Archive for மார்ச், 2010
கலைத்திறன் மிக்க அனைத்து ஆல்பமும் ஒரே இடத்தில் எளிதாக தேடலாம்
ஆர்ட் ஆல்பம் கூகுளில் தேடுவது எளிதான காரியம் இல்லை
பல தரப்பட்ட தரமான அனைத்து ஆர்ட் ஆல்பமும் ஒரே இடத்தில்
அதுவும் அதிக நேரம் செலவிடாமல் சில நிமிடங்களிலே எளிதாக
பெறலாம். அமேசான் துனையுடன் தான் இந்த இணையதளம்
அனைத்து ஆல்பத்தையும் நாம் தேடியவுடன் எடுத்து கொடுக்கிறது
இதைப்பற்றி தான் இந்த பதிவு.
ஆர்ட் ஆல்பம் சில நேரங்களில் பல இலட்சம் ரூபாய் வரை பணத்தை
அள்ளி இருக்கிறது என்னதான் கிராபிக்ஸ் வசதி கொண்ட பல
இணையதளங்கள் இருந்தாலும் இன்னும் அதிகமான பேர் இந்த
தளத்தை தான் விரும்புகின்றனர் இதற்காக பிரேத்யேகமாக அமேசான்
துனையுடன் உருவாக்கப்பட்டது தான் இந்த இணையதளம். இந்த
இணையதளத்தில் சென்று நாம் விரும்பும் ஆல்பத்தின் பேரை
கொடுத்து தேடலாம் உடனடியாக நமக்கு தேடி முடிவுகளை
கொடுக்கிறது அதுவும் சில நிமிடங்களில், இந்த இணையதளத்தில்
எந்த விளம்பரமும் இல்லை. ஆர்ட் ஆல்பம் என்றவுடன் இதில்
எல்லாமே ஆங்கில ஆல்பம் தான் என்று நினைக்க வேண்டாம் இந்த
இணையதளத்தில் சென்று Tamil என்று தேடினோம் நம் இசைஞானி
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என்று ஒரு பெரிய பட்டியலே
கொடுத்த்து. நாம் இதில் இருக்கும் ஆர்ட் ஆல்பத்தை பேஸ்புக்-ல்
இருக்கும் நம் நண்பருடனும் எளிதாக பகிர்ந்து கொள்ளலாம்.
ஆர்ட் ஆல்பம் பற்றி அனைத்து விபரங்களையும் தேடும்
நண்பர்களுக்கு கண்டிப்பாக இந்த தளம் உதவும்.
இணையதள முகவரி : http://www.album-art-search.com
வின்மணி இன்றைய சிந்தனை அத்தியாவசிய உணவுப் பொருளின் விலையை கூட்டாமல் ஆடம்பர பொருளின் விலையை கூட்டினால் அந்த நாட்டில் வறுமை என்றுமே இருக்காது.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP - Functions and Filters <?php $int = 567; if(!filter_var($int, FILTER_VALIDATE_INT)) { echo("Integer is not valid"); } else { echo("Integer is valid");} ?>
இன்று மார்ச் 22உலக நீர் நாள் ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்தின் படி ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் உலகநீர்நாள் கொண்டாடப்படுகிறது. நோயற்ற வாழ்விற்கு நீர் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து அனைத்து நாடுகளும் இந்த நாளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.
கூகுள் பஸ் -ல் வாயால் பேசி தகவல் அனுப்பும் விநோதம்
கூகுளின் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சி தான் நாம்
இன்று நாம் பயன்படுத்தும் கூகுள் பஸ், இனி இந்த கூகுள்
பஸ்-ல் தகவல்களை அனுப்ப நாம் தட்டச்சு (டைப்)செய்ய
வேண்டாம். நாம் வாயால் பேசி கூகுள் பஸ்-ல் செய்தி
அனுப்பலாம் இதைப்பற்றி தான் இந்த பதிவு.
