உங்களுக்காக கூகுள் ஒரு புதிய விநோதம்.
திசெம்பர் 21, 2009 at 6:33 பிப 7 பின்னூட்டங்கள்
கூகில் தேடுபொறியில் நாம் தேடும் வார்த்தையை சேமித்து
ரெக்காட் செய்து ஒரு புதிய முகவரியை கொடுக்கும் இணையதளம்
ஒன்று உள்ளது.முற்றிலும் மாறுபட்ட இணையதளமாகவே உள்ளது.
இனி இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
”லெட் மி கூகுள் தட் பார் யு “இணையதள முகவரி : www.lmgtfy.com
இந்த இணையதளத்திற்கு செல்லவும் கூகுல் போன்றே தோற்றம்
அளிக்கும் இதில் நீங்கள் தேடும் வார்த்தையை டைப் செய்து
“Google search ” பட்டனை அழுத்தவும்.

படம் 1
இப்போது படம் 1- ல்காட்டியபடி அதே முகப்பு திரையில் கட்டத்திற்குள்
இணையதள முகவரி ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் இதன் அருகில்
மவுஸை கொண்டுசெல்லும் போது “tinyurl” மற்றும் “go” இரண்டு
பட்டன் தெரியும். இப்போது “tinyurl ” என்ற பட்டனை அழுத்தவும் சில
நொடிகளில் ஒரு tinyurl முகவரி தெரியும்.அதை ”Copy ” செய்து
New window -ல் அந்த இணையதள முகவரியை “Paste” செய்யவும்.
இப்போது நீங்கள் எற்கனவே கூகிலில் தேடிய வார்த்தை அதுவாகவே
தானாக டைப் செய்யப்பட்டு கூகுலில் விடைகளை காண்பிக்கும்.
வேடிக்கைகாக மட்டும் இல்லை இதன் பயன் என்னவென்றால் சில
நேரங்களில் பெரிய நிறுவனத்திற்கு நாம் இணையதளம் வடிவமைத்து
கொடுக்கும் போது கூடவே அந்த நிறுவனத்தின் பெயரை கூகுலில்
டைப் செய்தால் தேடுதல் முடிவில் உங்கள் நிறுவனம் முதலிடம் வரும்
என்று சொல்வதை விட இந்த மாதிரி ஒரு இணையதளமுகவரி
கொடுத்தால் அவர்கள் அந்த முகவரியை க்ளிக் செய்யும் போது
அதுவாகவே கூகுலில் அந்த நிறுவனத்தின் பெயரை டைப் செய்து
இவர்களது நிறுவனத்தின் இணையதளம் வருவது போன்ற இந்த முறை
இன்னும் சிறப்பாக இருக்கும்.உதாரணமாக நாம் வின்மணி என்று டைப்
செய்து ஒரு முகவரி உருவாக்கியுள்ளோம். http://tinyurl.com/y9vpqmx
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: கூகுள் ஒரு புதிய விநோதம் tinyurl முகப்பு திரையில் கட்டத்திற்குள்.
1.
Tamil Tech | 1:00 முப இல் திசெம்பர் 22, 2009
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ………………………………………………………………..
2.
butterfly Surya | 8:07 பிப இல் திசெம்பர் 22, 2009
அருமை.. நன்றி..
3.
k.prasath | 4:20 முப இல் திசெம்பர் 24, 2009
மிகவும் நல்ல இருக்குது
4.
SEO | 3:09 முப இல் திசெம்பர் 31, 2009
Informative message, Thanks
5.
muthu | 7:14 முப இல் ஜனவரி 4, 2010
சிறப்பு மிக்க சிறப்பு…
6.
balaji | 6:30 பிப இல் ஜூலை 12, 2011
good knowledge my mind. wonderful your area mg. thanks to winmani
7.
winmani | 8:10 பிப இல் ஜூலை 12, 2011
@ balaji
மிக்க நன்றி