நம் தளத்திற்கு SEO மார்க் என்ன என்பதை உடனடியாக ஆன்லைன் மூலம் கண்டுபிடிக்கலாம்.
செப்டம்பர் 11, 2011 at 9:40 AM 7 பின்னூட்டங்கள்
ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த வகையில் அல்லது பலரிடம் கேட்டு தெரிந்து கொண்டு நம் தளத்திற்கு உருவாக்கும் SEO என்று சொல்லக்கூட Search Engine Optimization சிறப்பாக செயல்படுகிறதா என்பதை உங்கள் இணையதளத்தின் SEO மதிப்பை வைத்து ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்வதற்கு உதவியாக ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
ஆன்லைன் மூலம் நாம் பல தளங்களை பார்க்கிறோம் SEO -ல் நாங்கள் கெட்டிக்காரர்கள் என்று சொல்லும் அனைத்து தளங்களையும் நாம் ஆன்லைன் மூலம் SEO Explorer மூலம் சோதித்துப்பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.seopageexplorer.com
இத்தளத்திற்கு சென்று Enter Url என்று கொடுத்திருக்கும் கட்டத்திற்குள் எந்த வலைப்பூவை சோதித்துப்பார்க்க வேண்டுமோ அதன் தள முகவரியை கொடுத்து Go என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு Overview என்ற Tab-ல் நம் தளத்தின் ஸ்கோர் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.Title and Meta மற்றும் Kewords என்னவெல்லாம் கொடுத்திருக்கிறோம் என்பதைப்பற்றியும் தெரிந்து கொள்ளலாம். எந்தவிதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை.துல்லியமான SEO முடிவுகளை உடனுக்கூடன் தெரிந்து கொள்ளலாம். புதுமை விரும்பிகளுக்கும் SEO பயன்படுத்துபவர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாகவும் தங்கள் தளத்தின் SEO எப்படி மேம்படுத்தலாம் என்பதைப்பற்றியும் ஐடியா கிடைத்திருக்கும்.
இலத்தீன் மொழியில் இணையதளமுகவரி தொடக்கம் மெகா சாதனை
நமக்கு பிடித்த இணையதளங்களை எளிதாக ஆன்லைன் மூலம் சேமிக்கலாம்
இணைய உலகத்தில் கிடைக்கும் அனைத்து வீடியோக்களையும் சேமிக்கலாம்
ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்.
வின்மணி சிந்தனை ஆணவம் இல்லாத மனிதன் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது வெற்றியாகவே முடியும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவின் சைக்கிள் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது ? 2.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அலுவலக மொழி எது ? 3.இந்தியாவில் மருந்து ஆராய்ச்சி மையம் எங்குள்ளது ? 4.இந்தியாவின் பொற்கோவில் நகரம் எது ? 5.இந்திய சுதேச அரசுகளில் மிகப்பெரியதான ஐதராபாத் எப்போது இந்தியாவுடன் இணைந்தது ? 6.இந்தியாவின் குடியரசு தினத்தை எந்த நாடு சுதந்திர தினமாக கொண்டாடுகிறது ? 7.அரபிக்கடலின் அரசி என அழைக்கப்படுவது எது ? 8.இந்தியாவின் 27-வது மாநிலமாக உருவாக்கப்பட்ட மாநிலம் எது ? 9.இந்தியாவின் சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15 -ஐ தனது சுதந்திர தினமாக கொண்டாடும் நாடு எது ? 10.இந்தியாவின் 28-வது மாநிலமாக உருவாக்கப்பட்ட மாநிலம் எது? பதில்கள்: 1.லூதியானா ( பஞ்சாப் ), 2.உருது, 3.லக்னோ, 4.அமிர்தசரஸ், 5.1948, 6.ஆஸ்திரேலியா, 7.கொச்சி, 8.உத்தரகாண்ட், 9.தென்கொரியா, 10.ஜார்கண்ட்.
இன்று செப்டம்பர் 11

பெயர் : சுப்பிரமணிய பாரதி, மறைந்த தேதி : செப்டம்பர் 11, 1921 பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரின் எழுச்சி பாடல்கள் என்றும் அழியாத இடத்தை பிடித்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நம் தளத்திற்கு SEO மார்க் என்ன என்பதை உடனடியாக ஆன்லைன் மூலம் கண்டுபிடிக்கல.





1.
MHM NIMZATH | 11:21 AM இல் செப்டம்பர் 17, 2011
Super info. Thanks
2.
winmani | 3:29 மாலை இல் செப்டம்பர் 18, 2011
@ MHM NIMZATH
மிக்க நன்றி
3.
stalinwesley | 3:30 மாலை இல் செப்டம்பர் 17, 2011
தேங்க்ஸ் சார்
4.
thangaraj | 9:46 மாலை இல் செப்டம்பர் 17, 2011
thanks for this post WINMANI, very use full.
5.
Amirthalingam Nagarajan | 11:32 AM இல் செப்டம்பர் 28, 2011
can you give some more details about SEO.?
what is this Score means.?
6.
winmani | 4:27 மாலை இல் செப்டம்பர் 28, 2011
@ Amirthalingam Nagarajan
SEO -பற்றி ஏற்கனவே ஒரு பதிவு களஞ்சியத்தில் இருக்கிறது பாருங்கள்.
நன்றி.
7.
Thomas King | 5:06 மாலை இல் நவம்பர் 16, 2011
Thanks