கூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்
மார்ச் 14, 2010 at 11:48 பிப 25 பின்னூட்டங்கள்
இன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது
பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல
இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக நண்பர்களுக்கும் ,
கனடா ,பிரான்ஸ் , ஜெர்மனி, மலேசியா , இலங்கை மற்றும்
இங்கிலாந்தில் வாழும் நம் தமிழ் நண்பர்களுக்கும் வின்மணியின்
சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.உங்கள்
ஆதரவினால் தான் நாம் இந்த வெற்றியை சுவைத்திருக்கிறோம்.
திரும்பி பார்பதற்க்குள் 99 நாள் ஒடிவிட்டது.எத்தனை பாரட்டுக்கள்,
எத்தனை அறிவுரைகள்,எத்தனை தவறுகள் அத்தனையையும்
சுட்டிக்காட்டி நாம் அடைந்திருக்கும் இந்த வெற்றி கண்டிப்பாக
உங்கள் முயற்ச்சியினால் தான். வின்மணி தொடங்க நமக்கு
மிகப்பெரிய உதவியாக இருந்தவர் நம் நண்பர் நரசிம்மன் அதனால்
இந்த வெற்றியை அவருக்கு சமர்பிக்கிறோம். சிறந்த தமிழ்
தொழில்நுட்ப இணையதளமாக வின்மணியை தேர்ந்தெடுத்த
மீடியா எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கும் மற்றும் அனைத்து
பத்திரிகைகளுக்கும் விகடனுக்கும் நன்றி..நன்றி..நன்றி…
கூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்
நமக்கு எழும் சந்தேகங்களை இனி இணையதளத்தில் உள்ள
தேடுபொறியில் சென்று தேட வேண்டாம் கூகுள்டாக் மட்டும்
நம்மிடம் இருந்தால் போதும் உங்கள் சந்தேகங்களை சரியாக
சில நொடிகளில் தேடி விடையை கொடுக்கிறது. அடுத்து
எந்த பழங்களில் எவ்வளவு கலோரி உள்ளது என்று எந்த
இணையதளத்துக்கும் செல்லாமல் கூகுள் டாக் மூலம் சில
நொடியில் கண்டுபிடிக்கலாம் கொஞ்சம் வித்தியாசமாகத்தான்
இருக்கிறது. கூகுள் டாக்-ல் உள்ள இந்த பிரமிக்க வைக்கும்
அதிசயங்களைப் பற்றி தான் இனி பார்க்கப்போகிறோம்.

படம் 1

படம் 2

படம் 3

படம் 4
உங்களிடம் கூகுள் டாக்-ன் எந்த பதிப்பு இருந்தாலும் இதைப்
பயன்படுத்தலாம். முதலில் தேடுதல் பற்றிப்பார்ப்போம் நம்
ஜீடாக்-ல் படம் 1-ல் காட்டியபடி ” ADD ” என்ற பட்டனை
அழுத்தி sbot@bot.im என்ற முகவரியை படம் 2-ல்
காட்டியபடி கொடுக்கவும் அடுத்து Next என்ற பட்னை அழுத்தி
அதன் பின் வரும் Finish என்ற பட்டனை அழுத்தி வெளியே
வரவும். எல்லாம் கொடுத்து முடித்த பின் படம் 3 -ல்
காட்டியபடி sbot@bot.im என்பதை தேர்வு செய்து உங்கள்
கேள்விகளை கேட்கலாம் உதாரணமாக நாம் g winmani என்ற
வார்த்தையை கொடுத்துள்ளோம் அதற்கான தேடுதல் முடிவு
படம் 4-ல் காட்டப்பட்டுள்ளது. இதே போல் உங்கள் தேடுதல்
வார்த்தையை கொடுக்கலாம். தேடுதல் முடிவுகள் கூகுள்-ல்
இருந்து மட்டுமல்ல யாகூ, பிங் போன்ற தேடுபொறிகளிலும்
இருந்தும் முடிவுகளைப் பெறலாம். நாம் தேடுதல் கொடுக்கும்
வார்த்தக்கு முன் g ஒரு இடைவெளிவிட்டு தேடுதல் வார்த்தையை
கொடுக்கலாம் உதாரணமாக g winmani என்று கொடுக்கலாம்.
இதில் g என்பது கூகுள் தேடுதலை குறிக்கும். இதேபோல்
y winmani என்றும் கொடுக்கலாம் இதில் y என்பது யாகூவை
குறிக்கும். இதே போல் b winmani என்றும் கொடுக்கலாம்.
இதில் b என்பது பிங் தேடுபொறியை குறிக்கும்.தேடுதல் முடிவும்
மிகச்சரியாகத்தான் இருக்கிறது. அடுத்து பழங்களில் உள்ள
கலோரி அளவை கூகுள் டாக் மூலம் கண்டுபிடிக்கலாம்.
இதற்கும் படம் 1-ல் காட்டியபடி ” ADD ” என்ற பட்டனை
அழுத்தி calories@lifemojo.com என்ற முகவரியை
கொடுத்து Next -அழுத்தி Finish செய்யவும்.