சமீபத்தில் தான் கூகுள் வாய்ஸ் தேடுதல் சோதனை ஒட்டம்
வெற்றிகரமாக செட்யல்பட்டது அடுத்து உடனடியாக கூகுள்
பஸ்-ல் தகவலை போஸ்ட் செய்யவும் நாம் வாயல் கூறினால்
அது செய்தியாக மாற்றம் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது
எப்படி கூகுள் பஸ்-ல் தகவல் பேசி அனுப்பப்படுகிறது என்று
பார்ப்போம்.
post buzz [ அனுப்ப வேண்டிய செய்தி ]
போஸ்ட் பஸ் என்று கூறி நாம் பகிர்ந்துகொள்ள வேண்டிய
தகவலை சொல்லலாம். இதன் சோதனை வெற்றி பெற்றதும்
உடனடியாக இதை கூகுளின் நெக்சஸ் போனில் சேர்த்துவிட்டனர்.
விரைவில் இந்த சேவை நம் ஜீமெயில் மூலம் தற்போது பயன்படுத்தி
வரும் கூகுள் பஸ்-லும் பயன்படுத்தலாம். இனி கூகுள் பஸ்-ல்
செய்தி கையால் மட்டுமல்ல வாயால் பேசியும் அனுப்பலாம்.
வின்மணி இன்றைய சிந்தனை உண்மையான வழக்கறிஞர் பணத்தை விட நியாயத்துக்காக வாதாடினால் கண்டிப்பாக அவர் அந்த நாட்டின் தூண்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP Zip File Functions zip_entry_open() Opens an entry in the ZIP file for reading zip_entry_read() Reads from an open entry in the ZIP file zip_open() Opens a ZIP file zip_read() Reads the next entry in a ZIP file
இன்று மார்ச் 21பெயர் : ஜோசப் போரியர் , பிறந்த தேதி : மார்ச் 21, 1768 ஒரு புகழ்பெற்ற பிரெஞ்ச் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் ஆவார்.இவர் இயற்பியலில் வெப்பவியலில் செய்த ஆய்வுகளுக்காகவும், கணிதவியலில் போரியர் தொடர் என்னும் கருத்துக்காகவும் புகழ்பெற்றவர்.
யூடியுப்-ல் IPL கிரிக்கெட் ஆட்டம் வர்ணனையுடன் நேரடி ஒளிபரப்பு
ஐபிஎல் 20 ஒவர் கிரிக்கெட் போட்டியின் அதிவேகவளர்ச்சியால்
தான் இன்று இந்த போட்டி யூடியுப்வரை நேரடியாக சென்றுள்ளது
என்றால் அது மிகையாகாது. வழக்கமான கிரிக்கெட் போட்டிபோல்
இல்லாமல் ஒவ்வொரு பந்திலும் அனல் பறக்கும் அளவிற்கு இந்த
ஆட்டத்தின் முக்கியத்துவம்,குறைவான நேரம் , பிடித்த வீரர்கள்
கலந்து ஒரு மாநிலத்திற்காக ஆடும் கலக்கல் என அனைத்துமே
மக்களை ஈர்த்துள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த IPL கிரிக்கெட்
ஆட்டம் நேரடியாக யூடியூப்-ல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது இதைப்
பற்றித்தான் இந்த பதிவு.
