Posts filed under ‘புரோகிராமர் உதவி’
உலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.
புதிதாக இணையதளம் அல்லது வலைப்பூ உருவாக்கியாச்சு அடுத்து நம் தளத்தை தற்போது எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பதைப்பற்றிய அனைத்து தகவல்களை எண்ணிக்கையாகவோ அல்லது மேப் வடிவிலோ எளிதாக காட்டலாம் நமக்கு உதவ ஒரு Script ( ஸ்கிரிப்ட்) உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நம் இணையதளத்தை தற்போது உலக அளவில் எங்கெல்லாம் எத்தனை பேர் பார்வையிடுகின்றனர் என்பதைப்பற்றிய தகவல்களை நம் தளத்தில் காட்ட வேண்டும் என்றால் எந்தவிதமான புரோகிராம் அறிவும் இல்லாமல் எளிதாக இத்தளத்தில் கிடைக்கும் கோடிங்-ஐ அப்படியே காப்பி செய்து நம் தளத்தில் சேர்த்தால் போதும் இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்…
தொடர்ந்து படிக்கவும் மே 3, 2012 at 7:42 மாலை 2 பின்னூட்டங்கள்
பிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.
புரோகிராம் லாங்குவேஜ் ( Programming Language ) முதல் அனிமேசன் மென்பொருட்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முதல் ஒவ்வொரு மென்பொருட்களிலும் திறமையானவர்களாக நம்மை மாற்ற இலவசமாக பயிற்சி கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கணினியில் ஜாவா மொழி படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை செலவிட்டால் தான் படிக்க முடியும் என்பதில்லை , நம்மிடம் கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் ஆன்லைன் மூலம் இன்றைக்கு அதிகமாக காசு வசூலிக்கும் கணினி பயிற்சிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே இலவசமாக கற்கலாம் அத்தனை பயிற்சிகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு தளம் உள்ளது….
மைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத Age of Empires விளையாட்டை இனி ஆன்லைன் மூலம் விளையாடலாம்.
மைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத Age of Empires விளையாட்டை இனி ஆன்லைன் மூலம் விளையாடலாம்.
படம் 1
ஆப்ரேட்டிங் சிஸ்டம் உலகில் எத்தனை புதிய OS வந்தாலும் இன்றும் மைக்ரோசாப்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு தனி மதிப்பு உண்டு அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் ஒரு காலத்தில் சக்கை போடு போட்ட Age of Empires விளையாட்டின் புதிய பதிப்பை கணினி மூலமும் ஆன்லைன் மூலமும் எளிதாக விளையாடலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லாமல் விளையாட்டின் முழு கட்டுப்பாட்டையும் நம் விரல் நுனிக்கே கொண்டு வரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Age Of Empires விளையாட்டை ஆன்லைன் மூலம் விளையாட ஒரு தளம் உதவுகிறது…
தொடர்ந்து படிக்கவும் பெப்ரவரி 7, 2012 at 9:48 AM மறுமொழியவும்
ஆன்லைன் மூலம் புரோகிராம் (கணினி மொழி) எழுதி நம்மை வல்லவர்களாக மாற்ற உதவும் தளம்.
புதிதாக கணினி துறைக்குள் புகும் நண்பர்கள் தான் தற்போது பலவிதமான கணினி மொழிகளை வெகுவிரைவாக கற்று அந்த மொழியில் வல்லவர்களாக உள்ளனர்,ஒருவர் எந்தத்துறையில் இருந்தாலும் கணினியில் புரோகிராம் எழுதி திறமையானவர்களாக மாற நமக்கு ஒரு தளம் உதவி செய்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கணினி மேல் கொண்ட காதலால் பலர் இன்னும் கட்டற்ற பல மென்பொருட்களை இலவசமாக கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். புதிதாக கணினி மொழி கற்க விரும்பும் அனைவருக்கும் எளிதாக கணினி மொழி கற்றுக்கொடுக்கவும் இயக்கி பார்க்கவும் ஒரு தளம் உள்ளது…
தொடர்ந்து படிக்கவும் பெப்ரவரி 2, 2012 at 4:35 மாலை 3 பின்னூட்டங்கள்




