வீடு கட்ட பிளான் உருவாக்கி கொடுக்கும் பயனுள்ள இணையதளம்.
பெப்ரவரி 9, 2012 at 4:05 AM மறுமொழியவும்
புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் தங்களுக்கென்று பலவிதமான ஆசைகள் இருக்கும் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா என்று பலவித எண்ணங்கள் தோன்றும் நமக்கு தோன்றும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து வீடுகட்ட பிளான் உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
வீட்டை கட்டிப்பார் திருமணம் நடத்திப் பார் என்பது பழமொழி ஆனால் இன்று இந்த இரண்டுமே பணம் மட்டும் இருந்தால் எளிதாக செய்துவிடலாம், அந்த வகையில் இன்று புதிதாக வீடு கட்ட விரும்புபவர்களுக்கு வீட்டுக்கான பிளான் ( வடிவமைப்பு ) உருவாக்கி கொடுக்க ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.smallblueprinter.com/sbp.html
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Design , Isometric View , 3D Walkthrough மற்றும் Print என்ற மெனுக்களில் முதலில் Design மெனு திறக்கும் இதில் Blank Plan அல்லது Sample Plan என்பதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் அடுத்து வலது பக்கம் இருக்கும் Wall டூலை பயன்படுத்தி எங்கு சுவர் வேண்டுமோ அங்கு கொண்டுவரலாம், அதே போல் எங்கு கதவு வேண்டும் , எங்கு சன்னல் வைக்க வேண்டும் என அனைத்தையுமே நாம் இதைச் சொடுக்கி எளிதாக வைத்துக் கொள்ளலாம்.Transform என்ற டூலை பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் நகர்த்தலாம் வடிவத்தை மாற்றி அமைக்கலாம். இதே போல் Isometric View மற்றும் 3D Walkthrough போன்றவற்றில் நமக்கு பிடித்த வண்ணத்தை தேர்ந்தெடுக்கலாம் எல்லாம் தேர்ந்தெடுத்த பின் Print என்ற பொத்தானை சொடுக்கி Print செய்யலாம். ஆரம்ப நிலையில் நாமே நம் விருப்பபடி எளிதாக பிளான் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வீடு முதல் அலுவலகம் வரை என்னவெல்லம் தேவையான பொருட்கள் என்பதை சொல்லும் பயனுள்ள தளம்.
வீடு / அலுவலகத்தை அழகுபடுத்த உதவும் 100 பிராஜெக்ட் முழுமையான தகவல்களுடன் பயனுள்ள தளம்.
நம் பிளாக்-ல் ரீடுவிட் பொத்தான் வைத்து அதிக வாசகர்களை பெறலாம்.
அடோப் பிளாஷ் முப்பரிமானத்தில்(3D) மிரட்ட வருகிறது.
தினம் ஒரு புத்தகம் நாரா நாச்சியப்பன் அவர்கள் எழுதிய " பள்ளிக்கு சென்ற சிட்டுக்குருவிகள் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை நம் உடலை சரி செய்து கொள்ளும் ஆற்றல் நம் உடலுக்கு உண்டு.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு Zero point energy பூச்சியநிலைச்சத்தி zero suppressiontech சுழி அமுக்கம் zeros (எண்) பூச்சியம் , சைபர் zest விருப்பம் , ஆசை zigzag கோணல் மாணலான பாதை zigzag வளைந்து வளைந்து செல்லும் வழி zillion எண்ணளவற்ற zincchem துத்தநாகம் zinniabot நிறவாதவப்பூ, நிறவாதவன் zip code தபால் இலக்கம்
இன்று பிப்ரவரி 9

பெயர் : ஜே.எம்.கோட்ஸி, பிறந்த தேதி : பிப்ரவரி 9, 1940 இவர் ஒரு தென்னாபிரிக்க எழுத்தாளர் ஆவார். இவருக்கு 2003 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற நான்காவது கறுப்பின எழுத்தாளர். கோட்ஸி இரு முறை புக்கர் பரிசும் பெற்றுள்ளார்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: வீடு கட்ட பிளான் உருவாக்கி கொடுக்கும் பயனுள்ள இணையதளம்..





Subscribe to the comments via RSS Feed