டிவிட்டரில் டிவிட் செய்ய இனி போன்கால் போதும் புதிய அதிசயம்.
பிப்ரவரி 11, 2010 at 6:26 முப பின்னூட்டமொன்றை இடுக
டிவிட்டரின் சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
இந்த நிலையில் டிவிட்டரில் போன் மூலம் டுவிட் செய்யும்
புதிய வசதியை குயுக்கேட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான பெயர் டிவிட்கால் இதைப்பற்றி தான் இந்த பதிவு.
டிவிட்டரில் டிவிட் செய்ய ஒரு போன் கால் போதும் உதாரணமாக
நமக்கு வந்து இருக்கும் டிவிட்டற்கு பதில் சொல்ல நம் மொபைலில்
இருந்து போன் செய்து டிவிட் மெசஸை சொல்ல வேண்டியது தான்
நாம் பேசிய சொல்லை வார்த்தையை மாற்றி உடனடியாக டிவிட்டரில்
டிவிட் செய்யப்படுகிறது.” வாய்ஸ் டு டெக்ஸ்ட் “ கன்வர்சன் மூலம்
பேசிய வார்த்தையை டெக்ஸ்டாக மாற்றி டிவிட்டருக்கு இன்புட் ஆக
கொடுக்கப்படுகிறது. இதற்காக விலை கூடிய மொபைல் போன் கூட
தேவையில்லை சாதாரண மொபைல் போன் கூட போதும்.உங்களுக்கு
என்று டிவிட் போன் நம்பர் ஒன்று கொடுக்கப்படும், நீங்கள் அந்த
போன் நம்பருக்கு கால் செய்து டிவிட் செய்ய வேண்டிய மெசஸை
சொல்லவேண்டியது தான் உடனடியாக டிவிட் ஆகிவிடும். இந்த சேவை
இப்போது அமெரிக்காவில் மட்டுமே சோதனைக்காக செயல்படுத்தப்
பட்டுள்ளது.வெகு விரைவில் அனைத்து நாட்டு மக்களும் இதே மாதிரி
போன் மூலம் டிவிட் செய்யலாம்.இப்படியே சென்றால் நம் மனதில்
நினைத்தது தானாகவே டிவிட் ஆகிவிடும் என்று சொன்னாலும்
ஆசர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் IP அட்ரஸ் கண்டுபிடிக்க உதவும் ஜாவா நிரல் public class NetInfo { public static void main(String[] args) { new NetInfo().say(); }public void say() { try { java.net.InetAddress i = java.net.InetAddress. getLocalHost(); System.out.println(i); // name and IP address System.out.println(i.getHostName()); // name System.out.println(i.getHostAddress()); //IP only }catch(Exception e){e.printStackTrace();} }}
இன்று பிப்ரவரி 11பெயர் :ரெனே டேக்கார்ட், மறைந்த தேதி : பிப்ரவரி 11, 1650 ஒரு பிரெஞ்ச்சு நாட்டு மெய்யியல் அறிஞர். இவரைத் தற்கால மேற்குலக மெய்யியலின் தந்தை எனப் பலரும் கருதுவர்.இவர் கணிதத்துறையின் மேதைகளில் ஒருவர். இவர் இலத்தீன் மொழியில் ரெனேட்டஸ் கார்ட்டேசியஸ் (Renatus Cartesius) என அறியப்படுகின்றார்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: டிவிட்டரில் டிவிட் செய்ய இனி போன்கால் போதும் புதிய அதிசயம்..
Subscribe to the comments via RSS Feed