அமிதாப்பச்சனின் புதிய வாய்ஸ் பிளாக் அறிமுகம்
பிப்ரவரி 12, 2010 at 3:02 முப பின்னூட்டமொன்றை இடுக
இந்திய சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன் பிளாக்
வரலாற்றில் முதன் முறையாக வாய்ஸ்பிளாக் ஒன்றை
அறிமுகப்படுத்தியுள்ளார் இதைப்பற்றி தான் இந்த பதிவு.
சினிமாக்காரர்கள் அனைவருமே தனக்கென்று தனியாக ஒரு
பிளாக் தொடங்கி ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு வைத்திருக்கும்
இந்த காலகட்டத்தில் ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் தன் பங்கிறகு
தாமும் ஒரு பிளாக் தொடங்கியுள்ளார். ஆனால் இந்த பிளாக்
கொஞ்சம் வித்தியாசமாகத்தான் உள்ளது உங்கள் கேள்விகள்
மற்றும் வாழ்த்துக்களை நீங்கள் போன் செய்து கூட சொல்லலாம்
உங்கள் கேள்விகளுக்கு அமிதாப் தன் சொந்த குரலில் பதில்
அளிக்கிறார்.இதற்கு ரசிகர்கள் (022) 505678910 என்ற போன்
எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் கேள்விகளை கேட்கலாம்.
ஆனால் நிமிடத்திற்கு RS.6 ரூபாய் வசூலிக்கின்றனர். நீங்கள்
கேட்ட கேள்விகள் அனைத்தும் வாய்ஸ் ரெக்காடிங் ஆக சேமித்து
வைக்கப்பட்டிருக்கும் இதற்கு அமிதாப் வாரத்தில் இரண்டு நாள்
பதில் அளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான பெயர்
தான் ” பச்சான் போல் “. இதுவும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான்
உள்ளது.அமிதாப்பின் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இது மகிழ்ச்சியான
செய்திதான். இந்த பச்சான் போல் எப்படி வேலை செய்கிறது என்பதைப்
பற்றிய வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
அமிதாப் இணையதள முகவரி : http://bachchanbol.com
அமிதாப் வாய்ஸ் பிளாக் முகவ்ரி : http://bigb.bigadda.com
அமிதாப் வாய்ஸ்பிளாக் பற்றி நம்ம கோபால் கிட்ட சொன்ன போது,
கோபால் சொன்னது ”பச்சான் போல்” ஆனா நம்ம மச்சான் அம்பேல்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் c, c++ -ல் இருந்து control panel-ஐ அக்சஸ் செய்வதற்காக நிரல். #include<stdio.h> #include<windows.h> int RunControlPanelApplet( char*sAppletFileName) { char s[1024]; sprintf(s,"rundll32.exe shell32.dll," "Control_RunDLL %s",sAppletFileName); return WinExec(s, SW_SHOWNORMAL);}
இன்று பிப்ரவரி 12பெயர் :ஆபிரகாம் லிங்க்கன், பிறந்த தேதி : பிப்ரவரி 12, 1809 இவர் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர்.1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் ரிப்பப்ளிக்கன் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுச் தலைவராக வெற்றி பெற்றார்.அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: அமிதாப்பச்சனின் புதிய வாய்ஸ் பிளாக் அறிமுகம்.
Subscribe to the comments via RSS Feed