டிவிட்டரில் ஆடியோ டிவீட் செய்ய நமக்கு உதவும் பயனுள்ள தளம்.
செப்டம்பர் 4, 2011 at 4:30 AM 2 பின்னூட்டங்கள்
உள்ளுர் பிரபலங்கள் முதல் உலக பிரபலங்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் டிவிட்டரில் இனி ஆடியோ டிவிட் செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
ஆன்லைன் மூலம் உடனுக்கூடன் கீச் கீச் என்று தகவல்களை நம் கூட்டனியில் உள்ள அனைவரிடமும் எளிதாக பகிர்ந்து கொள்ள உதவும் சோசியல் மீடியாவான டிவிட்டரில் ஆடியோ டிவிட் செய்ய ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.audiotweet.co.nr
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் என்ன ஆடியோ செய்தி சொல்ல வேண்டுமோ அதை தட்டச்சு செய்து கொள்ள வேண்டும் அடுத்து மொழி என்பதில் English என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். ( தமிழ் மொழி தற்போது இல்லை ) அடுத்து Go என்ற பொத்தானை சொடுக்கியவுடன் நமக்கு அதே திரையின் அடியில் ஒரு bit.ly Short Url முகவரி கிடைக்கும் இதை அப்படியே நம் டிவிட்டரில் காப்பி செய்து அனுப்பலாம்,அல்லது நேரடியாக Share on என்பதில் டிவிட்டர் அல்லது பேஸ்புக் ஐகானை சொடுக்கியும் பகிர்ந்து கொள்ளலாம்.நாம் உருவாக்கப்பட்ட சுருக்கப்பட்ட முகவரியை சொடுக்கினால் நாம் தட்டச்சு செய்த செய்தி ஆடியோ கோப்பில் கேட்கலாம். 100 வார்த்தைகளுக்கு மிகாமல் நாம் கொடுக்க வேண்டிய ஆடியோ கோப்பின் செய்தி இருக்க வேண்டும். டிவிட்டர் பயனாளர்களுக்கும் புதுமை விரும்பிகளுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
நம் டிவிட்டர் செய்திகள் அனைத்தையும் சேமிக்க (Backup) செய்ய ஒரு பயனுள்ள தளம்.
நாம் வரையும் படங்களை ஆன்லைன் மூலம் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ள.
ஒரே எண்ணம் உள்ள மக்களை டிவிட்டரில் தேட புதுமையான வழி
வின்மணி சிந்தனை திறமையான விருது பெறும் போது நமக்கு பொறுப்பு மற்றும் கடமை மேலும் மேலும் அதிகமாகிறது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.மோகினியாட்டம் எங்கு முதன்மையான நடனமாகக் கருதப்படுகிறது ? 2.கேரளா உயர்நீதிமன்றம் எங்குள்ளது ? 3.இந்திய தேசியக்கொடி எவ்வாறு அழைக்கப்படுகிறது ? 4.இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்த முதல் இந்திய பெண் தலைவர் யார் ? 5.கதகளி எங்கு முதன்மையான நடனமாகக் கருதப்படுகிறது ? 6.பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி வெற்றி பெற்ற தொகுதியின் பெயர் என்ன ? 7.குச்சிப்புடி எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது ? 8.இந்திய தேசியக்கொடியின் நீள அகல விகிதாச்சாரம் என்ன ? 9.பரதநாட்டியம் எங்கு முதன்மையான நடனமாகக் கருதப்படுகிறது? 10.இந்தியாவில் உள்ளாட்சி தேர்தல்களை எந்த அமைப்பு நடத்துகிறது ? பதில்கள்: 1.கேரளா, 2.எர்ணாகுளம், 3.மூவர்ணக்கொடி, 4.திருமதி சரோஜினி நாயுடு, 5.கேரளா, 6.அமேதி, 7.ஆந்திரப்பிரதேசம், 8.3:2, 9.தமிழ்நாடு,10.மாநில தேர்தல் ஆணையம்.
இன்று செப்டம்பர் 4

பெயர் : இசுடீவ் இர்வின், மறைந்ததேதி : செப்டம்பர் 4, 2006 ஓர் ஆஸ்திரேலிய இயற்கை ஆர்வலரும், வனவிலங்கு பராமரிப்பு விற்பன்னரும், புகழ் பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி அமைப்பாளரும் ஆவார். முதலை வேட்டைக்காரர் என அழைக்கப்படும் இர்வின், தொலைக்காட்சியில் முதலையுடன் துணிவாக விளையாடி உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: டிவிட்டரில் ஆடியோ டிவீட் செய்ய நமக்கு உதவும் பயனுள்ள தளம்..





1.
sheikbasha | 4:50 AM இல் செப்டம்பர் 4, 2011
GOOD POST
2.
winmani | 5:04 AM இல் செப்டம்பர் 4, 2011
@ sheikbasha
மிக்க நன்றி