DLF IPL 2010 இந்த ஆண்டு நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட்
ஆட்டம் மார்ச் 12 முதல் ஏப்ரல் 25 வரை நடக்கும் 60 போட்டிகளின்
அனைத்து ஆட்டமும் நேரடியாக யூடியுப்-ல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அதோடு இதுவரை நடந்த அனைத்துபோட்டிகளும் இங்கு உள்ளது
எந்த போட்டியையும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
இதைத்தவிர ஆட்டத்தின் ஹைலைட் காட்சிகளையும் நேரடியாக
பார்க்கலாம்.எந்த லோகோவும் இல்லாமல் நேரடியாக கிரிக்கெட்
ஆட்டத்தை கண்டு ரசிக்கலாம்.இதில் இருக்கும் கூகுள் பஸ், பேஸ்புக்,
டிவிட்டர் போன்றவற்றில் இணைந்து ஆட்டத்தின் உடனடி தகவல்களை
தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி : http://www.youtube.com/ipl
வின்மணி இன்றைய சிந்தனை தனக்கு எதிராக போட்டியிட்டு வென்றபின் ஒருவர் தோல்விஅடைந்தவன் கூறும் சிறந்த கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் அவர் தான் சிறந்த தலைவர்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP Upload-File Form Script <form action="upload_file.php" method="post" enctype="multipart/form-data"> <label for="file">Filename:</label> <input type="file" name="file" id="file" /> <br /> <input type="submit" name="submit" value="Submit" /> </form>
இன்று மார்ச் 20பெயர் : ஹென்ரிக் இப்சன் , பிறந்த தேதி : மார்ச் 20, 1828 நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர். நார்வேயைச் சேர்ந்த இவர் நாடகாசிரியரும்,கவிஞரும் ஆவார்.ஐரோப்பிய நாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர்.இவரது பொம்மைவீடு நாடகம் உலகப் புகழ் பெற்றது.
ஒய்வாக இருக்கும் தேதியை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள புதுமை.
நாம் பல நேரங்களில் வேலைப்பளுவுடன் இருப்போம் அந்த நேரத்தில்
வரும் நம் நண்பர்களிடம் சரியாக கூட பேச முடியாமல் இருப்பது
உண்டு என்ன தான் போன் வசதி இருந்தாலும் நாம் எப்போது எந்த
நாள் ஒய்வாக இருப்போம் என்பதை நம் நண்பர்களுக்கு ஆன்லைன்
மூலம் அறிவிக்கலாம் இதைப்பற்றி தான் இந்த பதிவு.
வீட்டுவாசல் மற்றும் அலுவலகம் இதில் மேலதிகாரியின் அறையின்
முகப்பில் தான் உள்ளே – வெளியே என்று ஒரு பலகை தொங்கு
வதை பார்த்திருக்கிறோம் இதுவும் அப்படி தான் ஆனால் பலகைக்கு
பதில் ஆன்லை-ன் மூலம் எந்த நாள் எந்த நண்பரிடம் பேசப்
போகிறோம் என்பதை ஒரு சார்ட் தயார் செய்து நம் நண்பர்களிடம்
பகிர்ந்து கொள்ளலாம் அதிகப்படியான மக்கள் உள்ள சோசியல்
நெட்வோர்க்கான பேஸ்புக் மற்றும் நம் பிளாக்களில் கூட நாம் இந்த
தகவலை பகிர்ந்து கொள்ளலாம்.இந்த இணையதளத்திற்கு சென்று
நீங்கள் எந்த பயனாளர் கணக்கும் உருவாக்க தேவையில்லை சில
நொடிகளில் நாம் நமக்கு தேவையான தேதிகளை கொடுத்து அன்று
எந்த நண்பரிடம் பேசப்போகிறோம் என்பதையும் “ Free / Busy ”
என்று குறித்து வைத்துக் கொள்ளலாம். சரியான தேதியை நாம்
நண்பரிடம் சொல்வதால் நம் நேரமும் நண்பர்களின் நேரமும்
பயனுள்ளதாக இருக்கும்.காலம் வேகமாகப்போகிறது நாமும் அதற்கு
தகுந்தாற்போல் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா அதற்காகத்தான்.
