ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள் இனி எளிதாக எழுதலாம்

ஜூன் 17, 2010 at 8:50 மாலை 21 பின்னூட்டங்கள்

பள்ளி முதல் கல்லூரிவரை , அலுவலகங்கள் முதல் சொந்தபந்தங்கள்
வரை அனைவருக்கும் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான கடிதம் இனி
எளிதாக எழுதலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.

தமிழ் கடிதம் எழுத சொன்னால் உடனடியாக எழுதும் நம் தமிழ்
நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத கூறினால் சற்று யோசித்து
எழுதுகின்றனர்.அலுவலகத்துக்கோ, கல்லூரிக்கோ அல்லது அரசுக்கோ
கடிதம் எழுத கூறினால் அவர்கள் கூறும் முதல் வார்த்தை எங்களுக்கு
அனுபவம் இல்லை என்று, அனுபவம் இருந்தாலும் ஆங்கிலத்தில்
எழுதினால் இலக்கண பிழை ஏற்படுமோ என்ற பயம் உள்ளது.
ஆங்கிலத்தில் இனி எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம் நமக்கு
உதவுவதற்க்காகவே ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி :  http://www.readwritethink.org/files/resources/interactives/letter_generator/

இந்த தளத்திற்க்கு சென்று நம் பெயரைக் கொடுத்து எளிதாக எந்த
கடிதம் வேண்டுமானாலும் உருவாக்கலாம். சம்பிரதாய கடிதங்கள் எப்படி
இருக்கவேண்டுமோ அப்படி இருக்க நமக்கு ஒவ்வொரு படியையும்
கையைப்பிடித்து அழைத்துச்செல்கிறது. எந்த இடத்தில் எதற்க்காக என்ன
பெயர் கொடுக்க வேண்டும் என்றும் அலுவலகத்தில் சம்பள உயர்வு
வேண்டும் என்றால் எப்படி கடிதம் எழுத வேண்டும் யாருக்கு எந்த
பதிவியில் இருப்பவர்களுக்கு எழுதவேண்டும், எதை மையப்படுத்தி
நாம் கேட்க வேண்டுவதை ஆங்கிலத்தில் எப்படி எல்லாம் எளிய
முறையில் இலக்கண பிழை இல்லாமல் எழுதலாம் போன்ற அத்தனை
தகவல்களையும் கொண்டு நம்மை ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள்
எழுத உதவுகிறது. பார்ப்பதற்க்கு எளிதாக எந்த விளம்பரமும் இல்லாமல்
தெரிகிறது. கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்

வின்மணி சிந்தனை
அரை குறை படித்தவர்கள் எவ்வளவு தான் துதிபாடி உயர்ந்த
பதவிக்கு சென்றாலும் என்றாவது ஒரு நாள் உண்மை வெளியே
தெரியும் அப்போது பிறரால் ஒதுக்கப்படுவார்கள்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகிலேயே அதிக கோட்டைகள் உள்ள நாடு எது ?
2.தந்தி முறை கண்டுபிடிக்கப்பட்டு அனுப்பப்பட்ட முதல் வாசகம்
  என்ன ?  
3.FIAT கார் எப்போது வெளிவந்தது ? அதன் முழுப்பெயர் என்ன?
4.தென்கிழக்கு ஆசிய நாடுகளிலே மிகப்பெரிய உயரியல் பூங்கா
  எங்குள்ளது ?
5.புத்தர் பிறந்த இடம் எது ?
6.சமாதானத்தின் சின்னமாக வெண்புறாவை அமைத்துக்
  கொடுத்தவர் யார் ?
7.இந்தியாவில் டி.வி எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது ?
8.முதன் முதலாக தேசிய கீதம் எந்த நாட்டில் தோன்றியது ?
9.இந்தியாவில் முதன் முறையாக சிமெண்ட் எங்கு எப்போது
  தயாரிக்கப்பட்டது?
10.சென்னையில் முதல் திரையரங்கு எப்போது கட்டப்பட்டது ?
பதில்கள்:
1.செக்கோஸ்லோவாகியா, 2.What hath God Wrought
3.1899,Febrica Italiana Automobile Torino ,
4.அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சென்னை வண்டலூர்,
5.லும்பினி,6.ஒவியர் பிக்காஸோ,7.15-09-1959-ல்,8.ஜப்பான்,
9.சென்னை 1904 ஆம் ஆண்டு,10.1900ஆம் ஆண்டு
இன்று ஜூன் 17 
பெயர் : ஜான்சி ராணி லட்சுமிபாய் ,
மறைந்த தேதி : ஜூன் 17, 1858
வட இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி.
1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி
இந்தியாவில் பிரிட்டனின் ஆட்சிக்கு எதிராகக்
கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக்
கணிக்கப்படுகிறவர்.வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி
பெண்கள் படை உருவாக்கியபோது அதற்கு "ஜான்சிராணி
ரெஜிமெண்ட்" என்று பெயரிட்டார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், விண்டோஸ் உதவிகள். Tags: .

3D விளையாட்டை எந்த கண்ணாடியும் அணியாமல் பார்க்கலாம் புதிய அதிசயம் சோனி அறிமுகபடுத்த இருக்கும் அடுத்த தலைமுறைக்கான விளையாட்டு கருவி

21 மறுமொழிகள் Add your own

  • 1. P.Kandaswamy  |  11:14 மாலை இல் ஜூன் 17, 2010

    நல்ல தகவல்

    பதில்
    • 2. winmani  |  11:48 மாலை இல் ஜூன் 17, 2010

      @ P.Kandaswamy
      நன்றி

      பதில்
  • 3. mugil  |  1:06 AM இல் ஜூன் 18, 2010

    மிகவும் நன்றி

    பதில்
    • 4. winmani  |  9:29 AM இல் ஜூன் 18, 2010

      @ mugil
      மிக்க நன்றி

      பதில்
  • 5. ulavu.com  |  5:35 AM இல் ஜூன் 18, 2010

    மிக அருமை

    பதில்
    • 6. winmani  |  9:29 AM இல் ஜூன் 18, 2010

      @ ulavu.com
      மிக்க நன்றி

      பதில்
  • 7. geetha  |  6:00 AM இல் ஜூன் 18, 2010

    good and useful post

    பதில்
    • 8. winmani  |  9:30 AM இல் ஜூன் 18, 2010

      @ geetha
      மிக்க நன்றி

      பதில்
  • 9. puduvaisiva  |  6:25 AM இல் ஜூன் 18, 2010

    இந்த பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி வி்ன்மணி

    பதில்
    • 10. winmani  |  9:33 AM இல் ஜூன் 18, 2010

      @ puduvaisiva
      மிக்க நன்றி

      பதில்
  • 11. Ram  |  6:31 AM இல் ஜூன் 18, 2010

    useful information. I tried once immd. Thanks

    பதில்
    • 12. winmani  |  9:33 AM இல் ஜூன் 18, 2010

      @ Ram
      மிக்க நன்றி

      பதில்
  • 13. Thayalini  |  9:06 AM இல் ஜூன் 20, 2010

    Thankyou

    பதில்
  • 15. Thengai priyan  |  10:19 AM இல் ஜூன் 21, 2010

    very Informative Indeed. Keep going on

    பதில்
    • 16. winmani  |  7:09 மாலை இல் ஜூன் 21, 2010

      @ Thengai priyan
      நன்றி

      பதில்
  • 17. தமிழில் தகவல் தொழில் நுட்பம்  |  8:24 AM இல் ஜூன் 22, 2010

    நல்ல தகவல்..

    தொடரட்டும் உங்கள் சேவை..

    வாழ்த்துக்கள்

    பதில்
  • 19. sumaiye  |  6:17 மாலை இல் ஜூன் 26, 2010

    super super super

    பதில்
    • 20. winmani  |  6:35 மாலை இல் ஜூன் 27, 2010

      @ sumaiye
      மிக்க நன்றி

      பதில்
  • 21. Hanees  |  8:48 AM இல் December 22, 2011

    மிக்க நன்றி, இது அல்லாமல் letter format உள்ள இணைய தளங்கள் இருந்தால் இந்த ஈ மயிலுக்கு அனுப்பவும்.

    பதில்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 1989 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய இடுகைகள்

KANYAKUMARI HOTEL SIVAMURUGAN

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூன் 2010
தி செ பு வி வெ ஞா
« மே   ஜூலை »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

  • மைக்ரோசாப்ட் பிங் தேடுபொறி நடத்தும் Deal shopping பயனுள்ள தகவல். http://t.co/SQ0fhJuO 1 day ago

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...


Follow

Get every new post delivered to your Inbox.

Join 1989 other followers