Archive for பிப்ரவரி, 2010

ஆபாசதளங்கள்,முறையற்ற தகவல்கள்,தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி

ஆபாச இணையதளங்கள்,நடிகர் நடிகைகளைப்பற்றி அவதூறான
செய்திகளை இணையதளம் மற்றும் பிளாக்குகளில் அத்துமீறி
பரப்புபவர்கள், காப்பூரிமம் பெற்ற இணையதளத்தில் இருந்து
வெளியிடப்படும் தகவல்களை திருடி தங்கள் இனையப்பக்கத்தில்
வெளியீடுபவர்கள் என அனைவரையும் விரைந்து பிடிக்க
சைபர்கிரைம் புதியயுக்தியை கையாண்டுள்ளது.

தங்களுக்கு பிடித்த் பெயரில் பிளாக் வைத்து ஆபாசபடங்கள்,
செய்திகள்,மென்பொருள்,வீடியோக்கள்,பாடல்கள் என
அனைத்தையும் அனுமதியின்றி வெளியீட்டு வருகின்றனர்.
சோசியல் நெட்வொர்க்கான கூகுள் பிளாக்ஸ்பாட்,வேர்டுபிரஸ்
இன்னும் பல தளங்கள் மூலம் தான் இந்த தகவல்
அனைவருக்கும் பரிமாறப்படுகின்றன ஆனால் சமீபத்தில்
சீனாவில் கூகுள் தடை பாராளுமன்றத்திலும் கூகுள் பற்றிய
பேச்சு போன்ற காரணங்களுக்காகவும் இப்போது எங்கே இருந்து
ஒரு பிளாக் அப்டேட் செய்யப்படுகிறது அவர்களை பற்றிய
முழுதகவல்கள்களையும் சைபர்கிரைம் எங்களிடம் கேட்டால்
உடனே தருகிறோம் என்கின்றனர் சோசியல் நெட்வொர்க்
வைத்திருப்பவர்கள். கடந்த மாதம் சென்னையை சேர்ந்த ஒருவர்
அவரது பல(6) பிளாக்குகளில் தமிழ் சினிமாவைப்பற்றியம்,
நடிகர் நடிகைகளைபற்றியும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை
பற்றியும் தவறான தகவல்களை வெளியீட்டுவந்தார் அவர்
தன்னுடைய கம்ப்யூட்டரின் IP முகவரியை மாற்றியும்
பதிவுகளை இட்டு வந்தார்.போலி IP முகவரிகளை எளிதாக
கண்டுபிடித்து தரும் மென்பொருளின் துணைகொண்டு அவரை
சைபர்கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர் அவரது பிளாக்கும்
உடனடியாக முடக்கப்பட்டு விட்டது. உங்கள் இணையதள
தகவல்கள் அல்லது சில தவறான செய்திகளை பரப்பி வரும்
இணையதளங்கள் அல்லது பிளாக்குகளை பற்றி புகார் கூற
வேண்டுமனால் கீழ்கண்ட சைபர்கிரைம்-ன் தொலைபேசி
எண்ணிலோ அல்லது இமெயில் முகவரியிலோ தொடர்பு
கொள்ளலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தொலைபேசி எண் :+91 – 022 – 24691233

இமெயில் முகவரி : officer@cybercellmumbai.com

இணையதளத்தில் எதெல்லாம் குற்றம் என்பதை பற்றிய
விரிவான விளக்கங்களுக்கு இந்த முகவரியை சொடுக்கவும்
http://www.cyberlawsindia.net

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
Escape sequences
Literal  Represents
\n       New line
\t       Horizontal tab
 \b      Backspace
\r       Carriage return
இன்று பிப்ரவரி 19 
பெயர் : உ.வே.சாமிநாதையர்,
பிறந்த தேதி : பிப்ரவரி 19, 1855
பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த
பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் 
தேடி அச்சிட்டு பதிப்பித்தவர்.இருபதாம் 
நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத்
தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர்
குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால்
தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும்
உலகறியச் செய்தவர். உங்கள் தமிழ் சேவைக்கு என்றும் நன்றி.

