ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க

ஜூலை 24, 2010 at 8:44 பிப 14 பின்னூட்டங்கள்

இணையதளத்தில் கூகுளில் எதை தேடினாலும் சில சமயங்களில் பல
ஆபாச இணையதளங்களை கொடுக்கிறது இந்த ஆபாச இணையதளங்கள்
நம் கணினியில் தெரியாமல் இருக்கவும் இதிலிருந்து நம் குழந்தைகளை
பாதுக்காகவும் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகன் கணினியில் புகுந்து
விளையாடுகிறான் என்று சொல்லும் பெற்றோர்கள் முதலில் புரிந்து
கொள்ள வேண்டியது உங்கள் குழ்ந்தைகளின் அறிவை மட்டும்
வளர்க்க கூடிய இடம் இணையதளம் அல்ல, அவர்களின்
எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யும் ஒரு இடம் தான் இணையதளம்.
இணையதளத்தில் உங்கள் குழந்தை செய்யும் அனைத்தையும்
நேரடியாக பாருங்கள் அப்போது தான் உங்களுக்கு சில உண்மை
புரியும் உங்கள் குழந்தை கூகுளில் சென்று ஏதாவது பாடம்
அல்லது விளையாட்டு சம்பந்தமாக தேடினாலும் வரும் முடிவில்
சில ஆபாச இணையதளங்களும் இருக்கும் இது தான் நிதர்சனமான
உண்மை. இதிலிருந்து உங்கள் கணினியை மட்டுமல்ல நம்
குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் தான் நாம்
இப்போது இருக்கிறோம்.

எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் எளிதாக நாமாகவே
ஆபாசதளங்களை நம் கணினியில் வராமல் தடை செய்யலாம்
இதை எப்படி உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றிய
விடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம். கண்டிப்பாக
இந்தப் பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாகவும்
பாதுகாப்பாகவும் இருக்கும்.

வின்மணி சிந்தனை
உங்களை திட்டியவருக்காக ஒரு நிமிடம் மனதால் மன்னிப்பு
அளியுங்கள், அவர்களின் அறியாமை விரைவில் அகலும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எந்த நம்பரைக் குறிக்கும் எழுத்து ரோமானிய மொழியில்
 இல்லை ?
2.இந்தியாவுக்குள் ஊடுருவிய முதல் ஐரோப்பியர் யார் ? 
3.இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற அன்னிபெசண்ட
 அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ? 
4.கோடைகாலத்தில் கானல் நீர் தோன்ற காரணம் என்ன ?
5.பைரோ மீட்டர் என்ற கருவி எதற்க்குப் பயன்படுகிறது ?
6.படகு ஒட்டம் எந்த மாநிலத்தின் பண்டிகை விளையாட்டு ? 
7.இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தியவர் யார்?
8.மனித உடலில் எவ்வளவு நரம்புகள் உள்ளன ?
9.உலகிலேயே ஒரே ஒரு இந்துமத நாடு எது ?
10.தமிழ்நாட்டில் குழந்தைகள் கவிஞர் என அழைக்கப்பட்டவர்
 யார் ? 
பதில்கள்:
1.பூஜ்யம், 2.அலெக்ஸாண்டர்,3.அயர்லாந்து,
4.ஒளி பிரதிபலிப்பு,5.உயர் வெப்ப நிலையை அளக்க,
6.கேரளா,7.பெண்டிங் பிரபு,8.72 ஆயிரம் நரம்புகள்,
9.நேபாளம்,10.அழ.வள்ளியப்பா
இன்று ஜூலை 23  
பெயர் : பெ. வரதராஜுலு நாயுடு,
மறைந்ததேதி : ஜூலை 23, 1957
இந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலைப்
போராட்ட வீரரும் ஆவார். மருத்துவரும், 
பத்திரிக்கையாளருமான இவர் சென்னை
மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: , .

நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை போன் மூலம் இலவசமாக கூறலாம். சமையலறையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபேட் சிறப்பு வீடியோ

14 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Elamurugan  |  12:06 முப இல் ஜூலை 25, 2010

    கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
    அருமையான தகவலுக்கு நன்றி

    இளமுருகன்
    நைஜீரியா

    மறுமொழி
  • 2. மஞ்சூர் ராசா  |  7:39 முப இல் ஜூலை 25, 2010

    பயனுள்ள பதிவு.
    நன்றி.

    மறுமொழி
    • 3. winmani  |  10:18 முப இல் ஜூலை 25, 2010

      @ மஞ்சூர் ராசா
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 4. s.n.ganapathi  |  7:41 முப இல் ஜூலை 25, 2010

    அன்புடன் வணக்கம்
    கோடி நன்றிகள்

    மறுமொழி
  • 6. asfersfm  |  11:39 முப இல் ஜூலை 25, 2010

    i tried in windows 07. not working.. i gave these two ip 208.67.222.123
    208.67.220.123

    மறுமொழி
  • 7. தணிகாசலம்  |  12:03 பிப இல் ஜூலை 25, 2010

    ஆஹா! வின்மணி, உங்களின் இன்றைய சிந்தனை கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டிய ஒன்று. இறைவன் உங்களுக்கு அளப்பரிய சிந்தனை ஆற்றலை வழங்கவும் நீங்கள் இன்னும் ஈடுஇணையற்ற சிந்தனைகளை வெளியிடவும் அருள வேண்டும்.

    மறுமொழி
    • 8. winmani  |  8:18 பிப இல் ஜூலை 25, 2010

      @ தணிகாசலம்
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 9. mohamed  |  3:27 பிப இல் ஜூலை 25, 2010

    superb it cant display adult website ..

    but it allow tamil adult website.. plz rectify it

    மறுமொழி
  • 10. அன்ஸார்  |  6:15 முப இல் ஜூலை 26, 2010

    விலை மதிப்பற்ற இத்தகவலை தந்தமைக்கு இறைவன் உங்களுக்கு நல்லறுள் புரிய இரைஞ்சுகிறேன். அதனோடு அந்த வீடியோவை எந்த லிங்கில் பார்க்க வேண்டும் என வழமையாக லிங்கையும் சேர்த்து தரும் நீங்கள் இதற்கு லிங்க் தர வில்லையே! அந்த வீடியோவை எங்கு பார்க்கலாம்?
    நன்றி

    மறுமொழி
  • 12. selvam  |  7:48 முப இல் ஒக்ரோபர் 13, 2010

    useful links. i like it

    மறுமொழி
    • 13. winmani  |  1:20 பிப இல் ஒக்ரோபர் 13, 2010

      @ selvam
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 14. G.Ravi  |  10:05 பிப இல் ஜனவரி 17, 2012

    பயனுள்ள தகவல். நல்லதொரு சமூகப்பணி. நன்றி. வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    கோவி.ரவி, ஆசிரியர், கரூர்.

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2010
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...