படம் 5

படம் 6
அடுத்து படம் 5-ல் உள்ளது போல் வந்துவிடும் இதை அழுத்தி
படம் 6 -ல் உள்ளது போல் எந்த பழத்தின் கலோரியை
தெரிந்துகொள்ளவேண்டுமோ அந்த பழத்தின் பெயரை
கொடுக்கவும் உதாரணமாக நாம் mango என்று கொடுத்துள்ளோம்
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP - Splitting a string into an array General Form: explode(separator,stringname); Eg: $string="14-03-2010" explode("-",$string); Output : 14 in array[0] , 03 in array[1] , 2010 in array[2]
இன்று மார்ச் 14பெயர் : கார்ல் மார்க்ஸ் , மறைந்த தேதி : மார்ச் 14, 1883 ஜெர்மனிய மெய்யியலாளர்களுள் ஒருவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் நிபுணராகவும், தலைசிறந்த ஆய்வறிஞராக,எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகவும் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார்.பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: கூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்.
1.
நீச்சல்காரன் | 12:44 முப இல் மார்ச் 15, 2010
வாழ்த்துக்கள்
2.
gnanasekar | 3:58 முப இல் மார்ச் 15, 2010
நல்ல தகவல் பிரமிக்க வைக்கிறது
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
3.
கிரி | 4:32 முப இல் மார்ச் 15, 2010
வாழ்த்துக்கள். மேலும் பல தகவல்களை தரும் படி கேட்டுக்கொள்கிறேன்.
//கனடா ,பிரான்ஸ் , ஜெர்மனி, மலேசியா , இலங்கை மற்றும்
இங்கிலாந்தில் வாழும் நம் தமிழ் நண்பர்களுக்கும் வின்மணியின்
சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.//
சிங்கப்பூர் ல இருக்கிற எங்களுக்கு சொல்ல மாட்டீங்களா! 😉 (சும்மா கிண்டல்)
4.
winmani | 4:42 முப இல் ஏப்ரல் 21, 2010
@ கிரி
சிங்கப்பூரில் இருக்கும் உங்களுக்கும் நம் நண்பர்களுக்கும் நன்றி.
5.
Varadaradjalou | 5:09 முப இல் மார்ச் 15, 2010
Excellent & innovative article. Thanks for sharing
6.
உலவு.com | 6:12 முப இல் மார்ச் 15, 2010
அருமை…… நல்வாழ்த்துக்கள்
7.
Guru | 6:59 முப இல் மார்ச் 15, 2010
வாழ்த்துக்கள்
8.
nanrasitha | 7:01 முப இல் மார்ச் 15, 2010
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மணி
9.
சிரவணன் | 7:29 முப இல் மார்ச் 15, 2010
வாழ்த்துகள். இதே வேகத்திலும் சேவை மனப்பான்மையிலும் வழுவாம் இருக்கும் இருக்கும் பட்சத்தில் மென்மேலும் எதிர்பார்ப்புக்கிணங்க வளர்ச்சியடைவது உறுதி.
10.
winmani | 4:43 முப இல் ஏப்ரல் 21, 2010
@ சிரவணன் நன்றி
11.
nagaraj | 7:40 முப இல் மார்ச் 15, 2010
nice job,pls continue…congrats once again.
12.
Ganesh Babu | 9:00 முப இல் மார்ச் 15, 2010
