உங்கள் லேப்டாப்-க்கு கூலிங் பேட் (Cooling Pad) நீங்களே உருவாக்கலாம்
மார்ச் 23, 2010 at 6:38 பிப 4 பின்னூட்டங்கள்
மடிக்கணினி பயன்படுத்துவர்கள் அதிக நேரம் கணினியை
பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் வெப்பம் தான் முதல்
பிரச்சினை.காரணம் வெப்பம் சரியாக வெளியேறாமல் இருப்பது
தான் ஆனால் தற்போது வரும் லேப்டாப் அனைத்திலும் கூலிங்
சிறப்பு வசதியுடன் வருகிறது. ஒரே இடத்தில் அதிக நேரம்
மடிக்கணினியை பயன்படுத்துபவர்கள் நீங்ளே அதற்கான விசிறியை
பொருத்திக்கொள்ளலாம் எப்படி என்பதைப் பற்றி தான் இந்த பதிவு.

படம் 1

படம் 1-ல் காட்டப்பட்டது போல் நாம் ஒரு அட்டையை வெட்டி
தயார் செய்து கொள்ள வேண்டும். அடுத்து USB Fan என்று
கணினிக்கடைகளில் $10 டாலருக்கு கிடைக்கும் இதை படம் 2-ல்
காட்டியபடி உங்கள் USB port -ல் பொருத்திக்கொள்ளவும்.
உங்களுக்கு தேவையான மாதிரி fan போஸிசனை மாற்றிக்
கொள்ளலாம். இதைத்தவிர Cooling pad என்று தற்போது
அனைத்து கணினி கடைகளிலும் கிடைக்கிறது இதன் விலை
$18 டாலரிலிருந்து $30 டாலர் வரை தான்.அனைத்து வகை
மடிக்கணினிக்கும் பொருந்தும் வகையில் இது வடிவமைக்கப்
பட்டுள்ளது இந்த Cooling pad தற்போது வெளிவரும் அனைத்து
மடிக்கணினியிலும் பயன்படுத்தலாம் இதனால் நாம் அதிக நேரம்
மடிக்கணினி பயன்படுத்தினாலும் வெப்பமாவது குறைக்கப்படுகிறது.
வின்மணி இன்றைய சிந்தனை இன்று செய்ய வேண்டிய வேலையை இன்றே செய்து முடிக்கும் அரசு அதிகாரி அந்த நாட்டின் உயர்ந்த மனிதர்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP Filesystem Functions file() Reads a file into an array file_exists() Checks whether or not a file or directory exists file_get_contents() Reads a file into a string fileatime() Returns the last access time of a file filectime() Returns the last change time of a file
இன்று மார்ச் 23பெயர் : பகத் சிங் , மறைந்த தேதி : மார்ச் 23, 1931 இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார். லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக்கொன்றார்.உங்களால் இந்திய தேசத்துக்கே பெருமை என்றும் உங்கள் நினைவு எங்களுடன் இருக்கும்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உங்கள் லேப்டாப்-க்கு கூலிங் பேட் (Cooling Pad) நீங்களே உருவாக்கலாம்.
1.
DREAMER | 5:37 முப இல் மார்ச் 24, 2010
அசத்தல் தகவல்கள்… நன்றி..!
2.
panasai Natarajan | 6:23 முப இல் மார்ச் 24, 2010
nalla thagaval..
but singapore l cooling pad rate only 5 S$.
3.
தர்மா | 5:17 பிப இல் ஏப்ரல் 5, 2010
ஆனால் மலேசியாவிலே வெறும் 10 வெள்ளிதான் (1மலேசியா வெள்ளி= 13 இந்திய ரூபா)
4.
winmani | 6:36 பிப இல் ஏப்ரல் 5, 2010
@ தர்மா நன்றி