குழந்தைகளுக்கு கணித அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்
மார்ச் 26, 2010 at 10:03 பிப 2 பின்னூட்டங்கள்
குழந்தைகளுக்கு கணிதஅறிவை வளர்க்க புத்தகம் மட்டும் அல்ல
சில விளையாட்டுகள் மூலமும் வேடிக்கையான முறையில்
கணித அறிவை வளர்க்கும் விதத்தில் ஒரு இணையதளம்
உள்ளது. இதைப்பற்றி தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://www.carrotsticks.com
கூட்டல் , கழித்தல் , வகுத்தல் , பெருக்கல் என அனைத்தும்
எளிதாக ஆரம்ப நிலையில் உள்ள குழந்தைகள் முதல் மாணவர்கள்
வரை அனைவருக்கும் பயன்படும் வகையிலும்,போட்டிக்குச் செல்லும்
மாணவரின் கணித வேகத்தை அதிகப்படுத்தவும் அனிமேசனுடன்
நம் கணித அறிவை வளர்த்துக்கொள்ளத்தான் இந்த் இணையதளம்
வந்துள்ளது. எளிதான கணக்கு வகை , கடினமான கணக்கு வகை
என்று இரண்டாக பிரித்துள்ளனர். இதில் நமக்கு எது வேண்டுமோ
அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். சரியான பதில் அளித்தால்
உடனடியாக மதிப்பெண்ணும் வழங்குகின்றனர். பயனாளர் கணக்கு
உருவாக்க தேவையில்லை , புதிய பயனாளர் கணக்கு தங்கள்
பெயரில் உருவாக்கி நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை அடுத்தவரிடம்
காட்டலாம். பேஸ்புக்கிலும் உங்கள் மதிப்பெண்ணை பகிர்ந்து
கொள்ளலாம். ஏற்கனவே ஆயிரம் அறிவை வளர்க்கும்
விளையாட்டுக்கள் ஒரே இடத்தில் உள்ளன. மேலும் விபரங்கள்
தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்.
https://winmani.wordpress.com/2010/03/10/thousnadgame/
வின்மணி இன்றைய சிந்தனை மக்களை ஏமாற்றி அநியாயமாக பொருள் சேர்த்தவனின் பொருளை அவன் தலைமுறை அனுபவிக்க முடியாது.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP Error and Logging Functions debug_backtrace() Generates a backtrace debug_print_backtrace() Prints a backtrace error_get_last() Gets the last error occurred error_log() Sends an error to the server error-log, to a file or to a remote destination
இன்று மார்ச் 26பெயர் : பால் ஏர்டோசு , பிறந்த தேதி : மார்ச் 26, 1913 வளமிக்க விளைவுகளைத் தந்த விந்தையான தனிப்போக்கு கொண்டிருந்த ஒரு அங்கேரி நாட்டுக் கணிதவியலாளர். சேர்வியல், கோலவியல், எண் கோட்பாடு, செவ் பகுவியல், கணக் கோட்பாடு,நிகழ்தகவுக் கோட்பாடு முதலிய கணிதத்துறைகளில் ஐநூறுக்கும் மிகுதியான கணிதவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றி ஆயிரத்து ஐநூறுக்கும் கூடுதலான ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: குழந்தைகளுக்கு கணித அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்.
1.
KARUNANITHI | 6:41 முப இல் மார்ச் 27, 2010
GOOD
2.
Perumal | 10:32 முப இல் மார்ச் 27, 2010
thanks for your great service to Tamil people.
upgrade your service we will support Financial also.
-K.Perumal
Tamil Sangam
Oman