நல்ல பதிவு, இது மாதிரி இன்னும் பல ஈமெயில் Bots ச்ப்ன்னேர்கள் என்றால் உபயோகமாக இருக்கும்,
மேலும் இதை YIM மற்றும் AIM இல் பயன்படுத்த முடியுமா ?
13.
winmani | 4:44 முப இல் ஏப்ரல் 21, 2010
@Ganesh Babu
ஜீடாக் மட்டும் தான் இப்போதைக்கு பயன்படுத்த முடியும்.
நன்றி நண்பரே
14.
mohan | 9:33 முப இல் மார்ச் 15, 2010
வணக்கம் சார், 100 பதிவுகள் மிகவும் அற்புதமானவை தங்களின் சேவை தொடர வாழ்த்துகள், தினமும் ஒரு புரோகிராமாக்கான உதவித்துளிகள் தருகின்றீர்கள் இதை எவ்வாறு பயன்படுத்துவது.computer பற்றி முழுவதும் தெரியாத எனக்கு ஒன்றும் புரியவில்லை, html பற்றி தெரிந்து கொள்ள ஏதனேனும் தமிழ் நூழ்கள் அல்லது தமிழ் இனையதளம் இருந்தால் கூறுங்கள மிகவும் பயன்அடைவேன்….நன்றி்
15.
shunmugakrishna | 11:43 முப இல் மார்ச் 15, 2010
வாழ்த்துக்கள் !!!!
16.
krishnamoorthy | 2:01 பிப இல் மார்ச் 15, 2010
congratulations for 100th day episode wish u to produce many more issues
17.
Murali | 5:45 பிப இல் மார்ச் 15, 2010
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
18.
vivek | 6:01 பிப இல் மார்ச் 15, 2010
Super!
19.
தமிழ்மகன் | 11:55 பிப இல் மார்ச் 15, 2010
இது போன்ற தகவல்களுக்காகத்தான் காத்திருந்தேன். மேலும் பல புதிய தகவல்களுடன் புதிய பதிவுகளை எதிர்பார்க்கிறேன். 100வது பதிவிக்கு வாழ்த்துக்கள்.
20.
shiva | 4:28 பிப இல் மார்ச் 19, 2010
உங்களின் படைப்புகள் – தமிழ் மட்டுமே தெரிந்த பலருக்கு பெரிய விசயங்களை எளிதாக புரிய வைத்து விடுகிறீர்கள் .
நன்றிகள் …..மேலும் மேலும் உங்கள் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள் .
21.
கண்மணி | 6:32 பிப இல் மார்ச் 19, 2010
நூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
தொடரட்டும் பணி
22.
க. கனகலிங்கம் | 2:52 முப இல் மார்ச் 25, 2010
நான் இன்றுதான் வின்மணியை பார்த்தேன் உங்கள் படைப்புகள் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் தேவையானது மென்மேலும் எதிர்பார்ப்புக்கிணங்க வளர்ச்சியடைவது உறுதி. மனமார்ந்த வாழ்த்துக்கள்
தொடரட்டும் பணி நன்றி
23.
Kiyas | 5:47 முப இல் மார்ச் 30, 2010
மிகவும் பயனுள்ள செய்தியைச் சொல்லி இருக்கிறீர்கள் மிகவும் நன்றி ஐயா. வின்மனியின் நூறாவது பதிப்புக்கு வாழ்த்துக்கள். இச்சேவை தொடர்ந்தும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
24.
winmani | 4:52 முப இல் ஏப்ரல் 21, 2010
அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி
25.
sudeesi | 2:10 பிப இல் பிப்ரவரி 1, 2012
100 வது பதிவுக்கு வாழ்த்துகள், உங்கள் பனி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். நன்றி.