நாம் வெற்றி பெற உற்சாகப்படுத்தும் (Motivate) பயனுள்ள தளம்.
ஜனவரி 22, 2012 at 1:37 மாலை 2 பின்னூட்டங்கள்
பல நேரங்களில் நமக்கு ஐடியா மற்றும் அதை செய்வதற்கான வசதி இருந்த போதும் தேவையில்லாத சோம்பேறி தனம் வந்து நம் வெற்றியை தூரமாக அழைத்து செல்லும் இப்படி இருக்கும் நம்மவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வெற்றி அடைய உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
செய்யும் ஒரு செயலிலே முழுமையாக இருக்க முடியாமல் அங்கொன்றும் இங்கொன்றும் வைத்து எதிலும் முழுமையாக சாதிக்காமல் இருக்கும் நமக்கு வெற்றிக்கான மந்திரமான “ உற்சாகம் “ என்பதை தொடர்ந்து அளித்து நம்மை வெற்றி அடைய செய்கிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://lifekraze.com
இத்தளத்திற்கு சென்று நாம் Sign in என்ற பொத்தானை சொடுக்கு புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையலாம். சோம்பேறியாக இருப்பவரை எப்படி எல்லாம் உற்சாகப்படுத்தலாம் என்பதை அறிவுரை சொல்லாமல் மற்றவரை முன் உதாரணமாக காட்டி நம்மை சுறுசுறுப்படைய செய்கிறது.ஸ்மார்ட் ஆக இருப்பவர்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்கின்றனர் என்பதை வெறுமனே சொல்வதோடு நிறுத்தாமல் அவர்களுக்கு மதிப்பெண் அளித்து ரிவாடும் கொடுத்து மேலும் மேலும் உற்சாகப்படுத்துகிறது, நம் டிவிட்டரை போல ஒருவர் எனக்கு பிஸினர் எப்படி செய்தாலும் சரியாக வரவில்லை என்று சொல்கிறார் என்றால் அவருக்கு ஐடியாக்களை அள்ளி கொடுக்க பெரிய தலைகளும் உள்ளனர், சில நாட்களில் நாம் முழுமையாகப் பயன்படுத்தினால் நம்மிடம் இருக்கும் சோம்பேறித்தனம் முழுமையாக நீங்கிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
கோப்பு உருவாக்கிய தேதி, பயன்படுத்திய நேரம் போன்றவற்றை எளிதாக மாற்றலாம்.
குறுஞ்செய்தி (SMS ) மேலும் சுருக்கி அனுப்ப லிங்கோ புதுமையான வழி
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் கேள்விக்கும் பதில் ஒரே இடத்தில்
240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம்
தினம் ஒரு புத்தகம் நாரா நாச்சியப்பன் அவர்கள் எழுதிய தெய்வ அரசு கண்ட இளவரசன் (புத்த பெருமான் வரலாறு) புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை பணத்திற்கு பிரதானம் கொடுப்பவர்கள் பெரிய மனிதர்கள் என்று சொல்ல தகுதியற்றவர்கள்.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு to regulate சரி செய் to regulate ஒழுங்குபடுத்து to reiterate மீண்டும் சொல்லுதல் to reject வெளியே வீசு,தள்ளுபடிசெய் to rejoice களி to rejoice மகிழ் to relearn மீளப் பயிற்சி அளி to relearn வேறு ஒரு துறையைக் கற்றுக் கொள் to release விடு to release கைவிடு
இன்று ஜனவரி 22

பெயர் : விக்டோரியா , மறைந்த தேதி : ஜனவரி 22, 1901 இந்தியாவின் முதல் பேரரசியாக 1876 மே 1 ஆம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இது இதுவரை பிரிட்டனை ஆண்ட எவரது ஆட்சிக் காலத்தையும் விட அதிகம் ஆகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .





1.
தனபாலன் | 6:14 மாலை இல் ஜனவரி 26, 2012
பயனுள்ள தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார் !
2.
Life Direction Network | 10:40 AM இல் பெப்ரவரி 1, 2012
யாருக்கும் அறிவுரை சொல்லாமல் மற்றவரை முன் உதாரணம் காட்டி நம்மை சுறுசுறுப்படைய செய்யும் Life Kraze தளத்தை Life Direction தளம் வரவேர்கிறது பகிர்வுக்கு நன்றி.