Archive for ஜனவரி, 2010
ஹக்கர்களின் அட்டகாசம் யூடியுப்யையும் விடவில்லை.
நாளுக்கு நாள் பெருகிவரும் ஹக்கரின் அட்டகாசம் இப்போது
யூடியூப் வரை சென்றுள்ளது. சென்ற வாரம் தான் டிவிட்டரை
ஒரு வழிபடுத்தினார்கள் அதற்குள் இரண்டு நாட்களுக்கு முன்
யூடியுப்பையும் ஒரு கை பார்த்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன் யூடியுப் இணையதளத்தை திறந்தால்
YouTube is currently experiencing some downtime issues, reporting
a “Http/1.1 Service Unavailable” error or a a 500 Internal Server
error. இப்படி ஒரு செய்தி தெரிந்தது உலகத்தின் பல பகுதிகளில்
இருந்தும் யூடியுப் இணையதளத்தை திறந்தவர்கள் ஒன்றும் புரியாமல்
விழித்தனர் ஒருத்தர் டிவிட்டரில் எனக்கு இங்கு யூடியூப் தெரியவில்லை
என்று ஒரு டிவிட்டை தட்டி விட விஷயம் காட்டுத்தீ போல பரவ
ஆரம்பித்தது. சரியாக 20 நிமிடம் ஒன்றும் செய்ய முடியவில்லை
அடுத்து உடனடியாக நம் கூகுள் இந்த பிரச்சினையை பெரிதாகும்
முன் சரி செய்தது. இதைப்பற்றி கூகுளிடம் கேட்டதற்கு அவர்களிடம்
இருந்து எந்த பதிலும் இல்லை, ஆட்டை கடித்து மாட்டை கடித்து
கடைசியில் நம்மிடமே கைவரிசை காட்டிவிட்டனரே என்று குழப்பத்தில்
உள்ளனர். இப்போது தான் அனைவருக்கும் சீனாவின் இராஜதந்திரம்
கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்திருக்கிறது. இராஜதந்திரம்
என்னவென்று தெரிய வேண்டுமானால் நம் பழைய பதிவை பார்க்கவும்.
https://winmani.wordpress.com/2010/01/15/chin/
இப்படியே சென்றால் சீனாவுக்கும் இண்டெர்நெட் வசதியே இல்லாமல்
செய்தாலும் செய்துவிடுவார்கள் போல அல்லது சீனா முழுவதையும்
இன்ட்ராநெட் ஆக மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதிற்கு ஒன்றுமில்லை.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் இணையப்பக்கத்தில் படம் சரியாக லோட் ஆக உதவும் $('#myImage').attr('src', 'image.jpg').load(function() { alert('Image Loaded'); }); பிரவுஷரில் அடிக்கடி செக்யூரிட்டி (captcha) படம் தெரிவதில் உள்ள பெரிய பிரச்சினையை தீர்க்கும் நிரல்.
இன்று ஜனவரி 22பெயர் : ஞானப்பிரகாசர், மறைந்த தேதி : ஜனவரி 22, 1947 பன்மொழிப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசர், தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்துகாட்ட பெரும்பங்கு வகித்தவர்களில் ஒருவர். வளம் மிக்க தமிழ் சந்ததியை உருவாக்கும் விதத்தில் அறிவுபூர்வமான பல நூல்களை எழுதி உள்ளார். யாழ்ப்பாண தமிழ் நேசப்புலவர். தமிழ் சேவைக்கு நன்றி.