இணையதள முகவரி : http://www.meetifyr.com
வின்மணி இன்றைய சிந்தனை உயர்ந்த பதிவியில் இருக்கும் ஒருவருக்கு தலைக்குமேல் வேலை இருக்கும் சமயத்திலும், தனக்கு கீழ் வேலைபார்க்கும் நபர்கள் அல்லது பொதுமக்கள் வந்து கேட்கும் சந்தேகங்களுக்கு மலர்ந்த முகத்துடன் பதில் அளிக்கும் அதிகாரிதான் சிறந்த மனிதர்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP Math Functions sin() Returns the sine of a number cos() Returns the cosine of a number tan() Returns the tangent of an angle round() Rounds a number to the nearest integer
இன்று மார்ச் 19பெயர் : ஆர்தர் சி.கிளார்க் , மறைந்த தேதி : மார்ச் 19, 2008 பிரிட்டனின் அறிவியல் புதின எழுத்தாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஏறத்தாழ 100 புத்தகங்களுக்கு ஆசிரியரான இவர் அறிவியல் பூர்வமான ஆதாரத்தையும் கோட்பாட்டையுமே தமது எழுத்துத்துறைக்கு அதிகளவுக்கு பயன்படுத்தினார். நம் உலகத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் மனிதரின் தலைவிதி பரந்துள்ளது என்ற கருத்தை வலுவாக முன்னிறுத்தினார்.
ஈபே அமேசான் எந்த இணையதளத்தில் விலை குறைவு ஒரே நிமிடத்தில்
பொருள்களை வாங்க விற்க உதவும் இரண்டு நிறுவனங்கள்
ஈபே மற்றும் அமேசான் இந்த இரண்டு நிறுவனத்திலும் ஒரு
பொருளின் விலை எந்த நிறுவனத்தில் குறைவு என்று சில
நிமிடங்களில் ஒப்பிட்டு பார்த்து வாங்கலாம். இதைப்பற்றி
தான் இந்த பதிவு.
உதாரணமாக ஒரு டெல் மடிக்கணினியை வாங்க வேண்டு
மென்றால் உடனடியாக நாம் செய்வது ஈபே மற்றும்
அமேசான் என்ற இரண்டு இணையதளங்களுக்கு சென்று
விலையை ஓப்பிட்டுப்பார்த்து எதில் விலை குறைவு பயன்
எதில் அதிகம் என்று ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சி செய்து
தான் கண்டுபிடிப்போம்.ஆனால் இந்த ஆராய்ச்சி எதும்
செய்யாமல் உடனடியாக நாம் இந்த இணையதளத்திற்கு
சென்று ஈபே மற்றும் அமேசான் விலைகளை சரிபார்க்கலாம்.
இணையதள முகவரி : http://www.q-compare.com
இந்த இணையதளத்திற்கு சென்று எந்த நாடு என்பதை நாம்
தேர்வு செய்தும் எந்த வகையில் பொருட்கள் தேடவேண்டும்
என்பதையும் தேடும் வார்த்தையும் கொடுக்கவேண்டும்
உடனடியாக நமக்கு தேடுதல் முடிவு காட்டப்படும் அதை
தேர்வு செய்தால் நாம் தேடிய பொருளை ஈபே-ல் வாங்கினால்
என்ன விலை என்பதையும் அதே பொருளை அமேசானில்
வாங்கினால் என்ன விலை என்பதையும் தெளிவாக இரண்டாக
பட்டியலிட்டு காட்டுகின்றனர். உதாரணமாக நாம் அவதார்
திரைப்படத்தை கொடுத்து தேடினோம். அமேசானில் தான்
விலை குறைவு படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது.
உடன் கொடுத்திருக்கும் முகவரியை தேர்வு செய்து நேரடியாக
அமேசானோ அல்லது ஈபேயோ எந்த இணையதளத்தில்
வேண்டுமானாலும் நுழையலாம்.
வின்மணி இன்றைய சிந்தனை சாதியும் மதமும் பார்க்காமல் , வறுமையும் திறமையையும் பார்த்து அரசு வேலை கொடுக்கும் என்றால் அதுதான் சிறந்த நாடு.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP Misc Functions time_sleep_until() Delays code execution until a specified time uniqid() Generates a unique ID unpack() Unpacks data from a binary string usleep() Delays code execution for a number of microseconds
இன்று மார்ச் 181922 ஆம் ஆண்டு மார்ச் 18-ம் நாள் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார். [ஒத்துழையாமை இயக்கம் என்பது இந்தியாவில் ஆட்சியிலிருந்த பிரிட்டன் அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமாகும்]
கல்லூரி மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்யும் நண்பர்களுக்கும் உதவும் தகவல் சுரங்கம்
கல்லூரி மாணவர்கள் முதல் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள்
வரை அனைவருக்கும் உடனடியாக உதவி செய்ய ஒரு இணையதளம்
வந்துள்ளது. எண்ணற்ற தகவல்கள் அனைத்தும் பொக்கிஷம் தான்
என்று சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு சிறிய பிராஜெக்ட் முதல்
பெரிய பிராஜெக்ட் வரை அனைத்தும் எங்கும் சென்று தேட வேண்டாம்
உடனடியாக கிடைக்கிறது.
