நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம்.
பிப்ரவரி 10, 2010 at 4:38 முப 1 மறுமொழி
நிலநடுக்கம் எந்த நாட்டில் வந்தாலும் நம்மை அறியாமல் ஒரு அச்சம்
நமக்குள் வருவது இயற்கை தான். எந்த நாட்டில் நில நடுக்கம் வந்தது
என்பது முதல் இனி எந்த நாட்டில் எல்லாம் நில நடுக்கம் வரப்போகிறது
என்பதை பற்றிய அனைத்து தகவல்களையும் உடனடியாக மக்களுக்கு
தெரிவிக்க ஒரு இணையதளம் வந்துள்ளது அதைப்பற்றி தான் இந்த பதிவு.
பொதுமக்கள் அனைவரும் நிலநடுக்கத்தைப் பற்றிய தகவல்களை எந்த
நேரமும் இதில் பார்த்துக்கொள்ளலாம். உடனுக்குடன் விரிவான செய்தி
அளிக்கிறார்கள் கடந்த 48 மணி நேரத்தில் எங்கெல்லாம் நில நடுக்கம்
வந்தது என்பதை பற்றிய விபரங்களை மேப்பிலும் கொடுக்கின்றனர்.
பள்ளி , கல்லூரியில் மாணவர்களுக்கு இதை எப்படி எடுத்து சொல்லலாம்
குழந்தைகளுக்கு இதனை எப்படி எல்லாம் புரிய வைக்கலாம் என்பதை
மிகவும் தெளிவாக படத்துடன் விளக்குகின்றனர். ஆராய்ச்சி செய்யும்
மாணவர்கள் நீங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம் அனைத்தும்
தகவல்களும் உங்களுக்கு இங்கே கிடைக்கும்.
உங்களுக்கு நிலநடுக்கத்தைப் பற்றிய அனுபவம் இருக்கிறதா அப்படி
என்றால் நீங்களும் உங்கள் அனுபவததை பதிவு செய்து கொள்ளலாம்.
இதுவரை வந்த நிலநடுக்கத்தால் எந்த நாட்டில் எல்லாம் எவ்வளவு
சேதம் என்பது முதல் அந்த நாட்டின் இன்றைய நிலை வரை
அத்தனையையும் அவர்களே கொடுக்கின்றனர்.ஒவ்வொரு
நாட்டிலும் தனித்தனியாக எங்கெல்லாம் நிலநடுக்க வந்தது என்று
தேடும் வசதியும் உள்ளது.இனி எங்கெல்லாம் நிலநடுக்கம் வரலாம்
என்பதை பற்றிய முன்னறிவிப்பு தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.
அனைத்து தரப்பு மக்களும் நிலநடுக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள
வேண்டிய தகவல்கள் பல இடம் பெற்றுள்ளது.
இணையதள முகவரி: http://earthquake.usgs.gov
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் File -ஐ rename- செய்வதற்கான எளிய ஜாவா நிரல் import java.io.File; public class RenameFile { public static void main(String[] args) { File file = new File("C:\\MyFile.txt"); File newFile = new File("C:\\MyFileRenamed.txt"); file.renameTo(newFile); }}
இன்று பிப்ரவரி 10பெயர் :அலெக்சாண்டர் புஷ்கின், மறைந்த தேதி : பிப்ரவரி 10, 1837 ரஷ்ய மொழியில் காதல் காவியங்கள் படைத்த ஒரு சிறந்த எழுத்தாளர்.இவர் நவீன ரஷ்ய இலக்கியத்தின் நிறுவனராகவும் மிகப்பெரிய கவிஞராகவும் பலராலும் கருதப்படுகிறார். புஸ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாக இருந்தார்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம்..
1.
தாமஸ் ரூபன் | 10:13 முப இல் பிப்ரவரி 10, 2010
ஹார்ப் என்ற உயர்தொழில் நுட்பம் மூலம் செயற்கையாக பூமியில் நிலநடுக்கங்களை உண்டு பண்ண முடியும் என்கின்றார்கள். உண்மைய சார்.
பதிவுக்கு நன்றி சார் .