பேஸ்புக் சேமிக்கும் புகைப்படத்தின் அளவை அதிகப்படுத்தியுள்ளது
பல நாள் கோரிக்கை இறுதியாக இப்போது தான் பேஸ்புக்
தனது நெட்வொர்க்கில் சேமிக்கும் படத்தின் உயரம் மற்றும்
அகலத்தை அதிகரித்துள்ளது. அதிகமான பயனாளர்களை கொண்டு
உலகத்தில் வலம் வரும் பேஸ்புக் கடந்த சில நாட்களாகவே
புகைப்படத்தின் அளவை அதிகப்படுத்தபோவதாக அறிவித்துவந்தது
இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அதாவது படத்தின்
அகலம் 180 உயரம் 540 (180×540) என்று அளவை தான் இதுவரை
பேஸ்புக் -ல் நாம் பயன்படுத்தி வந்தோம் ஆனால் இனி அகலம் 200
மற்றும் உயரம் 600 என்று படத்தின் உயரம் மற்றும் அகலத்தை
அதிகப்படுத்தியுள்ளது. பிளிக்கர் போன்ற இணையதளங்களில் இருந்து
நாம் அப்லோட் செய்யும் புகைப்படத்தின் அளவும் இனி இந்த அளவாக
மாற்றப்பட்டுவிடும்.இதற்காக பேஸ்புக்-ல் கூடுதலாக சேமிக்கும்
இடத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் கூகுள் அறிமுகப்படுத்தும் பிரஷ் ஜாவா நிரல் <script src="http://ajax.googleapis.com/ajax/libs/ jquery/1.3.2/jquery.min.js" type="text/javascript"> </script> இணையதள வடிவமைப்பாளர்களுக்கும் ஜாவா பயன்படுத்து பவருக்கும் பயனுள்ள் நிரல்.
இன்று ஜனவரி 21பெயர் : விளாடிமிர் லெனின், மறைந்த தேதி : ஜனவரி 21, 1924 ரஷ்யப் புரட்சியாளர்,போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும் ஆவார்.லெனின் பெத்ரோகிராடில் ஏழைத் தொழிலாளர்களுக்கான வழக்குகளையே நடத்தினார். பெரும்பாலும் அவை இலவசமாகவே இருந்தன. என்றும் மக்களின் மகத்தான தலைவர் லெனின்.
அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம்.
அசுஸ் நிறுவனமும் புதிதாக நாமும் ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை
களம் இறக்கினால் தான் நம்மால் மார்க்கெட்டிங்கில் இருக்க முடியும்
என்பதை நன்கு உணர்ந்து புதிதாக அசுஸ் வேவ்பேஸ் அல்ட்ரா என்பதை
உருவாக்கியுள்ளனர். கையில் நாம் கட்டும் பிரேஸ்லட் போன்று இதன்
வடிவம் இருக்கிறது.
பொர்ட்டபிள் எங்கு வேண்டுமானாலும் நம் கையில் மாட்டி எடுத்துச்
செல்லலாம். இந்த வேவ்பேஸ் அல்ட்ராவின் பயன் என்ன வென்று
பார்த்தால் இதில் நாம் முக்கியமாக செய்ய வேண்டிய வேலைகளை
குறித்து வைத்துக் கொள்ளலாம். இதனுடன் OLED டிஸ்பிளே -யும்
உள்ளது. இதில் நாம் தேவையான நிகழ்வை பார்த்துக்கொள்ளலாம்.
நேரம் பார்ப்பதிலிருந்து ப்ளுடுத் வரை அனைத்தும் உள்ளது.
அதுமட்டுமில்லாமல் இதில் நம் உடலின் வெப்பநிலையை அறிந்து
கொள்ளவும் இரத்த அழுத்தத்தை கண்டறியவும் உடனுக்குடன்
தெரியப்படுத்தும் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி
தொலைவில் இருந்தும் கூட நாம் இதற்கு கட்டளை கொடுக்கலாம்.
இப்படி பல தொழில்நுட்ப மாற்றங்களுடன் அசுஸின் வேவ்பேஸ்
அல்ட்ரா விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இன்று ஜனவரி 20பெயர் : பெரியசாமி தூரன், மறைந்த தேதி : ஜனவரி 20, 1987 தமிழ் புலவர், ஆசிரியர் மற்றும் கர்நாடக இசை வல்லுனர்.தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியத்தின் ஆசிரியராக 1948 இல் பொறுப்பேற்று 1968 வரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய 10 தொகுதிகளை வெளியிட்டார்.பாரதி பாடல்களைப் பரப்பவும்,நம் தேசியப் போராட்டத்திற்கு வலு சேர்க்கவும் பித்தன் என்ற மாத இதழை நடத்தவும் காரணமாக இருந்தார்.
ஆப்பிளில் வரும் ஜனவரி 27 என்ன அதிசியம் நடக்க போகிறது.
தனக்கென்று ஒரு தனி வழி யாரையும் தொந்தரவு செய்யாமல்
கணினி லேப்டாப் வடிவமைப்பில் முன்னால் நிற்கும் ஆப்பிள்
நிறுவனத்தை பற்றிய பதிவு.
