புகைப்படத்தின் எழுத்தை படிக்கும் கூகுளின் புதிய காகிளஸ்
பிப்ரவரி 18, 2010 at 5:21 பிப 1 மறுமொழி
நாளுக்கு நாள் கூகுளின் சேவை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது
அந்த வகையில் விரைவில் வெளிவர இருக்கும் கூகுளின்
காகிளஸ் பற்றி விரிவான தகவல்களை நாம் இந்த பதிவில்
பார்க்க இருக்கிறோம்.
கூகுள் காகிளஸ் என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன்,
நாம் சில நேரங்களில் பொதுநூலகத்திற்கு சென்று சில அறிய
வகை நூல்களை படிப்போம். அந்த நூல்களை கம்ப்யூட்டரில்
ஸ்கேன் செய்ய கூட சில நேரங்களில் அனுமதி வழங்கப்படாது
அப்படி அனுமதி வழங்கப்பட்டாலும் அந்த புத்தகம் முழுவதும்
ஸ்கேன் செய்வதென்றால் கூட நமக்கு அதிகஅளவு நேரம்
கிடைப்பதில்லை இப்படிபட்ட நமக்கு தான் கூகுளின் காகிளஸ்
அதிகமாகவே உதவப்போகிறது எப்படிஎன்றால் நீங்கள் ஒரு
புத்தகத்தில் எந்த பக்கம் வேண்டுமோ அந்த பக்கத்தின் மேல்
கூகுள் காகிளஸ் அப்ப்ளிகேசன் இன்ஸ்டால் செய்யப்பட்ட
மொபைல் போன் வைத்து ஸ்கேன் செய்யாலாம் நொடில் அதை
Text ஆக மாற்றி கொடுக்கிறது அதை நம் மொபைலில் சேமித்தும்
வைத்துக்கொள்ளலாம். புத்தகத்திற்கு மட்டுமல்ல ஒரு மருந்து
பாட்டிலில் இருக்கும் எழுத்தைக் கூட டெக்ஸ்ட் ஆக மாற்றி
சேமித்து வைத்துக்கொள்ளலாம்.தற்போது 52 மொழிகளுக்கு
துணை புரியும் வகையில் இந்த கூகுள் காகிளஸ் வெளிவர
இருக்கிறது. இனி நாம் இணையதளத்தில் தேடும் படங்களை
கூகிள் துல்லியமாக எடுத்துக்கொடுக்கும் எப்படி என்றால் அந்த
படத்தில் எங்காவது இருக்கும் பெயரை வைத்து கண்டுபிடித்து
கொடுக்கும். இது எப்படி செயல்படுகிறது என்பதைப்பற்றிய
ஒரு சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் ஜாவாவில் கோடிங் நிலையை விரைவாக தெரிந்துகொள்ள உதவும் மெத்தட் isAlive(). isAlive() Tests if the thread is alive; returns a Boolean value
இன்று பிப்ரவரி 18பெயர் : ஸ்ரீ ராமகிருஷ்ணர், பிறந்த தேதி : பிப்ரவரி 18, 1836 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர்.இவர் சுவாமி விவேகானந்தரின் குருவாவார்.அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர். உங்களால் பாரத தேசத்திற்கு பெருமை.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: புகைப்படத்தின் எழுத்தை படிக்கும் கூகுளின் புதிய காகிளஸ்.
1.
nanrasitha | 12:50 பிப இல் பிப்ரவரி 19, 2010
“இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்”
மிகவும் பயனுள்ளதாக உள்ளது