கல்லூரி மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்யும் நண்பர்களுக்கும் உதவும் தகவல் சுரங்கம்

மார்ச் 17, 2010 at 9:09 பிப 2 பின்னூட்டங்கள்

கல்லூரி மாணவர்கள் முதல் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள்
வரை அனைவருக்கும் உடனடியாக உதவி செய்ய ஒரு இணையதளம்
வந்துள்ளது. எண்ணற்ற தகவல்கள் அனைத்தும் பொக்கிஷம் தான்
என்று சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு சிறிய பிராஜெக்ட் முதல்
பெரிய பிராஜெக்ட் வரை அனைத்தும் எங்கும் சென்று தேட வேண்டாம்
உடனடியாக கிடைக்கிறது.

தேடுதலில் கூகிள் ஒரு பெரிய கடல் தான். ஆனால் சில நேரங்களில்
இந்த கடலில் சென்று முத்தெடுக்க கூட நம்மால் முடியவில்லை.
தகவல் கிடைப்பதற்கு முன் சில குப்பைகள் தான் முதலில்
தோன்றுகிறது.பொறியியல் துறையில் படிக்கும் மாணவர்கள் சில
ஆராய்ச்சி பிராஜெக்ட் செய்ய அடிக்கடி கூகுளில் சென்று தேடிக்
கொண்டிருக்கின்றனர். பல நேரங்களில் நாம் தேடுவதை கூகுள்
கொடுக்கிறது சில நேரங்களில் நாம் தேடும் பிராஜெக்ட் பற்றிய எந்த
தகவலும் கிடைப்பதில்லை அல்லது பொருந்தாத தகவல் கிடைக்கிறது
இப்படி நாம் தேடும் தகவல் கூகுளில் இல்லாதபட்சத்தில் இந்த
இணையதளத்திற்கு சென்று தேடலாம். உடனடியாக ஆராய்ச்சி
பிராஜெக்ட் மற்றும் தகவல்களை மிகச்சரியாக கொடுக்கிறது.
விவசாயத்திலிருந்து பொறியியல் துறையில் படிக்கும் மாணவர்கள்
வரை அனைவருக்கும் தேவையான பிராஜெக்ட் தனித்தனி வகையாக
பிரித்து வைக்கப்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன் நண்பர்கள் பல
பேர் ஆராய்ச்சி செய்யவதாகவும் போதுமான அளவு தகவல்களை
பெற ஏதாவது இணையதளம் உள்ளதா என்று கேட்டிருந்தீர்கள்
கண்டிப்பாக இந்த இணையதளம் உங்களுக்கு உதவும்.

இணையதள முகவரி :  http://www.intute.ac.uk

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் 
PHP Misc Functions
connection_aborted() Checks whether the client has
                                      disconnected    
connection_status()  Returns the current connection
                                            status
constant()           Returns the value of a constant    
define()             Defines a constant    
defined()            Checks whether a constant exists
இன்று மார்ச் 17 
1996 ஆம் ஆண்டு மார்ச் 17 நாள்
இலங்கை அணி ஆஸ்திரேலியாவைத்
தோற்கடித்து துடுப்பாட்ட உலகக்
கிண்ணத்தை வென்றது.பாகிஸ்தானின் 
லாகூரில் உள்ள கடாபி விளையாட்டரங்கில்
நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் இலங்கை
7 இலக்குகளால் ஆஸ்திரேலியாவை வென்றது. 124 பந்துகளுக்கு
முகம் கொடுத்து 107 ஓட்டங்களை இலங்கை அணிக்குப் பெற்றுக்
கொடுத்த அரவிந்த டி சில்வா ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கூகுள் பஸ் தகவல்களை இனி எளிதாக தேடலாம் – கூகுள் கணக்கு தேவையில்லை ஈபே அமேசான் எந்த இணையதளத்தில் விலை குறைவு ஒரே நிமிடத்தில்

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. padmahari  |  5:56 முப இல் மார்ச் 18, 2010

    ரொம்ப நல்ல தகவல் நண்பரே…..தொடரட்டும் உங்கள் இணைய செய்திச் சேவை! நன்றி.

    மறுமொழி
  • 2. இளமுருகன்  |  2:41 முப இல் மார்ச் 19, 2010

    தகவலுக்கு நன்றி வாழ்த்துகள்

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...