பிப்ரவரி 19, 2010 at 7:52 பிப 3 பின்னூட்டங்கள்

புகைப்படத்தின் எழுத்தை படிக்கும் கூகுளின் புதிய காகிளஸ்

நாளுக்கு நாள் கூகுளின் சேவை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது
அந்த வகையில் விரைவில் வெளிவர இருக்கும் கூகுளின்
காகிளஸ் பற்றி விரிவான தகவல்களை நாம் இந்த பதிவில்
பார்க்க இருக்கிறோம்.

கூகுள் காகிளஸ் என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன்,
நாம் சில நேரங்களில் பொதுநூலகத்திற்கு சென்று சில அறிய
வகை நூல்களை படிப்போம். அந்த நூல்களை கம்ப்யூட்டரில்
ஸ்கேன் செய்ய கூட சில நேரங்களில் அனுமதி வழங்கப்படாது
அப்படி அனுமதி வழங்கப்பட்டாலும் அந்த புத்தகம் முழுவதும்
ஸ்கேன் செய்வதென்றால் கூட நமக்கு அதிகஅளவு நேரம்
கிடைப்பதில்லை இப்படிபட்ட நமக்கு தான் கூகுளின் காகிளஸ்
அதிகமாகவே உதவப்போகிறது எப்படிஎன்றால் நீங்கள் ஒரு
புத்தகத்தில் எந்த பக்கம் வேண்டுமோ அந்த பக்கத்தின் மேல்
கூகுள் காகிளஸ் அப்ப்ளிகேசன் இன்ஸ்டால் செய்யப்பட்ட
மொபைல் போன் வைத்து ஸ்கேன் செய்யாலாம் நொடில் அதை
Text ஆக மாற்றி கொடுக்கிறது அதை நம் மொபைலில் சேமித்தும்
வைத்துக்கொள்ளலாம். புத்தகத்திற்கு மட்டுமல்ல ஒரு மருந்து
பாட்டிலில் இருக்கும் எழுத்தைக் கூட டெக்ஸ்ட் ஆக மாற்றி
சேமித்து வைத்துக்கொள்ளலாம்.தற்போது 52 மொழிகளுக்கு
துணை புரியும் வகையில் இந்த கூகுள் காகிளஸ் வெளிவர
இருக்கிறது. இனி நாம் இணையதளத்தில் தேடும் படங்களை
கூகிள் துல்லியமாக எடுத்துக்கொடுக்கும் எப்படி என்றால் அந்த
படத்தில் எங்காவது இருக்கும் பெயரை வைத்து கண்டுபிடித்து
கொடுக்கும். இது எப்படி செயல்படுகிறது என்பதைப்பற்றிய
ஒரு சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
ஜாவாவில் கோடிங் நிலையை விரைவாக
தெரிந்துகொள்ள உதவும் மெத்தட்  isAlive().
isAlive() Tests if the thread is alive;
returns a Boolean value

இன்று பிப்ரவரி 18
பெயர் : ஸ்ரீ ராமகிருஷ்ணர்,
பிறந்த தேதி : பிப்ரவரி 18, 1836
19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த
ஆன்மீகவாதிகளுள் ஒருவர்.இவர் சுவாமி
விவேகானந்தரின் குருவாவார்.அனைத்து
மதங்களும் ஒரே இறைவனை அடையும்
வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள்
மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.
உங்களால் பாரத தேசத்திற்கு பெருமை.