தேடுதலில் கூகிள் ஒரு பெரிய கடல் தான். ஆனால் சில நேரங்களில்
இந்த கடலில் சென்று முத்தெடுக்க கூட நம்மால் முடியவில்லை.
தகவல் கிடைப்பதற்கு முன் சில குப்பைகள் தான் முதலில்
தோன்றுகிறது.பொறியியல் துறையில் படிக்கும் மாணவர்கள் சில
ஆராய்ச்சி பிராஜெக்ட் செய்ய அடிக்கடி கூகுளில் சென்று தேடிக்
கொண்டிருக்கின்றனர். பல நேரங்களில் நாம் தேடுவதை கூகுள்
கொடுக்கிறது சில நேரங்களில் நாம் தேடும் பிராஜெக்ட் பற்றிய எந்த
தகவலும் கிடைப்பதில்லை அல்லது பொருந்தாத தகவல் கிடைக்கிறது
இப்படி நாம் தேடும் தகவல் கூகுளில் இல்லாதபட்சத்தில் இந்த
இணையதளத்திற்கு சென்று தேடலாம். உடனடியாக ஆராய்ச்சி
பிராஜெக்ட் மற்றும் தகவல்களை மிகச்சரியாக கொடுக்கிறது.
விவசாயத்திலிருந்து பொறியியல் துறையில் படிக்கும் மாணவர்கள்
வரை அனைவருக்கும் தேவையான பிராஜெக்ட் தனித்தனி வகையாக
பிரித்து வைக்கப்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன் நண்பர்கள் பல
பேர் ஆராய்ச்சி செய்யவதாகவும் போதுமான அளவு தகவல்களை
பெற ஏதாவது இணையதளம் உள்ளதா என்று கேட்டிருந்தீர்கள்
கண்டிப்பாக இந்த இணையதளம் உங்களுக்கு உதவும்.
இணையதள முகவரி : http://www.intute.ac.uk
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP Misc Functions connection_aborted() Checks whether the client has disconnected connection_status() Returns the current connection status constant() Returns the value of a constant define() Defines a constant defined() Checks whether a constant exists
இன்று மார்ச் 171996 ஆம் ஆண்டு மார்ச் 17 நாள் இலங்கை அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் இலங்கை 7 இலக்குகளால் ஆஸ்திரேலியாவை வென்றது. 124 பந்துகளுக்கு முகம் கொடுத்து 107 ஓட்டங்களை இலங்கை அணிக்குப் பெற்றுக் கொடுத்த அரவிந்த டி சில்வா ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.
கூகுள் பஸ் தகவல்களை இனி எளிதாக தேடலாம் – கூகுள் கணக்கு தேவையில்லை
கூகுள் நிறுவனத்தின் அடுத்த மைல்கல்லாக வந்திருக்கும்
கூகுள் பஸ் -ன் தகவல்களை இனி எந்த கூகுள் கணக்கும்
இல்லாமல் உடனுக்குடன் பார்க்கலாம்.இதைப்பற்றி தான்
இந்த பதிவு.கூகுள் பஸ் -ல் சென்று தேட பல இணையதளங்கள்
இருந்தாலும் கூகுள் பஸ் தகவல்களை எந்த கூகுளின் மெயில்
கணக்கும் இல்லாமல் சில நொடிகளிலே தேடிமுடிவுகளை
பார்க்கலாம்.முடிவும் தற்போது பஸ் செய்யப்பட்டிருக்கும்
தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது.
