மெனுவுக்கு சென்று அங்கு இருக்கும் Select All
என்பதை சொடுக்கவும் அடுத்து மறுபடியும் Edit மெனுவுக்கு சென்று
“Copy “காப்பி என்பதை சொடுக்கவும். இனி மைக்ரோசாப்ட் வேர்ட்
மென்பொருளை இயக்கி அங்கு ” Edit ” சென்று Paste செய்யவும்.
எளிதான முறையில் நம் கணினியில் சேமித்துவைத்துக்கொள்ளலாம்.
இதற்கான Short cut key- இருக்கிறது.. இணையதளத்தை திறந்து
கொண்டு Ctrl + A அழுத்தவும் அடுத்து Ctrl + C அழுத்தவும் அடுத்து
வேர்டு கோப்பினை திறந்து Ctrl + V என்பதைக் கொடுத்தும்
பயன்படுத்தலாம். பல வழிகள் இருந்தாலும் இது ஒரு எளிதான வழி
முறையாக இருக்கும். விரைவில் நேரம் கிடைத்தால் SQL Injection
மூலம் ஒரு தளத்தின் முக்கிய தகவல்களை எப்படி திருடுகின்றனர்
என்றும் ஒரே நிமிடத்தில் நம் தளத்தின் பக்கங்களை வைரஸ் உள்ள
பக்கங்களாக எப்படி மாற்றி அமைக்கின்றனர் என்றும் இதிலிருந்து
நாம் எப்படி தளத்தைப் பாதுகாக்கலாம் என்பதைப் பற்றியும்
வீடியோவுடன் ஒரு பதிவு இடலாம் என்று  இருக்கிறோம்.

வின்மணி சிந்தனை
எல்லோரிடமும் மரியாதையை எதிர்பார்க்காதீர்கள் ஏனென்றால்
எல்லோரும் கடவுள் தான். மரியாதை கொடுத்தால் அதை
உதாசீனப்படுத்தாதீர்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் மிக நீளமான ஆறு எது ?
2.மனிதன் உபயோகித்த முதல் உலோகம் எது ?
3.இந்தியாவில் மணியார்டர்சேவை எப்போது தொடங்கப்பட்டது?
4.ஐ.நா.பொதுச்செயலாளரின் பதிவி எத்தனை ஆண்டுகள்?
5.ஜெர்மனி நாட்டின் தேசியப்பூ ?
6.விமானத்தின் வேகத்தை அளக்கப்பயன்படுத்தப்படும் கருவி எது?
7.’கண்ட்லா துறைமுகம்’ எங்கு உள்ளது ?
8.இங்கிலாந்து நாட்டின் தேசியப்பூ எது ?
9.காமராசரின் அரசியல் குரு யார் ?
10.காந்திஜி எத்தனை நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்?
பதில்கள்:
1.பிரம்மபுத்திரா, 2.செம்பு,3.1880 ஆம் ஆண்டு
4.4 ஆண்டுகள், 5.சோளப்பூ,6.ரபி மீட்டர்,7.குஜராத்,
8.ரோஜா,9.சத்தியமூர்த்தி,10.2,338 நாட்கள்.
இன்று ஆகஸ்ட் 7   இரவீந்திரநாத் தாகூர்
பெயர் : இரவீந்திரநாத் தாகூர்,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 7, 1941
புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார்.
இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன
பாடலை இயற்றியவர். இவர் மக்களால் அன்பாக
குருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய
மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின்
தேசிய கீதமாக உள்ளது. கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக
இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார்

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கூகுள் காட்டும் எல்லாப் புத்தகங்களையும் படிக்க புதிய மென்பொருள் பிடிஎப் கோப்பில் முக்கியமானவற்றை ஆன்லைன் மூலம் எடிட் செய்து கொள்ளலாம்.

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. தணிகாசலம்  |  2:38 முப இல் ஓகஸ்ட் 9, 2010

    திரு வின்மணி, என்னுடைய செல்லில் காலெண்டரில் சில குறிப்புகளை வைத்திருந்தேன். அவை நாள்வாரியாக எனக்கு நினைவூட்டும் தகவல்கள்.நண்பர் ஒருவர் தவறுதலாக அவற்றை டிலிட் செய்துவிட்டார்.அவை எனக்கு மிக முக்கியமான தகவல்கள். அன்றிலிருந்து இன்னும் நான் செல்லை off செய்யவில்லை. அவற்றை மீண்டும் பெறுவதற்கு ஏதும் வழி உள்ளதா? அன்புடன், தணிகாசலம்.K

    மறுமொழி
    • 2. winmani  |  3:35 முப இல் ஓகஸ்ட் 9, 2010

      @ தணிகாசலம்
      நண்பருக்கு , உங்கள் அலைபேசியின் மாடலையும் , அலைபேசியுடன் வரும் காலண்டர் அப்ளிகேசனைப் பயன்படுத்தினிர்களா அல்லது இணையத்த்தில் எங்காவது தரவிரக்கிப் பயன்படுத்தினிர்களா ?
      நன்றி

      மறுமொழி
  • 3. தணிகாசலம்  |  1:21 பிப இல் ஓகஸ்ட் 9, 2010

    நண்பர் வின்மணிக்கு, எனது அலைபேசி NOKIA 6300. அலைபேசியிலுள்ள காலண்டர் அப்ளிகேசனைத்தான் பயன்படுத்தினேன். காலண்டரில் make a note பயன்படுத்தி meeting, birthday,memo, reminder போன்றவற்றில் எனக்கு நினைவூட்ட alarm குறிப்புகள் வைத்திருந்தேன். எல்லாமே அழிந்து விட்டன. எல்லாமே காலண்டரில் உள்ள தேதிப்படி இருந்தது. மேலும் தகவல் தேவைப்பட்டால் உங்கள் பதிவைப் பார்த்தபின் தருகிறேன். மிக்க நன்றி.

    மறுமொழி
    • 4. winmani  |  6:07 பிப இல் ஓகஸ்ட் 9, 2010

      @ தணிகாசலம்
      உங்கள் இமெயிலுக்கு பதில் அனுப்பியாச்சு பாருங்கள் , சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.
      நன்றி

      மறுமொழி
  • 5. sankarlal55  |  10:42 முப இல் ஒக்ரோபர் 9, 2010

    Rabindranath Tagore born on 7 May 1861 and died on 7 August 1941.
    Please correct the information as it says 7 August 1941 is his date of birth.
    Your blog was very useful and keep continuing your knowledge as I am addicted to it.
    Sankarlal

    மறுமொழி
    • 6. winmani  |  10:59 முப இல் ஒக்ரோபர் 9, 2010

      @ sankarlal55
      நண்பருக்கு திருத்தியாச்சு ,
      மிக்க நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2010
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: