நம் உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முப்பரிமானத்தில் கூகிள் கொடுக்கும் புதிய சேவை.
பெப்ரவரி 16, 2011 at 1:47 மாலை 6 பின்னூட்டங்கள்
நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் எந்த இடத்தில்
இருக்கிறது இதன் பணி என்ன என்பதை நம் கூகிள் மருத்துவ
நிபுனர்களுடன் சேர்ந்து புதிதாக ஒன்றை ஆரம்பித்துள்ளது, நம்
உடலைப்பற்றிய அனைத்து தகவல்களையும் முப்பரிமானத்தில்
தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

திரைப்படத்தில் கிராபிக்ஸ்-ல் மட்டும் தான் மனித உடலை
பார்த்திருக்கிறோம் என்று எண்ணும் நமக்கு கூகிள் முப்பரிமானத்திலே
மனித உடலை காட்டி வியக்க வைக்கிறது. தலை முதல் கால் பாதம்
நம் உடலில் எந்த இடத்தைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ
அதை சொடுக்கினால் போதும் உடனடியாக நாம் தேர்ந்தெடுத்த
பகுதியின் தகவல்களை நமக்கு காட்டுகிறது. ஆய்வகத்தில் சென்று
தான் மனித உடலின் எலும்புக்கூடு -ஐ பார்த்திருக்கிறோம் என்றும்
சொல்லும் நமக்கு கூகிள் இணையம் மூலம் மனித உடலை
முப்பரிமானத்தில் காட்டுவது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
இணையதள முகவரி : http://bodybrowser.googlelabs.com/body.html
புகைப்பிடிப்பதால் நம் உடலில் ஏற்படும் பாதிப்பையும் சேர்த்து
காட்டினால் அதனால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து பல நபர்கள்
திருந்துவார்கள் என்பது நம் எண்ணம். மருத்துவ துறையில்
இருப்பவர்களுக்கும் மாணவர்களுக்கும் நம் அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை மனதின் வெளிப்பாடு தான் நம் முகம் , நல்ல எண்ணங்களையே எப்போதும் எண்ணுங்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.எந்த நதிக்கரையில் அதிக அளவில் சணல் தொழிற்சாலைகள் காணப்படுகிறது ? 2.சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தவர் யார் ? 3.இராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ? 4.அயனிப்பிணைப்பு எந்த வகையுடன் சார்ந்தது ? 5.ஈதல் பிணைப்பு எந்த வகையுடன் சார்ந்தது ? 6.Ca (pow)2+ என்பதன் விடை ? 7.Mg (pow)2+ என்பதன் விடை ? 8.3 மற்றும் 6 -ன் மீ.பொ.வ ? 9.மாவட்ட நீதிபதிகளை யார் நியமிக்கிறார் ? 10.புவியின் அச்சு எத்தனை டிகிரி சாய்ந்துள்ளது ? பதில்கள்: 1.ஹீக்ளி,2.வள்ளலார்,3.ஆறு ஆண்டுகள்,4.முனைவுப் பினைப்பு,5.NH3, BF3,6.2, 8, 8, 7. 2,8,8.3, 9.ஆளுநர், 10.23 1/2 டிகிரி.
இன்று பிப்ரவரி 16பெயர் : தாதாசாஹெப் பால்கே, மறைந்த தேதி : பிப்ரவரி 16, 1944 தாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே(Dhundiraj Govind Phalke)இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.தாதாசாஹெப் பால்கே நாசிக்கில் பிறந்தார்.1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார்.பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.அவருடைய நினைவாக தாதாசாஹெப் பால்கே விருது நிறுவப்பட்டது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நம் உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முப்பரிமானத்தில் கூகிள் கொடுக்கும் புதி.
பெயர் : 




1.
♠புதுவை சிவா♠ | 3:53 மாலை இல் மார்ச் 1, 2011
Thanks winmani
2.
winmani | 3:55 மாலை இல் மார்ச் 1, 2011
@ ♠புதுவை சிவா♠
மிக்க நன்றி
3.
www.sureshbabuvinitulaa.blogspot.com | 5:40 மாலை இல் மார்ச் 1, 2011
எங்கிருந்துதான் இதெல்லாம் பெறுகிறீர்களோ தெரியாது.ஆனால் நன்றாக கஷ்டப்பட்டு இதெல்லாம் எமக்காக தருகிறீர்கள் என்பது மட்டும் உண்மை.
4.
winmani | 6:06 மாலை இல் மார்ச் 1, 2011
@ sureshbabuvinitulaa
மிக்க நன்றி
5.
சுகுமாரன்.சீ.அ, | 8:59 மாலை இல் மார்ச் 1, 2011
உங்கள் பதிவுகள்அருமை. அனைத்தும் மிக பயனுள்ளது.தொடரவும்.
6.
winmani | 12:26 AM இல் மார்ச் 2, 2011
@ சுகுமாரன்.சீ.அ
மிக்க நன்றி