கடந்த சில நாட்களாக ஒரு செய்தி ஆப்பிள் நிறுவனத்திலிருந்து
புதிய வடிவமைப்பில் பல தொழில்நுட்ப வசதிகளுடன் ஒரு லேப்டாப்
வெளிவருவதாக தகவல் இது வதந்தியாக கூட இருக்கலாம் என்ற
நிலையில் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக
ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது அதாவது வரும் ஜனவரி 27ம்
தேதி கிரியேட்டிவ் ஆன ஒன்று வெளிவர போகிறது கூடவே ஒரு
ஆர்ட் படம் இணைக்கப்பட்டுள்ளது.ஒவியம் வரைபவர்களுக்கு
என்று சிறப்பாக ஏதாவது மென்பொருள் வெளியிட போகிறார்களா?
அல்லது இணையதள வடிவமைப்பாளர்களுக்கான ஏதாவது
மென்பொருள் வரப்போகின்றதா ? அல்லது பெயிண்ட் பிரஷ் ஏதும்
தேவையில்லை கையில் ஒரு குச்சி கொடுத்து எங்கள் மானிட்டரை
நீங்கள் வரைபலகையாக பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த வண்ணத்தை
தேர்ந்தெடுத்து படம் வரையுங்கள் என்றும் சொன்னாலும்
ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.கிரியேட்டிவ் என்றாலே
புதுமைதான், என்ன புதுமையை ஆப்பிள் நிறுவனம் வெளியிடப்
போகின்றது என்ற ஆவல் அனைத்து கம்யூட்டர் வல்லுனர்களுக்கும்
பயன்படுத்துபவர்களுக்கும் உள்ளது. என்ன என்பதை தெரிந்து கொள்ள
நாம் வரும் 27 -ம் தேதி வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
இன்று ஜனவரி 19பெயர் : ஓஷோ , மறைந்த தேதி : ஜனவரி 19, 1990 இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர்.சிறந்த பேச்சாளர்.ஆங்கிலத்திலும் இந்தியிலும் பல சொற்பொழிவு நிகழ்த்தி உள்ளார். புத்தர்,கிருஷ்ணர்,குரு நானக், இயேசு, சாக்கிரட்டீஸ், ஜென் குருக்கள் போன்ற ஞானிகளிடம் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். நேர்மை துணிவு மிகுந்தவர். அன்பானவர். தியானத்தில் பல புதுவழியை கண்டறிந்தவர்.
இயற்கையான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் டெல் புதிய அதிசியம்.
கணினி வடிவமைப்பாளர்களுக்கான போட்டியில் இயற்கை
தாவரங்களின் கழிவுகளில் இருந்து புதிய டெஸ்க்டாப்
கம்ப்யூட்டரை உருவாக்கிய சாதனையைப் பற்றி தான்
இந்த பதிவு.டெல் நிறுவனம் நடத்திய போட்டியில் மெக்ஸிக்கொ
நாட்டின் பவுலினா கேரோல்ஸ் என்பவர் தாவரங்களின் கழிவுகளை
கொண்டு இயற்கையான முறையில் ஒரு டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை
வடிவமைத்துள்ளார்.படம் 1 ல் காட்டப்பட்டுள்ளது.

படம் 1
இதன் பயன்பாட்டை பற்றி பார்ப்போம். இதில் இரண்டு
புரோஷக்டர் உள்ளது. திரைக்காக ஒன்றும் கீபோர்ட்
வசதிக்காக மற்றொன்றும் உள்ளது. எங்கு வேண்டுமானாலும்
பயன்படுத்தலாம் டெஸ்க்டாப் என்றால் எங்கும் எடுத்து
செல்ல முடியாது ஆனால் இதை எங்கு வேண்டுமானாலும்
எடுத்து செல்லலாம்.பயன்படுத்துவதற்கு குறைவான அளவு
மின்சக்தியே தேவைப்படுகிறது. அதேபோல் டிவிடி
பயன்படுத்தவும் புதிய அமைப்பை வடிவமைத்துள்ளனர்.
படம் 2 ல் காட்டப்பட்டுள்ளது.பார்ப்பதற்கு எளிமையாகவும்
புதுமையாகவும் உள்ளது.

படம் 2
கீபோர்ட் நிழலில் எந்த கீயை நாம அழுத்துகிறோம் என்பதை
இமேஸ் சென்ஸார் மூலம் துல்லியமாக கண்டுபிடிக்கின்றனர்.
அதோடு அந்த கீயின் இன்புட்டையும் ஒளியாக அனுப்புகின்றனர்.
இதன் மிகப்பெரிய பலம் அதிக அளவு சூடாவது குறைக்கப்பட்டு
உள்ளது. அதேபோல் பயன்படுத்திய இதன் பாகங்களை மீண்டும்
சுழற்ச்சி முறையில் பயன்படுத்தலாம்.
இன்று ஜனவரி 18பெயர் : என்.டி.ராமராவ் , மறைந்த தேதி : ஜனவரி 18, 1996 பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி.ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக மூன்று தடவை பொறுப்பு வகித்தவர்.தெலுங்கு திரைப்படத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக அவர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை பெற்றார். சிறந்த இறைபக்தி உள்ளவர்.
கூகுல் நெக்சஸ் போன் இந்த ஆண்டு 6 மில்லியன் இலக்கு
கூகுளின் அடுத்த துறை தொலைத்தொடர்பு அதற்காக புதிதாக
கூகுள் நெக்சஸ் போன் வர இருப்பது நமக்கு தெரிந்தது தான்
அதில் உள்ள சில சிறப்பம்சங்களை பற்றி பார்ப்போம்.
* கூகுளின் முதல் பணி வேகம் தான் அதனால் வேகத்திற்கு
ஏற்றவாறு வன்பொருள் அமைப்பு.
* திரையில் வண்ண வண்ண கலர்களை தேர்ந்தெடுத்து பார்க்கலாம்.
* தொடுததில் திரை பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு வடிவம்.
* ஆடியோவில் சிறு இரைச்சல் கூட இல்லாமல் கேட்கலாம்.
* கூகுளின் அனைத்து அப்ளிக்கேசனும் பயன்படுத்தலாம்.
*சில நாடுகளில் இலவச இண்டெர்நெட்டும் சேர்த்தே கொடுக்கின்றனர்.
இதை எல்லாம விட சிறப்பு எந்த நாட்டில் இருந்தும் அடுத்த நாட்டில்
இருக்கும் நெக்சஸ் போனுக்கு அழைப்பு இலவசம்.(சிறப்பு சலுகை)
இந்த 2010-ஆம் ஆண்டு மட்டும் 5 முதல் 6 மில்லியன்
வாடிக்கையாளர்களிடம் நெக்சஸ் போன் சென்றடைய வேண்டும்
என்பது தான் இவர்களின் இலக்கு. பயன்படுத்துவதில் எளிமை
தான் இதன் மிகப்பெரிய பலமாக இருக்கப்போகிறது.விலை மட்டும்
தான் நமக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறது இந்திய மதிப்பின்படி
இதன் விலை Rs.29767.
இன்று ஜனவரி 17பெயர் : M.G.இராமச்சந்திரன், பிறந்ததேதி : ஜனவரி 17, 1917 எம்ஜிஆர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் புகழ் பெற்ற மனிதர்.தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர் பலரின் இதயங்களில் இன்றும் வாழ்பவர்.
சீனாவில் ஏதற்கெல்லாம் இணையதளங்கள் தடை செய்யப்படுகின்றன ஒரு அலசல்
சீனாவில் நேற்றல்ல இன்றல்ல பல வருடங்களாகவே இணையதளம்
-களுக்கு கொஞ்சம் அதிகமான கிடுக்குபிடி தான். ஏன் என்ற
பின்னனி கொஞ்சம் வித்தியாசமானதுதான் அதாவது சீனாவின் எந்த
அரசாங்க விஷயங்களும் வெளியே செல்லக்கூடாது என்பதற்காக
தான் இத்தனை செக்யூரிட்டி.முதலில் தடை செய்த இணையதளம்
பிளாக்கர் இதன் வழியாக பல தகவல் செல்லும் என்பதால் இது
தடைசெய்யப்பட்டது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக நாம்
பயன்படுத்தும் பல இணையதளங்கள் என்று யூடியுப் வரை
சென்றுள்ளது.நாம் பயன்படுத்தும் எந்த சோசியல் நெட்வொர்க்கையும்
சீனாவில் பயன்படுத்த முடியாது.எங்கள் நாட்டு இளைஞர்கள் யாரும்
தவறாக சென்று விடக்கூடாது என்பதற்காக சமீபத்தில் ஆபாச
இணைதளங்கள் சீனாவில் வைத்திருக்கும் நபரை நீங்கள் காட்டி
கொடுத்தால் 1 இலட்சம் வரை பரிசு என்று அறிவித்து 5394 பேரை
மொத்தமாக பிடித்தது. இதன் பின்னால் ஒரு இராஜதந்திரமே
உள்ளது எப்படி என்று பார்ப்போம். எந்த ஒரு நாட்டிலும் ஆபாச
இணையதளங்கள் வைத்திருக்கும் நபர் கண்டிப்பாக பணத்துக்காக
எதையும் செய்வார் இப்படிபட்ட நபர்கள் பெரும்பாலும் ஹக்கர் ஆக
இருக்க வாய்ப்பு அதிகம் அதனால் இவர்களை சரியாக கண்ணி
வைத்து பிடித்தது சீன அரசு.
கூகுள் சீனாவை விட்டு வெளியேறியது என்ற செய்தி நாம் படித்தது
தான் ஆனால் ஏன் வெளியேறியது என்ற காரணம் பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக கூகுள் தேடுபொறி வந்து
விட்டது. சீனாவில் பயன்படுத்தப்படும் கூகுள் தேடு பொறியில்
பிரைன் வாஸ் ( Brain wash ) என்ற சொல்லை
பயன்படுத்தினால் தேடுதல் முடிவு காட்டக்கூடாது அதுமட்டுமா
டெமாக்ரசி மூமெண்ட் (democracy movement) என்ற சொல்
முதல் ஒரு பெரிய பட்டியலை கொடுக்கிறது சீனஅரசு படம் 2-ல்
காட்டப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் உள்ள வார்த்தைகள் காணப்படும் இணைய
தளங்களை காட்டக்கூடாது என்று சொன்னால் ஆரம்பத்தில் சரி சரி
என்று சொல்லி கூகுள் ஏற்று கொண்டது அதன் பின் தான்
தெரிந்தது இவர்கள் கொடுக்கும் வார்த்தையை வைத்து ஃபில்ட்டர்
(Filter) செய்தபின் ஒரு இணையதளத்தையும் நம்மால்
காட்டமுடியாது என்று தெரிந்து கொஞ்சம் வார்த்தையை
குறைத்திருக்கலாம் என்று நிபுனர்கள் கூறினாலும் எதையும் எந்த
வார்த்தையையும் குறைக்க முடியாது என்று திட்டவட்டமாக
கூறிவிட்டது அதன் பின் தான் கூகிள் வெளியே வந்தது.
ஒரு நாட்டின் வருங்கால முதுகெலும்பாக இருக்கும் இளைஞர்கள்
எந்த விதத்திலும் தவறாக சென்றுவிடகூடாது என்பதிலும் பயிர்க்கு
பாதுகாப்பு வேலி நாட்டின் பாதுகாப்புக்கு இணையவேலி என்ற
புதிய தொலைநோக்கு பார்வையுடன் களம் இறங்கியுள்ளது
சீனஅரசு அதுமட்டுமல்ல இணையதள செக்யூரிட்டி பணிக்காக
மட்டும் பல இலட்சம் பேரை பணியில் அமர்த்தியுள்ளது.
நம் நாட்டில் இந்த அளவு செய்யாவிட்டாலும் ஆபாச
இணையதளங்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்
நாட்டின் பல குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு நாட்டின்
பாதுகாப்பு துறையில் இருக்கும் அதிகாரிகள் பார்வைக்கு இந்த
பதிவு செல்லுமா என்று தெரியவில்லை ஆனால் கூகுள் போன்ற
தேடுபொறிகள் ஆபாச இணையதளங்ளை காட்டுவதை நிறுத்தி
விட்டால் குற்றம் பெருமளவு குறையும். இந்தியா போன்ற ஒரு
வளரும் வல்லரசு நாட்டிற்கு தேவையானது இணையபாதுகாப்பு
என்பது நம் எண்ணம்.
இன்று ஜனவரி 16பெயர் : ராபர்ட்ஜெ.வான்டிகிராப், மறைந்த தேதி : ஜனவரி 16,1967 இவர் ஒரு அமெரிக்க இயற்பியலாளர். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.வான்டிகிராப் மின்னியற்றி என்னும் இயந்திரத்தை உருவாக்கியவர்.
உங்கள் ஏடிம் கார்டு-ஐ இனி மொபைல் படிக்கும் புதிய அதிசியம்.
மொபைல் போன்-ல் தினமும் ஒவ்வொரு வசதிகள்
வந்த வண்ணம் உள்ளன.இண்டெர்நெட், இமெயில்,
புளுடுத் மட்டுமில்லாமல் பல வசதிகள் அந்த வகையில்
புதிதாக மொபைல் ஐபோன் நம் ஏடிம் கார்டு-ஐ படிக்கும்
வகையில் வந்துள்ளது. போன்-ல் இருந்து கொண்டே
நாம் யாருடைய ஏடிம் கார்டு-ஐ யும் பயன்படுத்தி பணம்
அனுப்பலாம்.அதோடு மட்டுமில்லாமல் சில இணையதளங்களில்
நாம் ஏதாவது இபுக் (Ebook) வாங்க நினைத்தால் நமக்கு
இண்டெர்நெட் பேங் அக்கவுண்ட் இல்லாவிட்டாலும் இந்த
ஏடிம் வசதியை பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.

மொபைல் ஐபோன் நம் ஏடிம் கார்டு ரீடர்
இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.இந்த ஐபோன்-ல்
ஏடிம் கார்டு ரீட் செய்ய கூடிய மெக்னடிக் கார்டு ரீடர் கேஸ்
பொருத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 3G மாடலில் மட்டும்
இந்த வசதி வந்துள்ளது. இதனுடன் USB யுஎஸ்பி மைக்ரோ
கேபிள் சபோர்ட் செய்யும் வசதியும் உள்ளது.
இன்று ஜனவரி 15பெயர் : கே.எம்.ஆதிமூலம், மறைந்த தேதி : ஜனவரி 15, 1938 , தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற ஓவியர் கோட்டு ஓவியத்தை ஊடகங்கள் வழியாக பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர்.கல்வெட்டு பாணியிலான புது வகை எழுத்து அழகியலை உருவாக்கியவர். சிறந்த மனிதநேய படைப்பாளி.
டிவிட்டரை மிஞ்சும் புதிய இணையதளம்
எங்கு எப்போது செல்ல வேண்டும், நண்பருக்கு பிறந்த நாள்
வாழ்த்து எத்தனை மணிக்கு சொல்ல வேண்டும் இன்று அலுவலகத்தில்
செய்ய வேண்டி வேலை என்ன, எத்தனை மணிக்கு சாப்பிட
செல்ல வேண்டும்,இந்த வாரம் விடுமுறைக்கு எந்த இடத்திற்கு
செல்ல வேண்டும். அடுத்த வாரம் நம்மை பார்க்க யாருக்கெல்லாம்
அனுமதி கொடுத்துள்ளோம். இன்று இரவு என்ன உணவு சாப்பிட
வேண்டும் என்று அத்தனையும் டிவிட் செய்ய ஒரு இணையதளம்
இணையதள முகவரி : http://www.mixin.com
டிவிட்டில் தனக்கு நிகர் இல்லாமல் சென்று கொண்டிருந்த
டிவிட்டருக்கு இது ஒரு மிகப்பெரிய சவால் தான் ஏற்கனேவே
இணையதள செக்யூரிட்டியில் ஒரு சவாலை இப்போது தான்
சரி செய்து கொண்டிருக்கிறது அதற்குள் அடுத்த சவால்.
மிக்ஸ்ன் பற்றி சொல்ல நிறைய இருந்தாலும் திட்டமிட்டு
நம் செயல்களை நடத்தினால் அனைத்திலும் வெற்றி தான்
என்ற கோஷத்துடன் வெளி வந்திருக்கிறது, நம் பெயரில்
புதிதாக ஒரு கணக்கு உருவாக்கி வைத்துக்கொள்வோம்
யாருக்கு தெரியும் நாளை இதுவும் பிரசத்தி பெறலாம்.
இன்று ஜனவரி 14
தைப்பொங்கல் - தமிழர் திருநாள்
இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும்
உன்னதமான நாள்.இந்நாளில் தமிழை
வளர்த்த தமிழ் புலவர் திருவள்ளுவருக்கும்,
ஒளவையாருக்கும் நன்றி.