செய்தி சேகரிப்பாளர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை இனி
நாமும் உடனடியாக தேடி பார்க்காலம். இந்த இணையதளத்திற்கு
சென்று நாம் எந்த தகவல் வேண்டுமோ அந்த வார்த்தையை
கொடுத்து தேடலாம்.
இணையதள முகவரி : http://buzzzy.com

படம் 1
இணையதளத்தின் முகப்பு பக்கம் பார்ப்பதற்கு கூகுள் போலவே
எளிமையாகவே உள்ளது.மற்ற இணையதளங்களை விட இந்த
இணையதளத்தில் என்ன சிறப்பம்சம் என்கிறீர்களா இந்த தளத்தில்
நாம் தமிழ் மொழியில் கூட தேடலாம். உதாரணமாக நாம் வின்மணி
என்ற வார்த்தையை கொடுத்து தேடியுள்ளோம். தேடுதல் முடிவுகள்
படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது. சரியாக கடந்த சில நாட்களில் நாம்
தேடிய வார்த்தையை அதிகமான பேர் பஸ் செய்து இருந்தால் அந்த
தகவல்களை உடனடியாக நமக்கு எடுத்துக்கொடுக்கும்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP - Check the date General Form checkdate ($intMonth,$date, $intYear); Eg: 1. checkdate (3, 16,2010); Output: (1 means true) 2. checkdate (2, 16,2010); Output: (null means false)
இன்று மார்ச் 16பெயர் : இரா. திருமுருகன் , பிறந்த தேதி : மார்ச் 16, 1929 முனைவர் இரா. திருமுருகன் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல அறிஞர். குழல் இசைப்பதிலும், வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர்.புதுச்சேரி அரசுப்பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர். சிந்துப்பாவியல் என்ற புதிய இலக்கணம் உருவாக்கியவர். உங்கள் தமிழ் பணிக்கு என்றும் நன்றி.
இந்தியாவின் முன்னனி மென்பொருள் நிறுவனத்தின் இணையதளத்தில் கணினி கொள்ளையர்கள் கைவரிசையா ?
இந்தியாவின் முன்னனியில் இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தின்
இணையதளத்தை கணினி கொள்ளையர்கள் பதம் பார்த்துள்ளனர்.
கணினி மென்பொருள் உருவாக்கும் நிறுவனம், பல இலட்சம்
பணியாளர்கள் பல நாடுகளில் பல கிளைகள் என்று மென்பொருள்
துறையில் கொடிகட்ட பறந்து கொண்டிருக்கும் இந்த நிறுவனதின்
இணையதளத்தை முழுவதுமாக முடக்கி கணினி கொள்ளையர்கள்
” இந்த இணையதளம் விற்பனைக்கு உள்ளது ” என்ற தகவலை
அவர்களின் முகப்பு பக்கத்தில் இட்டுள்ளனர். கூடவே தொடர்புகொள்ள
ஒரு இமெயில் முகவரியும் கொடுத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்
இந்த நிறுவனத்தின் இணையதளத்தை திறந்தவர்கள் அதிர்ச்சியில்
உறைந்துள்ளனர். ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின்
இணையதளத்தை இப்படி செய்துவிட்டனரே என்று அதுவும் இவர்கள்
இணையதளபாதுகாப்பில் அதிக முக்கியத்துவம் செலுத்தும்
நிறுவனமும் கூட.
