உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவமைக்கலாம் நொடியில்.
பிப்ரவரி 14, 2010 at 7:27 பிப 4 பின்னூட்டங்கள்
புகைப்படத்தின் சட்டகம் வடிவமைக்க வேண்டுமென்றால் அதுக்கென்று
போட்டாஷாப் அல்லது கிராபிக்ஸ் மென்பொருள் தெரிந்திருக்க
வேண்டும் என்ற நிலையில் உங்களுடைய புகைப்படத்தின்
சட்டகத்தை நீங்களே வடிவமைக்கலாம் எந்த கிராபிக்ஸ்
மென்பொருளும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை அதுவும்
சில நொடிகளிலே உருவாக்கலாம் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா?
உங்களுக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம் உள்ளது
அதைப்பற்றி தான் இந்த பதிவு. நீங்கள் புகைப்படம் எடுப்பவரா
அல்லது புகைப்படத்தை அழகுபடுத்தும் எண்ணம் உள்ளவரா
உங்களுக்கென்று பிரத்யேகமாக உள்ளது இந்த இணையதளம்.இனி
நீங்கள் விரும்பும் புகைப்படத்தின் சட்டத்தை எப்படி அழகாக
மாற்றியமைக்கலாம் என்று பார்ப்போம்.
இணையதள முகவரி : http://clipyourphotos.com/framer

படம் 1

படம் 2
இந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Browse என்ற
பட்டனை அழுத்தி உங்கள் புகைப்படத்தை தேர்ந்தெடுக்கவும்.அடுத்து
படம் -2 ல் காட்டியபடி நீங்கள் விரும்பும் சட்டகத்தை தேர்ந்தெடுக்கவும்
இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த சட்டகம் தானாகவே உங்கள்
புகைப்படத்தை மாற்றிவிடும்.இப்போது “save framed photo”
என்ற பட்டனை அழுத்தி புகைப்படத்தை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து
கொள்ளலாம். புகைப்படம் என்றாலும் அதை மேன்மேலும் அழகுபடுத்த
நினைக்கும் நம்மவர்களுக்கு கண்டிப்பாக இந்த பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் மல்டிப்பிள் ஜெனரிக் Font உருவாக்க உதவும் CSS நிரல் body {font-family: "Adobe Caslon Pro", "Hoefler Text", Georgia, Garamond, Times, serif;}
இன்று பிப்ரவரி 14ஐபிஎம்(IBM)என்றழைக்கப்படும்"இண்டர்னேஷ்னல் பிஸ்னஸ் மெஷீன்ஸ் கொர்பரேஷன் "(InternationalBusiness Machines Corporation) அர்மாங்க் (நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) நகரை தலைமையிட மாகக்கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல் நிறுவனம் 1924-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 14-ஆம் நாளன்று 'இண்டர்னேஷ்னல் பிஸ்னஸ் மெஷீன்ஸ் கொர்பரேஷன்'(ஐபிஎம்)என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவைமக்கலாம் நொடியில்..
1.
geetha | 12:18 பிப இல் பிப்ரவரி 15, 2010
good
useful!
2.
ramanans | 1:59 பிப இல் பிப்ரவரி 15, 2010
suuppar
3.
sathish satz | 9:28 பிப இல் ஜூலை 30, 2011
இது போல் ஒரு தளம் நான் பார்த்ததே இல்லை விண்மணி என் அன்றாடக் கண்மணி
4.
winmani | 8:22 முப இல் ஜூலை 31, 2011
@ sathish
மிக்க நன்றி