PDF கோப்புகளை ஆன்லைன் மூலம் சேர்க்க, பிரிக்க, பாதுகாக்க என அனைத்தும் செய்ய உதவும் தளம்.
பெப்ரவரி 21, 2012 at 9:37 AM 2 பின்னூட்டங்கள்
பிடிஎப் கோப்புகளில் உள்ள பக்கங்களை சேர்ப்பதற்கு , குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் பிரிப்பதற்கு மற்றும் பிடிஎப் கோப்புகளுக்கு கடவுச்சொல் கொடுத்து பாதுகாப்பாக வைப்பதற்கு என அனைத்து வேலைகளையும் ஆன்லைன் மூலம் செய்வதற்கு நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆன்லைன் மூலம் பலவிதமான வேலைகளை நொடியில் செய்துவிடுவோம் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் PDF கோப்புகளை வெட்ட, சேர்க்க ,பாதுகாக்க என அனைத்தும் செய்யலாம்.
இணையதள முகவரி :http://foxyutils.com
இத்தளத்திற்கு சென்று Merge pdf , Split Pdf, Unlock Pdf, Protect Pdf என்று இருக்கும் பல வகையான சேவைகளில், பிடிஎப் கோப்புகளை சேர்க்க வேண்டும் என்றால் Merge Pdf என்பதையும், பிடிஎப் கோப்புகளை பிரிக்க வேண்டும் என்றால் Split PDF என்பதையும், பிடிஎப் கோப்புகளை Unlock செய்வதற்கு Unlock Pdf என்பதையும்,PDF கோப்புகளை பூட்டி பாதுகாப்பாக வைப்பதற்கு Protect pdf என்பதையும் சொடுக்கி சேவைகளை பெறலாம்.ஒவ்வொரு முறை பிடிஎப் சேவை செய்வதற்கு முன்பும் பிடிஎப் கோப்புகளை Browse என்ற பொத்தானை சொடுக்கி பதிவேற்றிய பின்பு தான் எல்லா சேவைகளையும் பெறமுடியும். கண்டிப்பாக PDF கோப்புகளை எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
பிடிஎப் கோப்புகளின் கடவுச்சொல்லை ஆன்லைன் மூலம் எளிதில் நீக்கலாம்
ஒரே நிமிடத்தில் பிடிஎப் புத்தங்களை கூகுள் மற்றும் பிங்-ல் நேரடியாக தேடலாம்
ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்.
நம் வலைப்பக்கத்தை அழகான பிடிஎப் கோப்பாக மாற்றி பிரிண்ட் செய்யலாம்.
தினம் ஒரு புத்தகம் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் எழுதிய " தமிழ் மருந்துகள் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை நேரமும் காலமும் ஒருவருக்கு கூடி வந்தால் எல்லாமே சிறப்பாக முடியும்.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு early barrier முற்றடுப்பு , முன்றடை early dawn வைகறை , விடியல் early in the morning அதிகாலையில் early leaf spot முன்பருவ இலைப்புள்ளி early morning விடியற்காலை,வைகறை early stages ஆரம்ப கட்டம் to earn சம்பாதி ,ஈட்டு ,பொருள் ஈட்டு earnest மிக்க ஆவலுடைய earnest money முன்பணம் earnestly மனமார,உளமார earnestly மெய்யார்வத்தோடு
இன்று பிப்ரவரி 21

பெயர் : ராபர்ட் முகாபே, பிறந்த தேதி : பிப்ரவரி 21, 1924 1980 முதல் இன்று வரை சிம்பாப்வே நாட்டின் தலைவராக உள்ளார்.1980 முதல் 1987வரை பிரதமராக பதவி வகித்தார்.1987 முதல் இன்று வரை குடியரசுத் தலைவராக பதவியிலுள்ளார். 1960களில் ஆப்பிரிக்காவில் விடுதலைப் போராட்ட வீரராக இருந்த முகாபே சிம்பாப்வே விடுதலை பெற்று ஆப்பிரிக்க மக்கள் இவரை நாயகராகப் போற்றினர். நம் தமிழை நேசிக்கும் நல்ல மனிதர்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: பாதுகாக்க என அனைத்தும் செய்ய உதவும் தளம்., பிரிக்க, PDF கோப்புகளை ஆன்லைன் மூலம் சேர்க்க.






1.
Krishnan Karuppannan | 7:57 AM இல் மார்ச் 4, 2012
It is very useful for everyone.Knowledge is power.
2.
ஸிராஜ் | 5:34 மாலை இல் மார்ச் 5, 2012
thanx for sharing this post