மென்பொருள் நிறுவனத்தின் அடிப்படை தகுதிகளில் ஒன்று பாதுகாப்பு
என்றால் நம் இணையதளத்தில் நடக்கும் தவறையே நாம் சரியாக
பாதுகாத்துக்கொள்ளவிட்டால் மென்பொருளில் மட்டும் உங்களால் எந்த
அளவுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏற்கனவே இரணியன் சைபர் ஆர்மி என்ற கொள்ளைக்கூட்டம் டிவிட்டர்
இணையதளத்தை இரண்டு முறை தங்கள் கைவரிசையை காட்டி
விட்டனர் இதே போல் தான் இந்த நிறுவனத்தின் இணையதளத்தையும்
தாக்கியுள்ளனர். இதுபற்றி அறிய நம் பழைய பதிவை பார்க்கவும்.
https://winmani.wordpress.com/2010/01/02/twitterattack/
டிவிட்டர் இணையதளத்தை விட ஒரு மென்பொருள் உருவாக்கும்
இந்த நிறுவனத்தின் இணையதளத்தை கணினி கொள்ளையர்கள்
DNS Hijack முறையில் படாதபாடு படுத்திவிட்டனர்.எந்த நிறுவனம்
என்று உங்களால் யூகிக்க முடிகிறதா ? சற்று அதிர்ச்சியாகத்தான்
இருக்கிறது. இணையதளபாதுகாப்பில் குறையாக உள்ள அந்த நிறுவனம்
எது என்பதையும் இதே போல் பிரச்சினையிலிருந்து தடுக்க
வழிமுறைகள் என்ன என்பதையும் விரைவில் வரும் நம் பதிவுகளில்
விரிவாக பார்க்கலாம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP - Current Date Get Genaral Form date('format options'); Eg: date('y m d'); Output: 10 04 15 date('Y M D'); Output: 2010 Mar Mon date('Y m d h: s: m'); Output: 2010 04 15 02: 18: 04 (Date and Time)
இன்று மார்ச் 15பெயர் : ஜேம்ஸ் சில்வெஸ்டர் மறைந்த தேதி : மார்ச் 15, 1897 19ம் நூற்றாண்டின் சிறந்த கணிதவியலர்களில் ஒருவர்.கெய்லியுடன் கூட்டாகக் கணித ஆய்வுகள் செய்தவர்.கெய்லியைப்போல் கணிதத் துறையில் பல பிரிவுகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர். பேராசிரியர், நல்ல மனிதர்.
கூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்
இன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது
பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல
இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக நண்பர்களுக்கும் ,
கனடா ,பிரான்ஸ் , ஜெர்மனி, மலேசியா , இலங்கை மற்றும்
இங்கிலாந்தில் வாழும் நம் தமிழ் நண்பர்களுக்கும் வின்மணியின்
சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.உங்கள்
ஆதரவினால் தான் நாம் இந்த வெற்றியை சுவைத்திருக்கிறோம்.
திரும்பி பார்பதற்க்குள் 99 நாள் ஒடிவிட்டது.எத்தனை பாரட்டுக்கள்,
எத்தனை அறிவுரைகள்,எத்தனை தவறுகள் அத்தனையையும்
சுட்டிக்காட்டி நாம் அடைந்திருக்கும் இந்த வெற்றி கண்டிப்பாக
உங்கள் முயற்ச்சியினால் தான். வின்மணி தொடங்க நமக்கு
மிகப்பெரிய உதவியாக இருந்தவர் நம் நண்பர் நரசிம்மன் அதனால்
இந்த வெற்றியை அவருக்கு சமர்பிக்கிறோம். சிறந்த தமிழ்
தொழில்நுட்ப இணையதளமாக வின்மணியை தேர்ந்தெடுத்த
மீடியா எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கும் மற்றும் அனைத்து
பத்திரிகைகளுக்கும் விகடனுக்கும் நன்றி..நன்றி..நன்றி…
கூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்
நமக்கு எழும் சந்தேகங்களை இனி இணையதளத்தில் உள்ள
தேடுபொறியில் சென்று தேட வேண்டாம் கூகுள்டாக் மட்டும்
நம்மிடம் இருந்தால் போதும் உங்கள் சந்தேகங்களை சரியாக
சில நொடிகளில் தேடி விடையை கொடுக்கிறது. அடுத்து
எந்த பழங்களில் எவ்வளவு கலோரி உள்ளது என்று எந்த
இணையதளத்துக்கும் செல்லாமல் கூகுள் டாக் மூலம் சில
நொடியில் கண்டுபிடிக்கலாம் கொஞ்சம் வித்தியாசமாகத்தான்
இருக்கிறது. கூகுள் டாக்-ல் உள்ள இந்த பிரமிக்க வைக்கும்
அதிசயங்களைப் பற்றி தான் இனி பார்க்கப்போகிறோம்.

