சீனாவில் ஏதற்கெல்லாம் இணையதளங்கள் தடை செய்யப்படுகின்றன ஒரு அலசல்
ஜனவரி 15, 2010 at 8:26 பிப 7 பின்னூட்டங்கள்
சீனாவில் நேற்றல்ல இன்றல்ல பல வருடங்களாகவே இணையதளம்
-களுக்கு கொஞ்சம் அதிகமான கிடுக்குபிடி தான். ஏன் என்ற
பின்னனி கொஞ்சம் வித்தியாசமானதுதான் அதாவது சீனாவின் எந்த
அரசாங்க விஷயங்களும் வெளியே செல்லக்கூடாது என்பதற்காக
தான் இத்தனை செக்யூரிட்டி.முதலில் தடை செய்த இணையதளம்
பிளாக்கர் இதன் வழியாக பல தகவல் செல்லும் என்பதால் இது
தடைசெய்யப்பட்டது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக நாம்
பயன்படுத்தும் பல இணையதளங்கள் என்று யூடியுப் வரை
சென்றுள்ளது.நாம் பயன்படுத்தும் எந்த சோசியல் நெட்வொர்க்கையும்
சீனாவில் பயன்படுத்த முடியாது.எங்கள் நாட்டு இளைஞர்கள் யாரும்
தவறாக சென்று விடக்கூடாது என்பதற்காக சமீபத்தில் ஆபாச
இணைதளங்கள் சீனாவில் வைத்திருக்கும் நபரை நீங்கள் காட்டி
கொடுத்தால் 1 இலட்சம் வரை பரிசு என்று அறிவித்து 5394 பேரை
மொத்தமாக பிடித்தது. இதன் பின்னால் ஒரு இராஜதந்திரமே
உள்ளது எப்படி என்று பார்ப்போம். எந்த ஒரு நாட்டிலும் ஆபாச
இணையதளங்கள் வைத்திருக்கும் நபர் கண்டிப்பாக பணத்துக்காக
எதையும் செய்வார் இப்படிபட்ட நபர்கள் பெரும்பாலும் ஹக்கர் ஆக
இருக்க வாய்ப்பு அதிகம் அதனால் இவர்களை சரியாக கண்ணி
வைத்து பிடித்தது சீன அரசு.
கூகுள் சீனாவை விட்டு வெளியேறியது என்ற செய்தி நாம் படித்தது
தான் ஆனால் ஏன் வெளியேறியது என்ற காரணம் பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக கூகுள் தேடுபொறி வந்து
விட்டது. சீனாவில் பயன்படுத்தப்படும் கூகுள் தேடு பொறியில்
பிரைன் வாஸ் ( Brain wash ) என்ற சொல்லை
பயன்படுத்தினால் தேடுதல் முடிவு காட்டக்கூடாது அதுமட்டுமா
டெமாக்ரசி மூமெண்ட் (democracy movement) என்ற சொல்
முதல் ஒரு பெரிய பட்டியலை கொடுக்கிறது சீனஅரசு படம் 2-ல்
காட்டப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் உள்ள வார்த்தைகள் காணப்படும் இணைய
தளங்களை காட்டக்கூடாது என்று சொன்னால் ஆரம்பத்தில் சரி சரி
என்று சொல்லி கூகுள் ஏற்று கொண்டது அதன் பின் தான்
தெரிந்தது இவர்கள் கொடுக்கும் வார்த்தையை வைத்து ஃபில்ட்டர்
(Filter) செய்தபின் ஒரு இணையதளத்தையும் நம்மால்
காட்டமுடியாது என்று தெரிந்து கொஞ்சம் வார்த்தையை
குறைத்திருக்கலாம் என்று நிபுனர்கள் கூறினாலும் எதையும் எந்த
வார்த்தையையும் குறைக்க முடியாது என்று திட்டவட்டமாக
கூறிவிட்டது அதன் பின் தான் கூகிள் வெளியே வந்தது.
ஒரு நாட்டின் வருங்கால முதுகெலும்பாக இருக்கும் இளைஞர்கள்
எந்த விதத்திலும் தவறாக சென்றுவிடகூடாது என்பதிலும் பயிர்க்கு
பாதுகாப்பு வேலி நாட்டின் பாதுகாப்புக்கு இணையவேலி என்ற
புதிய தொலைநோக்கு பார்வையுடன் களம் இறங்கியுள்ளது
சீனஅரசு அதுமட்டுமல்ல இணையதள செக்யூரிட்டி பணிக்காக
மட்டும் பல இலட்சம் பேரை பணியில் அமர்த்தியுள்ளது.
நம் நாட்டில் இந்த அளவு செய்யாவிட்டாலும் ஆபாச
இணையதளங்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்
நாட்டின் பல குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு நாட்டின்
பாதுகாப்பு துறையில் இருக்கும் அதிகாரிகள் பார்வைக்கு இந்த
பதிவு செல்லுமா என்று தெரியவில்லை ஆனால் கூகுள் போன்ற
தேடுபொறிகள் ஆபாச இணையதளங்ளை காட்டுவதை நிறுத்தி
விட்டால் குற்றம் பெருமளவு குறையும். இந்தியா போன்ற ஒரு
வளரும் வல்லரசு நாட்டிற்கு தேவையானது இணையபாதுகாப்பு
என்பது நம் எண்ணம்.
இன்று ஜனவரி 16பெயர் : ராபர்ட்ஜெ.வான்டிகிராப், மறைந்த தேதி : ஜனவரி 16,1967 இவர் ஒரு அமெரிக்க இயற்பியலாளர். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.வான்டிகிராப் மின்னியற்றி என்னும் இயந்திரத்தை உருவாக்கியவர்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: சீனாவில் ஏதற்கெல்லாம் இணையதளங்கள் தடை செய்யப்படுகின்றன ஒரு அலசல்.
1.
ameer | 11:47 முப இல் ஜனவரி 16, 2010
கண்டிப்பாக இந்தியா சென்சார் செய்ய வேண்டிய பக்கங்கள் நிறைய உள்ளன.
2.
henry | 7:54 முப இல் ஜனவரி 20, 2010
இந்திய அரசியல்வாதிகளுக்கு அது பற்றிலாம் கவலை இல்லை. அடுத்து ஆட்சியை பிடிப்பது, சொல்வதற்கு தலையாட்டும் ஒன்னும் தெரியாத MP கு பதவி குடுப்பது, மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது, தேவை இல்லாத விசயங்களுக்கு பாராளுமன்றத்தை கூட்டி விவாதம் செய்வது ( நீ fraud, உன் MP, MLA Fraud, நீ ஆட்சில இருந்தப்ப 146 கோடி ஊழல்…. இது போன்று ). Bloody idiot indians யார் பணனம் அதிகம் குடுகிறார்களோ அவர்களுக்கு ஒட்டு போட்டு நாட்டை கெடுப்பது. feature india ???????????????
3.
செல்வ.முரளி | 2:22 முப இல் ஜனவரி 22, 2010
அருமையான அரசு….
இந்தியாவில் உடனடியாக ஒரு சர்வாதிகார அரசாங்கம் வேண்டும்.
நன்றி!
என்றும் அன்புடன்
செல்வ.முரளி
4.
prabu | 10:01 முப இல் ஜனவரி 22, 2010
உங்களது பணி மிகவும் பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள்
இது போன்ற செய்திகளை தமிழில் கொண்டுவருவதற்கு மிக்க நன்றி
நன்றி
5.
ரகு | 11:21 பிப இல் பிப்ரவரி 11, 2010
அருமையான செய்தி….
நன்றி
6.
Sadaam-SriLanka | 6:52 முப இல் ஜனவரி 11, 2011
விண்மணி என்றால் விண்மணி தான்
மிஹவும் அருமையான செய்தி மிக்க நன்றி
7.
winmani | 7:14 முப இல் ஜனவரி 11, 2011
@ Sadaam-SriLanka
மிக்க நன்றி