ஆன்லைன் -ல் புகைப்படங்களை வெட்ட , அளவுகளை மாற்ற உதவும் அசத்தலான இணையதளம்.
ஜூன் 24, 2011 at 12:01 மாலை 2 பின்னூட்டங்கள்
புகைப்படத்தில் தேவையான இடத்தைத் தவிர மற்ற இடங்களை நீக்கி விடலாம் என்றால் குறைந்தபட்சம் இதற்காக நாம் பெயிண்ட் போன்ற மென்பொருட்களைத் தான் தேடி செல்வோம் ஆனால் இனி ஆன்லைன் மூலம் நம் புகைப்படங்களின் அளவை அதிகரிக்க,சுருக்க மற்றும் தேவையானவற்ற வெட்டி எடுக்க ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
புகைப்படங்களில் தேவையான பகுதியை நொடியில் வெட்டி எடுக்கலாம் எந்த மென்பொருளும் தேவையில்ல்லை நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :http://imagesplitter.net
இத்தளத்திற்கு சென்று Choose file என்ற பொத்தானை சொடுக்கி நாம் மாற்ற விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Upload என்ற பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் நமக்கு Convert , Split ,Crop என்ற மூன்று மெனு தெரியவரும் இதிலிருந்து மாற்ற விரும் Width மற்றும் Height கொடுத்து Convert image என்பதை சொடுக்கினால் போது உடனடியாக நாம் கொடுத்த அளவுகளில் படம் மாற்றப்பட்டு தறவிரக்கம் ஆகிவிடும்.Crop என்பதை சொடுக்கி நாம் தறவேற்றிய படத்தில் எந்த பகுதி வேண்டுமோ அதை எளிதாக தேர்ந்தெடுத்து Crop image என்பதை சொடுக்கி மாற்றலாம், எந்த விதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை எளிதாக அதுவும் சில நிமிடங்களில் , புகைப்படத்தின் அளவை அதிகரிக்க மற்றும் சுருக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
ஆன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்.
மைக்ரோசாப்ட்-ம் நாசாவும் இணைந்து எடுத்திருக்கும் செவ்வாயின் துல்லியமான படம்
நாசா வெளியீட்டுள்ள சூரியனின் பிரேத்யேகமான படம் மற்றும் வீடியோக்கள்
ஒரே வரைபலகையில் பல நாடுகளில் உள்ள அனைவரும் நேரடியாக படம் வரையலாம்.
வின்மணி சிந்தனை நன்றி மறந்தவர்களிடம் பழகுவதை விட , நன்றியுள்ள நாயிடம் பழகுவதே மேல்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்து நாளிதழைத் தோற்றுவித்தவர் யார் ? 2.மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது ? 3.சென்னையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற வருடம் ? 4.சுனாமி பேரலை ஏற்பட்ட ஆண்டு ? 5.மதுரைக்காஞ்சி என்ற நூலின் ஆசிரியர் யார் ? 6.பொய்யாக் குலக் கொடி என்று சிலப்பதிகாரம் கூறும் ஆறு எது? 7.மூதறிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் ? 8.பிளவக்கல் அணை அமைந்துள்ள மாவட்டம் எது ? 9.விவேகானந்தர் மண்டபம் உள்ள இடம் எது ? 10.தமிழ்நாட்டின் தலைநகர் எது ? பதில்கள்: 1.ஜி.சுப்பிரமணியர், 2. மதுரை, 3.1937, 4.2004, 5.மாங்குடி மருதனார், 6.வைகை, 7.இராஜாஜி, 8.விருதுநகர், 9.கன்னியாகுமரி,10.சென்னை.
இன்று ஜூன் 24பெயர் : கவிஞர் கண்ணதாசன் , பிறந்ததேதி : ஜூன் 24, 1921 புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப்பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர்.தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: அளவுகளை மாற்ற உதவும் அசத்தலான இணையதளம்., ஆன்லைன் -ல் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் பயனுள்ள தளம்..
பெயர் : 




1.
rathnavel natarajan | 3:13 மாலை இல் ஜூன் 24, 2011
நல்ல பதிவு.
2.
Gani | 6:35 மாலை இல் ஜூன் 30, 2011
Ungalathu thalam enakku migavum payan ullathaga ullathu nandri.
Enakku Pendrive il tholainthu pona filegalai thirumba pera ethavathu vali ullatha…