உலகை திரும்பி பார்க்க வைக்கும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 (Windows 8 ) இலவசமாக தரவிரக்கலாம்.
செப்டம்பர் 14, 2011 at 10:39 AM 8 பின்னூட்டங்கள்
கணினி உலகை பொருத்த வரை ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் என்றுமே சூப்பர் ஸ்டார் மைக்ரோசாப்ட் தான், பயன்படுத்துவதில் எளிமை, புதுமை என அனைத்து சேவைகளையும் கொடுத்து உலக அளவில் பல வாசகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த மைக்ரோசாப்ட்-ன் அடுத்த வெளியீடான விண்டோஸ் 8 ( Windows 8 )இலவசமாக தறவிரக்கலாம்.

DOS வெர்சனில் தொடங்கி விண்டோஸ் 3.1 முதல் விண்டோஸ் 7 வரை தன் கால் தடங்களை அழுத்தமாக பதித்து வரும் மைக்ரோசாப்ட் நிறுனத்தின் அடுத்த இமாலய படைப்பு தான் விண்டோஸ் 8. எத்தனை ஆப்ரேட்டிங் சிஸடம் வந்தாலும் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு இருக்கும் மதிப்பு மரியாதை தனி தான், ஒவ்வொரு பதிப்பிலும் கூடுதல் சேவையை அளித்து வரும் மைக்ரோசாப்ட்-ன் அடுத்த வெளியீடான விண்டோஸ் – 8 என்னவெல்லாம் சேவையை கொடுக்க இருக்கிறது என்று இனி பார்க்கலாம்.
விண்டோஸ் 7-ல் அளித்து வரும் சேவையுடன் ஒப்பிடுவதில் விண்டோஸ் 8 மின்சார சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சுட்டிகளின் உள்ளீடு அதாவது (multi-touch and mouse/key board) செய்யலாம். Windows 8 works with both x86 and SoC architecture , மடிக்கணிகள் மட்டுமல்லாது Tablet pc களிலும் பயன்படுத்தலாம், அதிவேகமான Booting time , இன்னும் பல புதுமையான சேவைகளை கொடுக்கிறது விண்டோஸ் எக்ஸ்பி மக்களிடத்தில் எப்படி இன்னும் பிரபலமாக இருக்கிறதோ அதே போல் விண்டோஸ் 8 -ம் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் என்பது மைக்ரோசாப்ட்-ன் குரல். விண்டோஸ் -8 ன் Developer பதிப்பை இங்கு கொடுத்திருக்கும் சுட்டியை சொடுக்கி இலவசமாக தறவிரக்கலாம்.
தறவிரக்க முகவரி : Download windows 8
மைக்ரோசாப்ட் தல நம்ம பில்கேட்ஸ்-க்கு விண்டோஸ் 8 வெற்றி பெற வாழ்த்தையும் அன்பையும் தெரிவிப்போம்.
விண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.
விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7-ல் ஏற்படும் 50 பிரச்சினைகளுக்கு தீர்வு
விண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி
விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை உள்ள அனைத்து கணினியின் வேகத்தையும் அதிகப்படுத்தலாம்
வின்மணி சிந்தனை நம்பிக்கையும் முழுமையான ஈடுபாடும் தான் ஒரு மனிதை வெற்றியின் பக்கம் கொண்டு செல்கிறது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.சாகித்ய அகாடமி விருது எந்தத்துறையில் இருப்பவருக்கு வழங்கப்படுகிறது ? 2.இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு தொடங்கபப்ட்டது ? 3.சங்கீத நாடக அகாடமி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ? 4.இந்திய தேசிய இராணுவம் நிக்கோபார் தீவுக்கு சூட்டிய பெயர் என்ன ? 5.இந்திய சுதந்திரம் அடைந்த போது இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்தவர் யார் ? 6.தேசிய நாடகப்பள்ளி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ? 7.இந்திய தேசிய இராணுவம் அந்தமான் தீவுக்கு சூட்டிய பெயர் என்ன ? 8.National Archives of India எங்கு எப்போது தொடங்கப்பட்டது? 9.இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டை தலைமையேற்று நடத்திய முதல் இந்தியப் பெண் தலைவர் யார் ? 10.இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியவர் யார் ? பதில்கள்: 1.இலக்கியத் துறை, 2.1885, 3.1953, 4.சுவராஜ், 5.ஜெ.பி.கிருபளானி,6.1959,7.சஹீத், 8.1981-நியூடெல்லி, 9.சரோஜினி நாயுடு,10.நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்.
இன்று செப்டம்பர் 14

பெயர் : நாஸ், பிறந்த தேதி : செப்டம்பர் 14, 1973 புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைக் கலைஞர். 1994இல் இவரின் முதலாம் ஆல்பம் இல்மாட்டிக் (Illmatic) வெளிவந்தது. இன்று வரை பல ராப் இசை நிபுணர்களும் எழுத்தாளர்களும் இந்த ஆல்பம் மிகவும் உயர்ந்த ஆல்பம்களில் ஒன்றாகும் என்று கூறியுள்ளனர். 1996இல் இவரின் இரண்டாம் ஆல்பம் இட் வாஸ் ரிட்டென் வெளிவந்து இவர் புகழுக்கு வந்தார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், விண்டோஸ் உதவிகள். Tags: உலகை திரும்பி பார்க்க வைக்கும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 (Windows 8 ) இலவசமாக தரவிர, windows 8 download.





1.
Sivakumar | 12:04 மாலை இல் செப்டம்பர் 28, 2011
Once installed, how long this version will be active?
2.
winmani | 4:26 மாலை இல் செப்டம்பர் 28, 2011
@ Sivakumar
1 வருடம் வரை எந்தப்பிரச்சினையும் கிடையாது !
நன்றி
3.
Jafar | 2:19 மாலை இல் செப்டம்பர் 28, 2011
விண்டோஸ் 8 தொடுதிரை வழியாக செயல்படுகிறதா? அப்படியானால், இப்போது கையிலுள்ள கண்னியில் இதனை உபயோகிக்க முடியாதா?
4.
winmani | 4:25 மாலை இல் செப்டம்பர் 28, 2011
@ Jafar
.
தொடுதிரையிலும் பயன்படுத்தலாம் மல்டி டச் என்பதற்காக தெரியப்படுத்தினோம், உங்கள்
கணினியிலும் உயபோகிக்கலாம்
மிக்க நன்றி
5.
மணி | 7:19 மாலை இல் செப்டம்பர் 28, 2011
உங்களது தரவிறக்க சுட்டி 64 பிட்டுக்கானது, 32 பிட் இயங்குதளதிலேயும் சில software இயங்க மறுக்கிறது.
6.
winmani | 9:21 மாலை இல் செப்டம்பர் 28, 2011
@ மணி
அய்யா பயன்படுத்தி பார்த்துவிட்டு சொல்லலாமே !
நன்றி
7.
Darlene | 1:07 AM இல் அக்டோபர் 1, 2011
be fond of your things all over it உலகை திரும்பி பார்க்க வைக்கும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 (Windows 8 ) இலவசமாக தரவிரக்கலாம். « வின்மணி –
8.
winmani | 2:08 AM இல் அக்டோபர் 6, 2011
@ Darlene
மிக்க நன்றி