படம் 1

படம் 2

படம் 3

படம் 4
உங்களிடம் கூகுள் டாக்-ன் எந்த பதிப்பு இருந்தாலும் இதைப்
பயன்படுத்தலாம். முதலில் தேடுதல் பற்றிப்பார்ப்போம் நம்
ஜீடாக்-ல் படம் 1-ல் காட்டியபடி ” ADD ” என்ற பட்டனை
அழுத்தி sbot@bot.im என்ற முகவரியை படம் 2-ல்
காட்டியபடி கொடுக்கவும் அடுத்து Next என்ற பட்னை அழுத்தி
அதன் பின் வரும் Finish என்ற பட்டனை அழுத்தி வெளியே
வரவும். எல்லாம் கொடுத்து முடித்த பின் படம் 3 -ல்
காட்டியபடி sbot@bot.im என்பதை தேர்வு செய்து உங்கள்
கேள்விகளை கேட்கலாம் உதாரணமாக நாம் g winmani என்ற
வார்த்தையை கொடுத்துள்ளோம் அதற்கான தேடுதல் முடிவு
படம் 4-ல் காட்டப்பட்டுள்ளது. இதே போல் உங்கள் தேடுதல்
வார்த்தையை கொடுக்கலாம். தேடுதல் முடிவுகள் கூகுள்-ல்
இருந்து மட்டுமல்ல யாகூ, பிங் போன்ற தேடுபொறிகளிலும்
இருந்தும் முடிவுகளைப் பெறலாம். நாம் தேடுதல் கொடுக்கும்
வார்த்தக்கு முன் g ஒரு இடைவெளிவிட்டு தேடுதல் வார்த்தையை
கொடுக்கலாம் உதாரணமாக g winmani என்று கொடுக்கலாம்.
இதில் g என்பது கூகுள் தேடுதலை குறிக்கும். இதேபோல்
y winmani என்றும் கொடுக்கலாம் இதில் y என்பது யாகூவை
குறிக்கும். இதே போல் b winmani என்றும் கொடுக்கலாம்.
இதில் b என்பது பிங் தேடுபொறியை குறிக்கும்.தேடுதல் முடிவும்
மிகச்சரியாகத்தான் இருக்கிறது. அடுத்து பழங்களில் உள்ள
கலோரி அளவை கூகுள் டாக் மூலம் கண்டுபிடிக்கலாம்.
இதற்கும் படம் 1-ல் காட்டியபடி ” ADD ” என்ற பட்டனை
அழுத்தி calories@lifemojo.com என்ற முகவரியை
கொடுத்து Next -அழுத்தி Finish செய்யவும்.

படம் 5

படம் 6
அடுத்து படம் 5-ல் உள்ளது போல் வந்துவிடும் இதை அழுத்தி
படம் 6 -ல் உள்ளது போல் எந்த பழத்தின் கலோரியை
தெரிந்துகொள்ளவேண்டுமோ அந்த பழத்தின் பெயரை
கொடுக்கவும் உதாரணமாக நாம் mango என்று கொடுத்துள்ளோம்
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP - Splitting a string into an array General Form: explode(separator,stringname); Eg: $string="14-03-2010" explode("-",$string); Output : 14 in array[0] , 03 in array[1] , 2010 in array[2]
இன்று மார்ச் 14பெயர் : கார்ல் மார்க்ஸ் , மறைந்த தேதி : மார்ச் 14, 1883 ஜெர்மனிய மெய்யியலாளர்களுள் ஒருவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் நிபுணராகவும், தலைசிறந்த ஆய்வறிஞராக,எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகவும் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார்.பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.