தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒரு புதிதாக ஒரு சோசியல் நெட்வொர்க்.
பெப்ரவரி 6, 2012 at 10:01 AM 1 மறுமொழி
நம்மிடம் இருக்கும் தகவல்களை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இமெயில் மூலம் தெரியப்படுத்துவோம் அல்லது ஏதாவது சர்வரில் காப்பி செய்து அதற்கான இணைப்பை தெரியப்படுத்துவோம் கூகிள் டாக்ஸ் செய்து வரும் வேலையைப்போன்று தான் புதிதாக ஒரு சோசியல் நெட்வொர்க் தகவல்களை எளிதாக பகிர்ந்து கொள்ள உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
முக்கியமான தகவல்கள் அல்லது வாழ்த்துப் படங்கள் அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்த தகவல்கள் என அனைத்தையுமே நாம் இந்த புதிய சோசியல் நெட்வொர்க் மூலம் சேமித்து அனைவருக்கும் இணைப்பு கொடுக்கலாம், முக்கிய கோப்புகளை பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இணையதள முகவரி : http://buzzdata.com
இத்தளத்திற்கு சென்று நாம் Sign up என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக்கொண்டு உள் நுழையலாம். நம்மிடம் இருக்கும் தகவல்கள், படங்கள் மற்றுள்ள தகவல்களை Private ,Openly , Discover என்ற மூன்று விதங்களில் எப்படி வேண்டுமானாலும் சேமித்து அடுத்தவரும் பகிர்ந்து கொள்ளலாம், ஒவ்வொரு முறையும் இமெயிலில் குறிப்பிட்ட கோப்புகளை காப்பி செய்து அனுப்பும் நேரமும் இடமும் இங்கு தேவைப்படாது. ஒரே ஒரு முறை மட்டும் நம் தகவல்களை பதிவேற்றம் செய்தால் போதும் அதன் பின் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களிடம் நம் தகவல்களை எளிதாக கொண்டு சேர்க்கலாம். தகவல்களை அனைவரிடமும் எளிமையாக பகிர்ந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்த Buzz Data தளம் பயனுள்ளதாக இருக்கும். இதைப்பற்றிய ஒரு சிறப்பு அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
முக அலங்காரம் மற்றும் ஒப்பனை செய்வதற்கென்றே தனி சோசியல் நெட்வொர்க்
சோசியல் மீடியாயை வைத்து போட்டி : எந்த நிறுவனம் பிரபலம் என்று அறியலாம்.
மொபைல் மூலம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க உதவும் சோசியல் நெட்வொர்க்
30 சோசியல் நெட்வொர்க்கு தகுந்தபடி நம் புகைப்படத்தை வடிவமைக்கலாம்.
தினம் ஒரு புத்தகம் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் எழுதிய " கம்பன் சுய சரிதம் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை மனம் அசையாதிருந்தால் எளிதாக ஞானத்தை அடையலாம்.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு to take place நேரிடு , நிகழ் to take ransom கப்பம் எடு to take ransom வாங்கு to take rest ஓய்வெடு , இளைப்பாறு to take the lead முந்துறு to take the responsibility பொறுப்பு ஏற்றுக்கொள் to take the upper hand தம்கையை ஓங்கச் செய் to take time கால அவகாசம் பெறு to take time காலம் எடு to talk கதை , பேசு , வாசி , அலம்பு இன்று பிப்ரவரி 6

பெயர் : மோதிலால் நேரு, மறைந்த தேதி : பிப்ரவரி 6, 1861 நேர்மையான வக்கீலாக பணியாற்றியவர். இரண்டுமுறை காங்கிரஸ் தலைவராக பதவியேற்றுள்ளார். செல்வந்தராக இருந்தாலும் எளிமையை பின்பற்றினார்.சுதந்திரத்துக்கு முன்பே மறைந்து விட்ட இவர் இன்னும் பலரது உள்ளங்களில் வாழ்ந்து வருகிறார். உங்கள் தேசப்பற்றுக்கு நன்றி.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒரு புதிதாக ஒரு சோசியல் நெட்வொர்க்..





1.
ramasami | 10:48 AM இல் பெப்ரவரி 8, 2012
வின்மணி தளத்தைப் பார்க்காமல் என்தளத்திற்கும், மின்னஞ்சலுக்கும் கூடச் செல்வதில்லை என்று முடிவெடுத்து விட்டேன். ஏனெனில் புதிய புதிய தகவல்களைத் தினமும் கணினிக்குக் கொண்டு வந்து சேர்த்து விடுகிறார் வின்மணியார்.. : http://buzzdata.com என்ற இணையதள முகவரியை இன்று தேடித் தந்துள்ளார். வாழ்த்துகள்.