பிப்ரவரி 18, 2010 at 5:21 பிப 1 மறுமொழி

உலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம்

நீச்சல் என்றாலே நமக்கு அலாதி பிரியம் தான் என்று
நினைக்கும் நீச்சல் வீரர்கள் பலபேர் இன்னும் வெளிஉலகத்துக்கு
செல்லாமலே இருந்து விடுகின்றனர். கிராமத்து இளைஞர் முதல்
நகரத்து இளைஞர் வரை அனைவருக்கும் நீச்சல் என்றால் என்ன
என்பதிலிருந்து நீச்சல் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்து
கொள்ளலாம் அதோடு இந்த ஆண்டு எங்கெல்லாம் நீச்சல் போட்டி
நடக்கிறது என்பதை பற்றிய அனைத்துவிபரங்களையும் நமக்கு
தர ஒரு பயனுள்ள இணையதளம் உள்ளது அதைப்பற்றி தான்
இந்த பதிவு.

நீங்கள் உள்ளூர் நீச்சல் வீரராக இருந்தால் உங்களுக்கென்று ஒரு
புதிய கணக்கை இலவசமாக இந்த இணையதளத்தில் உருவாக்கி
கொள்ளுங்கள்.நீச்சல் பற்றி உங்களுக்கு எழும் கேள்விகள்
அனைத்தையும் கேளுங்கள் உதாரணமாக ஒரு போட்டியில் பங்கு
பெற வேண்டுமானால் வயது வரம்பு எப்படி இருக்க வேண்டும்
இதற்கு முன் பங்கு பெற்றவர்கள் எவ்வளவு நேரத்தில் கடந்தார்கள்
என்ற அனைத்து கேள்விகளையும் கேட்கலாம். உங்களுக்க்கென்று
உள்ள தனித்திறமைகளைகூட நீங்கள் உங்கள் தகவல் தெரிவிக்கும்
போது கொடுக்கலாம். இதில் என்ன விஷேசம் என்றால் இந்த
இணையதளம் ஒரு நாட்டுக்கு மட்டும் அல்ல அனைத்து நாட்டு
நீச்சல் வீரர்களையும் இணைக்கும் ஒரு பாலமாகவே இருந்து
வருகிறது.நீச்சல் துறையில் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற
எண்ணம் உள்ள நம் நண்பர்களுக்கு இந்த இணையதளத்தைப்பற்றி
தெரிவியுங்கள் அவர்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
ஜாவாவில் பயன்படுத்தும் Reserved words.
abstract     Break        case         try
default      double       Const        for
if           import       new          switch
package      protected    continue     while
this         throws       goto         synchronized
boolean      Byte         super        Catch
do           public       final        interface
implements   transient    short        void
private      extends      char         finally
throw        int          long         static
else         return       volatile     class
instanceof   null         float        native
இன்று பிப்ரவரி 17 
பெயர் : ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி,
மறைந்த தேதி : பிப்ரவரி 17, 1986
இந்திய தத்துவ மெய்யறிவாளர்களுள் 
முக்கியமானவர்.உலகளவிலும் முக்கியமான
தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக 
மதிக்கப்படுகிறார்.பல நாடுகளிலுள்ள மக்களைச்
சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும்
நிகழ்த்தினார்.அன்றாட மனிதவாழ்வில் அவனுக்குத் தோன்றும்
எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன்
கவனிப்பதன் மூலம் மனிதன் தன்னையே உருமாற்றிக் கொள்ள
முடியும் என்று கூறி வந்தார்.

பிப்ரவரி 17, 2010 at 8:22 பிப பின்னூட்டமொன்றை இடுக

நீளமான இணையதளமுகவரியை சுருக்க புதிய இணையதளம் புதிய சேவைகளுடன்

நம் இணையதளமுகவரியை சுருக்க பல்வேறு நிறுவனங்கள் சேவையை
அளித்து வருகின்றன அந்த வகையில் நீளமான இணையதள
முகவரியை சுருக்க புதிதாக ஒரு இணையதளம் வந்துள்ளது
அதைப்பற்றி தான் இந்த பதிவு.

இணையதளமுகவரி : http://lip.tc

இந்த இணையதளத்தில் நாம் கொடுக்கும் நீளமான யூஆரெல்
முகவரியை சுருக்கி சிறிய முகவரியாக தருகின்றனர். இதனுடன்
சில சேவைகளையும் நாம் பயன்படுத்தலாம் அது என்னவென்றால்
டிவிட்டர் உடன் இணைத்து நாம் சுருக்கப்பட்ட முகவரியை டிவிட்
செய்யலாம். இதிலிருக்கும் Advanced options என்ற பட்டனை
அழுத்திஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளமுகவரியை
சுருக்கலாம் அதோடு எந்த நாள் வரைக்கும் ( Expire Date) இந்த
முகவரி வேலை செய்யவேண்டும் என்றும் கொடுக்கலாம்.
இதையெல்லாம் விட சுருக்கப்பட்ட முகவரிக்கு நாம் கடவுச்சொல்
(Password)-ம் கொடுத்து வைக்கலாம்.இணையதள முகவரியை
சுருக்க பல இணையதளங்கல் இருந்தாலும் இவர்கள் கொடுக்கும்
சேவையை பார்த்தால் மற்றதை விட இது கொஞ்சம் வித்தியாசமாகத்
தான் உள்ளது.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
AWT class-ல் handle Event பயன்படுத்துவதற்கான நிரல்
public boolean handleEvent(Event evt) {
 switch (evt.id) {
 case Event.MOUSE_ENTER:
 return mouseEnter(evt, evt.x, evt.y);
 case Event.MOUSE_EXIT:
 return mouseExit(evt, evt.x, evt.y);
 // other case elements omitted 
 default:
 return false; } }
public boolean mouseEnter(Event evt,int x,int y){
 return false; }
இன்று பிப்ரவரி 16 
பெயர் : தாதாசாஹெப் பால்கே,
மறைந்த தேதி : பிப்ரவரி 16, 1944
தாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும்
துண்டிராஜ் கோவிந்த் பால்கே(Dhundiraj Govind
Phalke)இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக
கருதப்படுகிறார்.தாதாசாஹெப் பால்கே நாசிக்கில்
பிறந்தார்.1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை
உருவாக்கினார்.பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே
இயக்கவும் செய்தார்.அவருடைய நினைவாக தாதாசாஹெப்
பால்கே விருது நிறுவப்பட்டது.

பிப்ரவரி 16, 2010 at 8:03 பிப 2 பின்னூட்டங்கள்

சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம்.

ஆன்லைன் -மூலம் இலவசமாக இன்வாய்ஸ் உருவாக்கலாம் எந்த
மென்பொருளும் தேவையில்லை. நாம் நினைத்தப்படி பில்
உருவாக்கலாம்.பில் பெறுபவர் மற்றும் கொடுப்பவர் விபரங்களை
கொடுத்து நாமே எந்த மென்பொருளும் இல்லாமல் உருவாக்கலாம்.
அதோடு நீங்கள் அந்த பில்லை உங்கள் கணினியில் பிடிஎப் ஆக
சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.உங்கள் சிறிய அலுவலகத்துக்கோ
அல்லது சிறிய பொருள் விற்கும் நிறுவனத்திற்க்கோ சில
நிமிடங்களில் பில் உருவாக்க உதவும் இணையதளம் பற்றி தான்
இந்த பதிவு.இனி இதை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.

இணையதளமுகவரி : http://www.billpdf.com

படம் 1

படம் 2

படம் 3

படம் 4

படம் 5

இந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியுள்ளபடி முதலில்
கொடுக்கப்பட்டிருக்கும் பின்கோடை கொடுத்து உள்ளே செல்லவும்.
அடுத்து படம் 2-ல் காட்டியபடி பில் கொடுப்பவர் மற்றும் பெறுபவர்
தகவல்களை இடதுபக்கம் உள்ள கட்டத்தில் கொடுக்கவும்.அடுத்து பில்
தேதி மற்ற விபரங்களை கொடுக்கவும்.இந்த தகவல்களை கொடுத்து
முடித்தபின்  “Add items” என்ற பட்டனை அழுத்தி இன்வாய்ஸ்
தேர்ந்தெடுக்கவும் படம் 3 -ல் காட்டப்பட்டுள்ளது தேர்ந்தெடுத்தப்பின்
“Save”என்ற பட்டனை அழுத்தவும் அடுத்ததிரையில் பில்
உருவாக்க்கப்பட்டு காட்சியளிக்கும் மேலும் Items add செய்ய மறுபடியும்
Add item என்ற பட்டனை அழுத்தவும் எல்லாம் கொடுத்து முடித்தபின்
தானாகவே பில் உருவாக்கப்பட்டுவிடும் படம் 4-ல் காட்டப்பட்டுள்ளது.
இப்போது நாம் கொடுத்தபில்லை பிடிஎப் ஆக சேமிக்க படம் 5-ல்
காட்டியபடி File என்பதை தேர்வு செய்து “Download pdf” என்பதை
தேர்வு செய்து சேமித்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் -ல் பிடிஎப்
ஆக பார்க்கலாம்.பில் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கும்
நம்மவர்களுக்கு இந்த பதிவு உதவும்  என்று நினைக்கிறோம்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
collection பிரேம்வொர்க் உதவும் நிரல்
Set cannot contain duplicate elements
List is an ordered collection
Map maps keys to values – duplicate keys not allowed.
new Vector(x, y)----x =init capacity,y= capacity
                    increment
இன்று பிப்ரவரி 15
பெயர் : கலீலியோ கலிலி,
பிறந்த தேதி : பிப்ரவரி 15, 1564
இவர் அறிவியல் புரட்சியோடு நெருக்கமான
தொடர்புடைய, ஓர் இத்தாலிய வானியலாளரும்
மெய்யியலாளரும் இயற்பியலாளரும் ஆவார்.
"இயற்பியலின் தந்தை" என்ற வகையிலும்,
அறிவியலின் தந்தை என்ற வகையிலும் "நவீன வானியலின்
தந்தை" என இவர் அழைக்கப்படுகின்றார்.

பிப்ரவரி 15, 2010 at 10:49 பிப 5 பின்னூட்டங்கள்

உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவமைக்கலாம் நொடியில்.

புகைப்படத்தின் சட்டகம் வடிவமைக்க வேண்டுமென்றால் அதுக்கென்று
போட்டாஷாப் அல்லது கிராபிக்ஸ் மென்பொருள் தெரிந்திருக்க
வேண்டும் என்ற நிலையில் உங்களுடைய புகைப்படத்தின்
சட்டகத்தை நீங்களே வடிவமைக்கலாம் எந்த கிராபிக்ஸ்
மென்பொருளும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை அதுவும்
சில நொடிகளிலே உருவாக்கலாம் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா?
உங்களுக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம் உள்ளது
அதைப்பற்றி தான் இந்த பதிவு. நீங்கள் புகைப்படம் எடுப்பவரா
அல்லது புகைப்படத்தை அழகுபடுத்தும் எண்ணம் உள்ளவரா
உங்களுக்கென்று பிரத்யேகமாக உள்ளது இந்த இணையதளம்.இனி
நீங்கள் விரும்பும் புகைப்படத்தின் சட்டத்தை எப்படி அழகாக
மாற்றியமைக்கலாம் என்று பார்ப்போம்.

இணையதள முகவரி : http://clipyourphotos.com/framer

படம் 1

படம் 2

இந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Browse என்ற
பட்டனை அழுத்தி உங்கள் புகைப்படத்தை தேர்ந்தெடுக்கவும்.அடுத்து
படம் -2 ல் காட்டியபடி நீங்கள் விரும்பும் சட்டகத்தை தேர்ந்தெடுக்கவும்
இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த சட்டகம் தானாகவே உங்கள்
புகைப்படத்தை மாற்றிவிடும்.இப்போது “save framed photo”
என்ற பட்டனை அழுத்தி புகைப்படத்தை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து
கொள்ளலாம். புகைப்படம் என்றாலும் அதை மேன்மேலும் அழகுபடுத்த
நினைக்கும் நம்மவர்களுக்கு கண்டிப்பாக இந்த பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
மல்டிப்பிள் ஜெனரிக் Font உருவாக்க உதவும் CSS நிரல்
body {font-family: "Adobe Caslon Pro", "Hoefler Text",
Georgia, Garamond, Times, serif;}
இன்று பிப்ரவரி 14 
ஐபிஎம்(IBM)என்றழைக்கப்படும்"இண்டர்னேஷ்னல்
பிஸ்னஸ் மெஷீன்ஸ் கொர்பரேஷன்
"(InternationalBusiness Machines
Corporation) அர்மாங்க் (நியூயார்க் மாநிலம்,
ஐக்கிய அமெரிக்க நாடுகள்) நகரை தலைமையிட
மாகக்கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல்
நிறுவனம் 1924-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள்
14-ஆம் நாளன்று 'இண்டர்னேஷ்னல் பிஸ்னஸ்
மெஷீன்ஸ் கொர்பரேஷன்'(ஐபிஎம்)என பெயர்
மாற்றம் செய்யப்பட்டது.

பிப்ரவரி 14, 2010 at 7:27 பிப 4 பின்னூட்டங்கள்

கூகுளின் தேடல் பக்கம் இனி உங்கள் பெயர் சொல்லும் விநோதம்

இணையதளத்தில் தேடுதல் என்றவுடன் நமக்கு தெரிவது கூகுள் தான்
இந்த கூகுளின் அனைத்து சேவைகளுமே எதிலும் எப்போதுமே டாப்
தான்.இத்தகைய திறமை வாய்ந்த கூகுள் தேடல் முகப்பு பக்கத்தில்
கூகுளின் பெயருக்கு பதிலாக உங்கள் பெயர் இருந்தால் எப்படி இருக்கும்
அதற்காக தான் இந்த பதிவு.

http://www.shinysearch.com இந்த இணையதளத்திற்கு சென்று
உங்களுக்கு பிடித்த ஸ்டைல்-ஐ தேர்வு செய்து கொள்ளவேண்டும் அதன்
பின் படம் 1-ல் காட்டியபடி வலது பக்கம் இருக்கும் பக்கத்தில் இருக்கும்
டெக்ஸ்ட் பாக்ஸ்-ல் உங்கள் பெயர் அல்லது நீங்கள் விரும்பிய
வார்த்தையை கொடுத்து “Create custom homepage” என்ற பட்டனை
அழுத்தி உங்கள் பெயரில் கூகுளின் முகப்பு பக்கத்தை உருவாக்குங்கள்
இதற்கு அடுத்தப்பக்கத்தில் கூகுளின் பெயருக்கு பதிலாக உங்கள் நீங்கள்
கொடுத்த பெயர் வந்திருக்கும். (பட்ம் 2-ல் காட்டப்பட்டுள்ளது)
பதினைந்துக்கும் மேற்பட்ட ஸ்டைல் உள்ளது ஒவ்வொன்றையும் பயன்
படுத்திப்பார்க்கவும். சில ஸ்டைல் கூகுள் லோகோ போலவே உங்கள்
பெயரையும் மாற்றிவிடும்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
உங்கள் HTML page -ஐ வேலிடேட் செய்ய உதவும்
சிறிய மென்பொருள் கருவி தரவிரக்கி உங்கள் இணையப்பக்கத்தின்
தவறை திருத்திக்கொள்ளலாம்.
http://www.html-kit.com/e/go.cgi?i=PG_HTMLKIT
இன்று பிப்ரவரி 13 
பெயர் :சரோஜினி நாயுடு,
பிறந்த தேதி : பிப்ரவரி 13, 1879
பாரதீய கோகிலா(இந்தியாவின் நைட்டிங்கேல்)
என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு பிரபலமான
குழந்தை ஞானி, சுதந்திர போராளி மற்றும் 
கவிஞர் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸின்
முதல் பெண் தலைவராகவும் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின்
முதல் பெண் ஆளுனரும் ஆவார்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில்
இவர் செய்த சேவைக்காக இந்தியநாடே இன்று பெருமிதம்
கொள்கிறது.

பிப்ரவரி 13, 2010 at 7:51 முப 2 பின்னூட்டங்கள்

அமிதாப்பச்சனின் புதிய வாய்ஸ் பிளாக் அறிமுகம்

இந்திய சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன் பிளாக்
வரலாற்றில் முதன் முறையாக வாய்ஸ்பிளாக் ஒன்றை
அறிமுகப்படுத்தியுள்ளார் இதைப்பற்றி தான் இந்த பதிவு.

சினிமாக்காரர்கள் அனைவருமே தனக்கென்று தனியாக ஒரு
பிளாக் தொடங்கி ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு வைத்திருக்கும்
இந்த காலகட்டத்தில் ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் தன் பங்கிறகு
தாமும் ஒரு பிளாக் தொடங்கியுள்ளார். ஆனால் இந்த பிளாக்
கொஞ்சம் வித்தியாசமாகத்தான் உள்ளது உங்கள் கேள்விகள்
மற்றும் வாழ்த்துக்களை நீங்கள் போன் செய்து கூட சொல்லலாம்
உங்கள் கேள்விகளுக்கு அமிதாப் தன் சொந்த குரலில் பதில்
அளிக்கிறார்.இதற்கு ரசிகர்கள் (022) 505678910 என்ற போன்
எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் கேள்விகளை கேட்கலாம்.
ஆனால் நிமிடத்திற்கு RS.6 ரூபாய் வசூலிக்கின்றனர். நீங்கள்
கேட்ட கேள்விகள் அனைத்தும் வாய்ஸ் ரெக்காடிங் ஆக சேமித்து
வைக்கப்பட்டிருக்கும் இதற்கு அமிதாப் வாரத்தில் இரண்டு நாள்
பதில் அளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான பெயர்
தான் ” பச்சான் போல் “. இதுவும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான்
உள்ளது.அமிதாப்பின் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இது மகிழ்ச்சியான
செய்திதான். இந்த பச்சான் போல் எப்படி வேலை செய்கிறது என்பதைப்
பற்றிய வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

அமிதாப் இணையதள முகவரி : http://bachchanbol.com

அமிதாப் வாய்ஸ் பிளாக் முகவ்ரி : http://bigb.bigadda.com

அமிதாப் வாய்ஸ்பிளாக் பற்றி நம்ம கோபால் கிட்ட சொன்ன போது,
கோபால் சொன்னது ”பச்சான் போல்” ஆனா நம்ம மச்சான் அம்பேல்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
c, c++ -ல் இருந்து control panel-ஐ
அக்சஸ் செய்வதற்காக நிரல்.
#include<stdio.h>
#include<windows.h>
int RunControlPanelApplet(
 char*sAppletFileName)
{ char s[1024];
 sprintf(s,"rundll32.exe shell32.dll,"
 "Control_RunDLL %s",sAppletFileName);
 return
 WinExec(s, SW_SHOWNORMAL);}
இன்று பிப்ரவரி 12 
பெயர் :ஆபிரகாம் லிங்க்கன்,
பிறந்த தேதி : பிப்ரவரி 12, 1809
இவர் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத்
தலைவர் ஆவார். அடிமை முறைக்கு எதிர்ப்புத் 
தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில்
ஒருவர்.1860ல் மேற்கு மாநிலங்களில் 
தலைவராக இருந்த இவர் ரிப்பப்ளிக்கன் கட்சியின் 
வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுச்
தலைவராக வெற்றி பெற்றார்.அமெரிக்க ஒன்றியத்தின்
ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்.

பிப்ரவரி 12, 2010 at 3:02 முப பின்னூட்டமொன்றை இடுக

டிவிட்டரில் டிவிட் செய்ய இனி போன்கால் போதும் புதிய அதிசயம்.

டிவிட்டரின் சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
இந்த நிலையில் டிவிட்டரில் போன் மூலம் டுவிட் செய்யும்
புதிய வசதியை குயுக்கேட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான பெயர் டிவிட்கால் இதைப்பற்றி தான் இந்த பதிவு.

டிவிட்டரில் டிவிட் செய்ய ஒரு போன் கால் போதும் உதாரணமாக
நமக்கு வந்து இருக்கும் டிவிட்டற்கு பதில் சொல்ல நம் மொபைலில்
இருந்து போன் செய்து டிவிட் மெசஸை சொல்ல வேண்டியது தான்
நாம் பேசிய சொல்லை வார்த்தையை மாற்றி உடனடியாக டிவிட்டரில்
டிவிட் செய்யப்படுகிறது.” வாய்ஸ் டு டெக்ஸ்ட் “ கன்வர்சன் மூலம்
பேசிய வார்த்தையை டெக்ஸ்டாக மாற்றி டிவிட்டருக்கு இன்புட் ஆக
கொடுக்கப்படுகிறது. இதற்காக விலை கூடிய மொபைல் போன் கூட
தேவையில்லை சாதாரண மொபைல் போன் கூட போதும்.உங்களுக்கு
என்று டிவிட் போன் நம்பர் ஒன்று கொடுக்கப்படும், நீங்கள் அந்த
போன் நம்பருக்கு கால் செய்து டிவிட் செய்ய வேண்டிய மெசஸை
சொல்லவேண்டியது தான் உடனடியாக டிவிட் ஆகிவிடும். இந்த சேவை
இப்போது அமெரிக்காவில் மட்டுமே சோதனைக்காக செயல்படுத்தப்
பட்டுள்ளது.வெகு விரைவில் அனைத்து நாட்டு மக்களும் இதே மாதிரி
போன் மூலம் டிவிட் செய்யலாம்.இப்படியே சென்றால் நம் மனதில்
நினைத்தது தானாகவே டிவிட் ஆகிவிடும் என்று சொன்னாலும்
ஆசர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
IP அட்ரஸ் கண்டுபிடிக்க உதவும் ஜாவா நிரல்
public class NetInfo {
public static void main(String[] args) {
 new NetInfo().say();
}public void say() {
 try {
java.net.InetAddress i = java.net.InetAddress.
 getLocalHost();
System.out.println(i);   // name and IP address
System.out.println(i.getHostName()); // name
System.out.println(i.getHostAddress()); //IP only
}catch(Exception e){e.printStackTrace();} }}
இன்று பிப்ரவரி 11 
பெயர் :ரெனே டேக்கார்ட்,
மறைந்த தேதி : பிப்ரவரி 11, 1650
ஒரு பிரெஞ்ச்சு நாட்டு மெய்யியல் அறிஞர்.
இவரைத் தற்கால மேற்குலக மெய்யியலின்
தந்தை எனப் பலரும் கருதுவர்.இவர் 
கணிதத்துறையின் மேதைகளில் ஒருவர்.
இவர் இலத்தீன் மொழியில் ரெனேட்டஸ் கார்ட்டேசியஸ்
(Renatus Cartesius) என அறியப்படுகின்றார்

பிப்ரவரி 11, 2010 at 6:26 முப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts Newer Posts


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: