மழையோடு விளையாட ஒரு புதுமையான இணையதளம்
பிப்ரவரி 26, 2010 at 10:54 பிப 7 பின்னூட்டங்கள்
பல நேரங்களில் வேலைச்சுமை , டென்சன் என அத்தனையும்
நம்மை ஆட்கொண்டாலும் அந்த நேரம் மழை வந்தால் நாம்
அடையும் மகிழ்ச்சியும் தனி சுகம் தான் அத்தனை கவலைகளும்
பறந்து விட்டதுபோல் தோன்றும் அந்த வகையில் மழை வராத
நேரத்தில் நீங்கள் நினைக்கும் போது மழை சத்தத்தை கேட்க ஒரு
இணையதளம் வந்துள்ளது அதைப்பற்றி தான் இந்த பதிவு.
இன்னும் சில பேர் மழைசத்தத்தை கேட்டவுடன் மகிழ்ச்சியாகி
விடுவர் குழந்தைகளும் இந்த மழை சத்தத்தை கேட்டதும்
வெளியில் சென்று மழைநீரில் மகிழ்ச்சியாக ஆட்டம் போட
நினைப்பர் அப்படி மழை நீரை ரசிக்கும் குழந்தை உள்ளம்
கொண்டவர்கள் இந்த இணையதளத்திற்கு சென்று நாம் மழையின்
சத்தத்தை காது குளிர கேட்கலாம். தொடர்ந்து கேட்டு கொண்டே
இருக்கலாம்.இணையப்பக்கமும் முழுவதும் மழைநீரால்
நனைந்துள்ளது. இனி உங்களுக்கு எப்போதெல்லாம்
போரடிக்கிறதோ அந்த நேரத்தில் நீங்கள் இந்த மழை சத்தத்தை
கேட்கலாம்.
இணையதள முகவ்ரி : http://www.rainymood.com
அதோடு நீங்கள் மழையில் விளையாடியதை உங்கள் நண்பருக்கு
பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்தும் கொள்ளலாம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் ஜாவாவில் பயன்படுத்தப்படும் மெத்த்ட் renameTo() Renames the file represented by the path name delete() Deletes the file or directory represented by the path name canRead() Checks whether the application can read from the specified file
இன்று பிப்ரவரி 26பிப்ரவரி 26,1991-ல் உலகம் பரவிய வலையை (WWW) அறிமுகப்படுத்திய டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்ற உலகின் முதலாவது இணைய உலாவியை அறிமுகப்படுத்தியநாள் தான் இன்று. (HTTP)மொழியில் எழுதப்பட்ட பக்கங்களைப் பார்க்க நெக்சஸ் உலாவி பெரிதும் உதவியது.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: மழையோடு விளையாட ஒரு புதுமையான இணையதளம்.
1.
யூர்கன் க்ருகியர் | 7:09 முப இல் பிப்ரவரி 27, 2010
மழைச்சத்தம் அருமை.
இடிதான் இடிக்க மாட்டேனென்கிறது !
2.
முனைவர்.இரா.குணசீலன் | 2:51 முப இல் பிப்ரவரி 28, 2010
அட..
இதெக்கெல்லாம் கூட இணைய தளமா?
நல்ல பகிர்வு நண்பரே.
3.
Internet SpeedTest | 7:05 முப இல் பிப்ரவரி 28, 2010
உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி தகவல்கள் எப்படி கிடைகிறது.
மிக அருமையான தகவல்
நன்றி
4.
வெங்கடேஷ் | 6:02 பிப இல் பிப்ரவரி 28, 2010
சிறுவயதில் டீவிகளில் நிகழ்ச்சிகள் இல்லாத போது
வெள்ளை ஸ்கிரீனில் ஷ்ஷ்ஷ் என்ற சத்தத்தை வைத்து
மழை சத்தம் கேட்பதாக நினைத்துக் கொள்வோம் அந்த
ஞாபகம் இப்பொழுது வருகிறது நண்பரே. நல்ல பதிவு நண்பரே நன்றி
5.
Baski | 7:36 பிப இல் மார்ச் 10, 2010
Rainymood is really relaxing. Thanks for sharing.
6.
நடராஜன் வி. | 4:47 பிப இல் பிப்ரவரி 5, 2011
பதிப்பிற்கு நன்றி
7.
winmani | 5:11 பிப இல் பிப்ரவரி 5, 2011
@ நடராஜன் வி
நன்றி