நீளமான இணையதளமுகவரியை சுருக்க புதிய இணையதளம் புதிய சேவைகளுடன்
பிப்ரவரி 16, 2010 at 8:03 பிப 2 பின்னூட்டங்கள்
நம் இணையதளமுகவரியை சுருக்க பல்வேறு நிறுவனங்கள் சேவையை
அளித்து வருகின்றன அந்த வகையில் நீளமான இணையதள
முகவரியை சுருக்க புதிதாக ஒரு இணையதளம் வந்துள்ளது
அதைப்பற்றி தான் இந்த பதிவு.
இணையதளமுகவரி : http://lip.tc
இந்த இணையதளத்தில் நாம் கொடுக்கும் நீளமான யூஆரெல்
முகவரியை சுருக்கி சிறிய முகவரியாக தருகின்றனர். இதனுடன்
சில சேவைகளையும் நாம் பயன்படுத்தலாம் அது என்னவென்றால்
டிவிட்டர் உடன் இணைத்து நாம் சுருக்கப்பட்ட முகவரியை டிவிட்
செய்யலாம். இதிலிருக்கும் Advanced options என்ற பட்டனை
அழுத்திஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளமுகவரியை
சுருக்கலாம் அதோடு எந்த நாள் வரைக்கும் ( Expire Date) இந்த
முகவரி வேலை செய்யவேண்டும் என்றும் கொடுக்கலாம்.
இதையெல்லாம் விட சுருக்கப்பட்ட முகவரிக்கு நாம் கடவுச்சொல்
(Password)-ம் கொடுத்து வைக்கலாம்.இணையதள முகவரியை
சுருக்க பல இணையதளங்கல் இருந்தாலும் இவர்கள் கொடுக்கும்
சேவையை பார்த்தால் மற்றதை விட இது கொஞ்சம் வித்தியாசமாகத்
தான் உள்ளது.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் AWT class-ல் handle Event பயன்படுத்துவதற்கான நிரல் public boolean handleEvent(Event evt) { switch (evt.id) { case Event.MOUSE_ENTER: return mouseEnter(evt, evt.x, evt.y); case Event.MOUSE_EXIT: return mouseExit(evt, evt.x, evt.y); // other case elements omitted default: return false; } } public boolean mouseEnter(Event evt,int x,int y){ return false; }
இன்று பிப்ரவரி 16பெயர் : தாதாசாஹெப் பால்கே, மறைந்த தேதி : பிப்ரவரி 16, 1944 தாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே(Dhundiraj Govind Phalke)இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.தாதாசாஹெப் பால்கே நாசிக்கில் பிறந்தார்.1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார்.பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.அவருடைய நினைவாக தாதாசாஹெப் பால்கே விருது நிறுவப்பட்டது.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நீளமான இணையதளமுகவரியை சுருக்க புதிய இணையதளம் புதிய சேவைகளுடன்.
1.
raja | 9:51 பிப இல் ஜூன் 3, 2010
நீங்கள் கூறிய URL லை எப்படி சுருக்குவது பற்றிய தகவலுக்கு நன்றி
2.
winmani | 9:58 பிப இல் ஜூன் 3, 2010
@ raja
மிக்க நன்றி