இந்தியாவின் முன்னனி மென்பொருள் நிறுவனத்தின் இணையதளத்தில் கணினி கொள்ளையர்கள் கைவரிசையா ?

மார்ச் 15, 2010 at 9:21 பிப 8 பின்னூட்டங்கள்

இந்தியாவின் முன்னனியில் இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தின்
இணையதளத்தை கணினி கொள்ளையர்கள் பதம் பார்த்துள்ளனர்.
கணினி மென்பொருள் உருவாக்கும் நிறுவனம், பல இலட்சம்
பணியாளர்கள் பல நாடுகளில் பல கிளைகள் என்று மென்பொருள்
துறையில் கொடிகட்ட பறந்து கொண்டிருக்கும் இந்த நிறுவனதின்
இணையதளத்தை முழுவதுமாக முடக்கி கணினி கொள்ளையர்கள்
” இந்த இணையதளம் விற்பனைக்கு உள்ளது ” என்ற தகவலை
அவர்களின் முகப்பு பக்கத்தில் இட்டுள்ளனர். கூடவே தொடர்புகொள்ள
ஒரு இமெயில் முகவரியும் கொடுத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்
இந்த நிறுவனத்தின் இணையதளத்தை திறந்தவர்கள் அதிர்ச்சியில்
உறைந்துள்ளனர். ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின்
இணையதளத்தை இப்படி செய்துவிட்டனரே என்று அதுவும் இவர்கள்
இணையதளபாதுகாப்பில் அதிக முக்கியத்துவம் செலுத்தும்
நிறுவனமும் கூட.

மென்பொருள் நிறுவனத்தின் அடிப்படை தகுதிகளில் ஒன்று பாதுகாப்பு
என்றால் நம் இணையதளத்தில் நடக்கும் தவறையே நாம் சரியாக
பாதுகாத்துக்கொள்ளவிட்டால் மென்பொருளில் மட்டும் உங்களால் எந்த
அளவுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏற்கனவே இரணியன் சைபர் ஆர்மி என்ற கொள்ளைக்கூட்டம் டிவிட்டர்
இணையதளத்தை இரண்டு முறை தங்கள் கைவரிசையை காட்டி
விட்டனர் இதே போல் தான் இந்த நிறுவனத்தின் இணையதளத்தையும்
தாக்கியுள்ளனர். இதுபற்றி அறிய நம் பழைய பதிவை பார்க்கவும்.
https://winmani.wordpress.com/2010/01/02/twitterattack/
டிவிட்டர் இணையதளத்தை விட ஒரு மென்பொருள் உருவாக்கும்
இந்த நிறுவனத்தின் இணையதளத்தை கணினி கொள்ளையர்கள்
DNS Hijack முறையில் படாதபாடு படுத்திவிட்டனர்.எந்த நிறுவனம்
என்று உங்களால் யூகிக்க முடிகிறதா ? சற்று அதிர்ச்சியாகத்தான்
இருக்கிறது. இணையதளபாதுகாப்பில் குறையாக உள்ள அந்த நிறுவனம்
எது என்பதையும் இதே போல் பிரச்சினையிலிருந்து தடுக்க
வழிமுறைகள் என்ன என்பதையும் விரைவில் வரும் நம் பதிவுகளில்
விரிவாக பார்க்கலாம்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் 
PHP - Current Date Get
Genaral Form
date('format options');
Eg:
date('y m d');
 Output: 10 04 15
date('Y M D');
 Output: 2010 Mar Mon
date('Y m d h: s: m');
 Output: 2010 04 15 02: 18: 04 (Date and Time)
இன்று மார்ச் 15 
பெயர் : ஜேம்ஸ் சில்வெஸ்டர் 
மறைந்த தேதி : மார்ச் 15, 1897
19ம் நூற்றாண்டின் சிறந்த கணிதவியலர்களில்
ஒருவர்.கெய்லியுடன் கூட்டாகக் கணித ஆய்வுகள்
செய்தவர்.கெய்லியைப்போல் கணிதத் துறையில்
பல பிரிவுகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர்.
பேராசிரியர், நல்ல மனிதர்.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள் கூகுள் பஸ் தகவல்களை இனி எளிதாக தேடலாம் – கூகுள் கணக்கு தேவையில்லை

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ஞானசேகர்  |  3:51 முப இல் மார்ச் 16, 2010

    DNS Hijack பத்தி கொஞம் விரிவா சொல்லுங்களேன் என்னை போன்றவர்கள் தெரிந்துகொள்ள உதவியாய் இருக்கும்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    மறுமொழி
    • 2. winmani  |  8:02 முப இல் மார்ச் 16, 2010

      கண்டிப்பாக விரைவில்….

      மறுமொழி
  • 3. தீபா  |  8:43 முப இல் மார்ச் 16, 2010

    சார் தயவு செய்து எங்க நிறுவனத்தின் பெயரை
    சொல்லிடாதிங்க… ஊர்ல இருக்கிற கொஞ்ச
    மரியாதையும் போயிடும்.

    மறுமொழி
  • 4. முத்துகிருஷ்ணன்  |  8:48 முப இல் மார்ச் 16, 2010

    ஆவலாக இருக்கிறோம் , சீக்கிரம் சொல்லுங்க நண்பரே.
    – முத்துகிருஷ்ணன்
    மலேசியா

    மறுமொழி
  • 5. Ramesh  |  8:52 முப இல் மார்ச் 16, 2010

    நானும் இந்த நிறுவனத்தில் தான் பணிபுரிகிறேன். ஏற்கனவே ஒருமுறை இது இரண்டாவது முறை.
    நம்ம சொல்றதை யாரு கேட்கிறாங்க.

    மறுமொழி
  • 6. Rask abdulla  |  8:59 முப இல் மார்ச் 16, 2010

    ஐயா ,
    எங்கள் நிறுவனத்தில் காலையில் இருந்தே இதே பேச்சு தான்.
    எங்கள் மேலதிகாரியும் உங்கள் இணையதளத்தை காலையில்
    இருந்தே கண்சிமிட்டாமல் பார்த்துகொண்டிருக்கிறார்.

    ரசிக் அப்துல்லா.
    துபாய்

    மறுமொழி
  • 7. Perumal  |  9:02 முப இல் மார்ச் 16, 2010

    very interesting…..

    மறுமொழி
  • 8. sudeesi  |  2:01 பிப இல் பிப்ரவரி 1, 2012

    DNS Hijack பத்தி கொஞம் விரிவா சொல்லுங்களேன் என்னை போன்றவர்கள் தெரிந்துகொள்ள உதவியாய் இருக்கும்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,748 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2010
தி செ பு விய வெ ஞா
« பிப்   ஏப் »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: