இணையதள சொந்தகாரருக்கும் வடிவமைப்பாளருக்கும் ஒரு வரப்பிரசாதம்
திசெம்பர் 9, 2009 at 5:46 பிப 2 பின்னூட்டங்கள்
நாம் சொந்தமாக இணையதளம் ஒன்று வைத்து இருந்தால்
அது எல்லா கம்யூட்டரிலும் மற்றும் எல்லா இணைய உலாவி
(web browser)-களிலும் எப்படி தெரியும் ? நாம் வடிவமைத்தபடி
தெரியுமா ? எந்த உலாவிகளில் எல்லாம் நம் இணையதளம்
வேறுபட்டு தெரிகிறது ? லினக்ஸ்(Linux ) ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில்
நன்றாக தெரியுமா ? மெக் (Mac OS) ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில்
எப்படி தெரியும் ? இப்படி பல கேள்விகள் அத்தனைக்கும்
ஒரே பதில் இந்த இணையதளம் வழங்குகிறது.

உங்கள் இணையதள முகவரியை கொடுக்க வேண்டும்.
எந்தெந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் , எந்தெந்த உலாவி ,
பக்கதின் அளவு , ஜாவா துணை வேண்டுமா என்பதை
எல்லாம் தேர்வு செய்த பின் ” Submit ” பட்டனை அழுத்த்வும்.
அவ்வளவு தான் அடுத்த பக்கத்தில் இரண்டு நிமிடம் காத்திருக்க
சொல்லும். அதன் பின் அந்த பக்கத்தை “Refresh ” செய்யவும்.
உங்கள் இணையதளம் எப்படி எல்லாம் தெரியும் என்று
பார்க்கலாம் சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.
இணையதள முகவரி: www.browsershots.org
உதாரணம்:

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: இணையதள சொந்தகாரர் வடிவமைப்பாளர் வரப்பிரசாதம்.
1.
முத்துலெட்சுமி | 4:26 முப இல் திசெம்பர் 10, 2009
தகவலுக்கு நன்றிங்க வின்மணி..
2.
winmani | 5:30 முப இல் திசெம்பர் 10, 2009
நன்றி முத்துலெட்சுமி.