கூகிள் பிளஸ்-ல் இருந்து டிவிட் செய்ய உதவும் பயனுள்ள நீட்சி.
நவம்பர் 3, 2011 at 12:55 மாலை மறுமொழியவும்
ஒவ்வொரு முறையும் நாம் கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டரில் தனித்தனியாகதான் செய்திகளை பதிவு செய்கிறோம், ஆனால் இனி கூகிள் பிளஸ் பயனாளர்கள் கூகிள் பிளஸ்-ல் இருந்தே எளிதாக டிவிட் செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு நீட்சி உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
நண்பர்கள் வட்டத்தை சேர்ப்பதிலும் மதிப்பு கூட்டு சேவைகள் கொடுப்பதிலும் கூகிள் பிளஸ் தற்போது பல புதுமைகளை செய்து வருகிறது அந்த வகையில் இனி கூகிள் பிளஸ்-ல் இருந்தே எளிதாக டிவிட் செய்ய ஒரு நீட்சி வந்துள்ளது.
இணையதள முகவரி : http://crossrider.com/install/529-google-tweet
இத்தளத்திற்கு சென்று Get Google + Tweet என்ற பொத்தானை சொடுக்கி நம் உலாவியில் எளிதாக நிறுவலாம். இனி நம் உலாவியில் கூகிள் பிளஸ் திறந்தால் முகப்பில் டிவிட்டர் ஐகான் இருக்கும் இதை சொடுக்கி நாம் எளிதாக டிவிட் செய்யலாம், ஒரே நேரத்தில் டிவிட் செய்யப்படும் நம் செய்திகள் டிவிட்டர் மற்ற்றும் கூகிள் பிளஸ்-லும் tweet செய்யப்பட்டிருக்கும்.இந்த நீட்சியை நிறுவதன் மூலம் கூகிள் பிளஸ் பயனாளர்கள் இனி எளிதாக டிவிட் செய்யலாம், இண்டெர்நெட் எக்ஸ்புளரோரர், மொசில்லா பயர்பாக்ஸ் மற்றும் கூகிள் குரோம் உலாவிகளுக்கும் துணைபுரிகிறது.
டிவிட்டரில் ஆடியோ டிவீட் செய்ய நமக்கு உதவும் பயனுள்ள தளம்.
நம் டிவிட்டர் செய்திகள் அனைத்தையும் சேமிக்க (Backup) செய்ய ஒரு பயனுள்ள தளம்.
நாம் வரையும் படங்களை ஆன்லைன் மூலம் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ள.
வின்மணி சிந்தனை அன்பில்லாத மனிதர்களிடம் இறைவன் இருப்பதில்லை, அன்புள்ளவர்கள் இறைவனை தேட வேண்டியதில்லை.
இன்று நவம்பர் 3

பெயர் : அவுரங்கசீப் , பிறந்ததேதி : நவம்பர் 3 , 1618 அவுரங்கசீப் முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர். ஷாஜகான் மற்றும் மும்தாஜின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ஆலம்கீர் என அழைக்கப்பட்டார்.இவரது ஆட்சி காலம் கி.பி. 1658-லிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: கூகிள் பிளஸ்-ல் இருந்து டிவிட் செய்ய உதவும் பயனுள்ள நீட்சி..





Subscribe to the comments via RSS Feed